வேலூர் அலமேலுமங்காபுரம் அண்ணாநகர் பட்டாபிராமன் 20 ஆண்டுக்கு முன்பு வாங்கிய இடத்தில் வீடு கட்டிக் குடியிருந்து வருகிறார்.
அந்த வீட்டிற்கு பல வருடங்களாக பட்டா மாறுதல் செய்யாமலிருந்தவர், தற்போது பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்தவரிடம் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூபாய்.5 ஆயிரம் லஞ்சம் கேட்டு வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைதானார். ஓய்வுபெறும் நிலையில் சிக்கினார்.
வேலூர் அலமேலுமங்காபுரம் அண்ணாநகர் பட்டாபிராமன். தான் கிரையம் வாங்கிய இடத்தை தனது மனைவி சரஸ்வதி (வயது 55) பெயருக்கு உயில் எழுதி வைத்த பிறகு இறந்து விட்டார். ஆனால் 20 ஆண்டுகளாக அந்த இடத்தின் பட்டா விற்பனை செய்த தமிழரசன் பெயரிலேயே இருந்து நிலையில் சரஸ்வதி தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய வேண்டும் என்று விண்ணப்பித்தார் இதுதொடர்பான விண்ணப்பம் அலமேலுமங்காபுரம் கிராம நிர்வாக அலுவலரான சத்துவாச்சாரி காந்திநகரை சேர்ந்த ஷர்மிளா (வயது 59) என்பவர் விசாரணை மேற்கொண்டிருக்கிறார். தொடர்ந்து அவர் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ரூபாய்.5 ஆயிரம் லட்சமாக கேட்டதனால் அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி அதுகுறித்து வேலூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறையில் புகார் செய்ததன் பேரில் அவர்கள் ஆலோசனையின் பேரில் பினாப்தலீன் ரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை சரஸ்வதியிடம் பெற்ற பின்னர் வழங்கி,
ஷர்மிளாவிடம் கொடுக்க அறிவுறுத்திய நிலையில், சரஸ்வதி மதியம் 12 மணி அளவில் அலமேலுமங்காபுரத்திலுள்ள கிராம நிர்வாக அலுவலகத்துக்குச் சென்று தான் வைத்திருந்த ரூபாய்.5 ஆயிரத்தை ஷர்மிளாவிடம் கொடுக்கவே. அதை அவர் பெற்றுக்கொண்டபோது,
அங்கு மறைந்திருந்த ஆய்வாளர் மைதிலி தலைமையிலான ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை லஞ்சம் பெற்ற கையுடன், பிடித்துக் கைது செய்தார்கள். தொடர்ந்து அவரிடம் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். கிராம நிர்வாக அலுவலர் ஷர்மிளா ஓய்வு பெற சில மாதங்களே உள்ள நிலையில். கைதுசெய்யப்பட்டார் .
கருத்துகள்