நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறுவதில் இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டடு 75 ஆண்டுகள் கடந்த நினைவாக, அரசியலமைப்பு தின விவாதம் நடைபெற்றது.
எதிர்க்கட்சிகள் விவாதத்தின் மத்திய அரசின் மீது சரமாரிக் குற்றச்சாட்டுகளை வைத்த காரணமாக பதிலளித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,
"அம்பேத்கர், அம்பேத்கர் என்று முழக்கமிடுவது இப்போது ஃபேஷனாகிவிட்டது. இதற்குப் பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்.
அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் எடுத்துக்கொள்வதில் பாரதிய ஜனதா கட்சி மகிழ்ச்சியடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்வுகள் குறித்தும் காங்கிரஸ் கட்சி பேச வேண்டும்" எனத் தெரிவித்தார்.
சென்னையில் ரயில் மறியல்.. மாணவர்கள் ஆர்ப்பாட்டம்! அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம்
நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமித்ஷாவுக்கு எதிராக தமிழ்நாட்டில் போராட்டம் நடக்கிறது.
அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு சர்ச்சையான நிலையில், இது குறித்து அவர் விளக்கமளித்திருந்தார். "எனது பேச்சை முழுமையாகக் கேளுங்கள். அதன்பின்னர் விமர்சிக்கலாம். ஆனால் நான் என்ன சொல்ல வந்தேன் என்பதைக் கேட்காமலேயே என் மீது விமர்சனங்கள் அடுக்கப்படுகின்றன.
நாடாளுமன்றத்தில் நான் பேசியதை காங்கிரஸ் கட்சியினர் திரித்துக் கூறுகிறார்கள். அம்பேத்கரின் கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி தான். நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல. காங்கிரஸ் கட்சி தான் அவருக்கு எதிரானது.எனது பேச்சுக்கு ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
அவருக்கு அது தான் நிம்மதியளிக்கும் எனில், ராஜினாமா செய்யத் தயார். ஆனாலும் அடுத்த 15 ஆண்டுகளுக்கு அவர் எதிர்க்கட்சி வரிசையில் தான் அமர்ந்திருப்பார். காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் உரிய நடவடிக்கை மேற்காள்ளப்படும்" எனக் கூறினார்.
ஆனால் அமைச்சர் அமித்ஷாவின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத எதிர்க்கட்சிகள், அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தன. இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி அமைச்சர் அமித்ஷாவை பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் திமுக போராட்டத்தை அறிவித்த நிலையில் காலை 11.30 மணியளவில் போராட்டத்தை திமுக தொடங்கியது. விசிக பல்வேறு இடங்களில் போராட்டத்தை முன்னெடுத்தது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் விசிகவின் 100 பேர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். சென்னை மாநிலக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் உண்மையில் டாக்டர் அம்பேத்கர் அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்த போது, ஏன் ராஜினாமா செய்யப் போகிறேன் என்பது குறித்து அவையில் பேசுவதற்கு அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. என்ன பேசப் போகிறீர்கள் என்பதற்கான அறிக்கையை எழுத்து வடிவமாக எனக்கு அளியுங்கள் என அவரிடம் கேட்கப்பட்டது. நான் பேசும் விஷயத்தை எழுத்து வடிவமாகத் தர வேண்டும் என கோரிக்கை விடுப்பது தவறான ஆணையாகும். இதற்கு நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என கூறி அம்பேத்கர் பேசாமலேயே வெளிநடப்பு செய்தார் இதுதான் ராஜினாமா செய்த பிறகும் கூட அம்பேத்கருக்கு காங்கிரஸ் அளித்த அவமரியாதை என பொது வெளியில் பல தலைவர்கள் மத்தியில் விவாதமாக உள்ளது.
கருத்துகள்