சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி தேர்தல் இன்று நடக்கிறது,
தேர்தல் அலுவலராக ஓய்வு பெற்ற நீதிபதி வீ.பாரதிதாசன் அறிவிப்பு !
சென்னை பத்திரிகையாளர் மன்றம் (சென்னை பிரஸ் கிளப்) 52 ஆண்டு கள் பழமையானது. இந்த மன் றத்துக்கு பல ஆண்டுகள் தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த நிலையில், பல குழுக்கள் செயல்பாட்டு வந்த நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலராக, சென்னை உயர் நீதி மன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி வீ.பாரதி தாசன் நவம்பர் மாதம் 18-ஆம்தேதி நியமிக்கப் பட்டார்.
அதைத் தொடர்ந்து, சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கான தேர்தல் அட்டவணையை தேர்தல் அலுவலர் நீதிபதி பாரதிதாசன் வெளியிட்ட போது கூறியதாவது:
சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு ஒரு தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள், ஒரு பொதுச்செயலாளர்,
ஒரு இணைச்செயலாளர், ஒரு பொருளாளர் ஆகிய ஆறு நிர்வாகிகளையும், ஐந்து செயற்குழு உறுப்பினர்களையும் தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கை வெளியிடப்படுகிறது.
இந்தத் தேர்தலில் போட்டியிடு வதற்கான வேட்பு மனு தாக்கல் நவம்பர் மாதம். 30-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம்.7-ஆம் தேதி முடிவடையும். தினமும் (ஞாயிறு விடுமுறை தவிர) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாமெனவும்
டிசசம்பர் மாதம் 9-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படுமெனவும். 10-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ளலாமெனவும்
அன்று தினம் மாலை 6 மணிக்கு வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படுமெனவும். டிசம்பர் மாதம்.15-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடை பெறுமெனவும், அன்று தினம் மாலை 6 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படுமெனவும்,
என்னிடம் வழங்கப்பட்ட உறுப்பினர்கள் பட்டியல் படி, மொத்தம் 1,502 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தப் பட்டியலில் உள்ள நபர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிடவும், வாக்களிக்கவும் முடியும்.
தேர்தலின் போது, உறுப்பினர்களுக்கு புதிதாக வழங்கப் பட்ட அடையாள அட்டையை கண்டிப்பாக காண்பிக்க வேண் டும். தேர்தல் வெளிப்படையாக வும், நேர்மையாகவும் நடத்தப்படும் என முன்பே அவர் கூறியிருந்த நிலையில் இன்று காலை வாக்குப்பதிவு நடக்கிறது. மாலை முடிவுகள் தெரியவரும்.
கருத்துகள்