பிரேமானந்தா அறக்கட்டளையின் சொத்துக்கள் சஃபேமா சட்டத்தின் நோட்டீஸ் செல்லும் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்
பிரேமானந்தா ஆஸ்ரம அறக்கட்டளையின் சொத்துக்கள்
சம்பந்தமான சஃபேமா சட்டத்தின் கீழ் வருமான வரித்துறையினர் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை தள்ளுபடி செய்தது இலங்கையில் ஆசிரமம் நடத்தி வந்த பிரேமானந்தா, அங்கு நடந்த உள்நாட்டு சண்டைக்குப் பின்னர் தமிழ்நாட்டில் அகதியாக 1984-ஆம் ஆண்டு வந்து,புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை பகுதியில் 65 ஏக்கர் பரப்பளவில் சீடர்கள் குழந்தைகள் சகிதமாக ஆசிரமம் அமைத்து செயல்பட்டார். 1994-ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டார். அதே ஆண்டில் வருமான வரித்துறை அலுவலர்கள் ஆசிரமத்தில் சோதனை நடத்தி பல முக்கியமான ஆவணங்களைக் கைப்பற்றினர்.
அவர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் ரூபாய். 76 லட்சத்துக்கு நிரந்தர வைப்பீடு வைத்துள்ளதாகவும், ரூபாய்.15 லட்சம் மதி்ப்பில் அந்நியச் செலாவணியாக கரன்சி நோட்டுகள் வைத்திருந்ததாகவும், ஹவாலா பரிவர்த்தனை உள்ளிட்ட ஏனைய முதலீடுகள் குறித்தும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார்.அதையடுத்து அந்நியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டத்தின் படி
அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டு விசாரி்த்த எழும்பூர் நீதிமன்றம் அவரை குற்றவாளி என அறிவித்தது. இதற்கிடையே புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றம் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குக்காக அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும்
விதித்த நிலையில் 2005-ஆம் ஆண்டு சஃபேமா எனும் கடத்தல் மற்றும் அந்நிய செலாவணி மோசடியாளர்களின் சொத்துக்களை முடக்கம் செய்ய வழிவகை செய்யும்The Smugglers and Foreign Exchange Manipulators (Forfeiture of Property) Act, 1976 (SAFEMA) சட்டத்தின் படி பிரேமானந்தா ஆஸ்ரம அறக்கட்டளையின் சொத்துக்களை முடக்கம் செய்வதற்காக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து பிரேமானந்தா ஆஸ்ரம அறக்கட்டளை சார்பில் 2007-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில் இடைக்கால உத்தரவு பிறப்பி்க்கப்பட்டு 17 ஆண்டுகளாக நிலுவையிலிருந்து
வந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது பிரேமானந்தா ஆஸ்ரம அறக்கட்டளை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார், “கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பிரேமானந்தா 2011-ஆம் ஆண்டு கடலூர் மத்திய சிறையில் இறந்துவிட்ட நிலையில் அவரது அறக்கட்டளைக்கு எதிராக சஃபேமா சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் விதிமுறைகளுக்குப் புறம்பாக உள்ளது.
நோட்டீஸ் சரியான நபர்களுக்கு அனுப்பப்படவில்லை” என வாதிட்டார். மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “இந்த வழக்கில் கடந்த 2006-ஆம் ஆண்டே அறக்கட்டளை தரப்பினர் நேரில் ஆஜராகி ஆட்சேபம் தெரிவித்து, விசாரணையிலும் பங்கெடுத்துள்ளனர்.
அதன்பிறகு ஓராண்டு கழித்து 2007-ஆம் ஆண்டு இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளனர். சஃபேமா சட்டத்தின் கீழ் இந்த நோட்டீஸ் சட்ட விதிகளைப் பின்பற்றி முறையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்றார்.
மத்திய அரசின் வாதத்தை ஏற்ற நீதிபதிகள், ஏற்கெனவே நடந்த விசாரணையில் அறக்கட்டளை தரப்பு பங்கெடுத்துள்ள நிலையில், இந்த நோட்டீஸை ரத்து செய்ய முடியாது. சட்ட ரீதியாகவே நீங்கள் எதிர்கொள்ள வேண்டும். எனவே இது தொடர்பான விசாரணையில் முறையாகப் பங்கெடுக்க வேண்டும், என அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு உத்தரவி்ட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மோகன் என்பவர் சட்டவிரோதமான பணத்தில் தங்கம் வாங்கியுள்ளார். பத்மா என்பவர் பல இடங்களில் சொத்துக்களை வாங்கியுள்ளார். அது குறித்து விசாரணை செய்ய வேண்டும். சட்ட விரோதமாக சொத்துக்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக கருதினால் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பலாம். சொத்துக்கள் அறக்கட்டளையின் கீழ் சேர்க்கப்பட்டிருப்பதால்,
தான் அறக்கட்டளைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. விளக்கம் கேட்பதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து, அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டும்" என தெரிவித்தார். சொத்துக்களை வாங்கியவர்கள் உயிரிழந்தாலும், அது எப்படி வாங்கப்பட்டது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். அது சட்டவிரோதமானதாக இருந்தால் நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை. சந்தேகமிருப்பதாக அமலாக்கத்துறை கருதினால், விளக்கம் கேட்பதில் என்ன தவறு உள்ளது? அறக்கட்டளையின் விளக்கத்தை ஏற்க உரிய காரணமில்லை" எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
கருத்துகள்