இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் காலமானார்.
இந்தியாவின் பிரதமராக இரண்டு முறை பதவி வகித்த, 1990 ஆம் ஆண்டில் நிதியமைச்சர் உலகமயமாக்கலுக்குப் பின்னர் இந்தியாவின் முக்கிய பட்ஜெட்களையும் தாக்கல் செய்த நிதியமைச்சர்.1932 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி பஞ்சாபில் பிறந்த மன்மோகன் சிங். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் 1954 -ஆம் ஆண்டில் வணிகவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற பின்னர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் வணிகவியல் சார்ந்து படித்தார். பஞ்சாப் யூனிவர்சிட்டியிலும் டெல்லி ஸ்கூல் ஆப் காமர்ஸிலும் ஆசிரியராகப் பணியாற்றிய மன்மோகன் சிங், வணிகவியலில் கொண்டிருந்த ஆற்றல் காரணமாக அரசின் வணிகவியல் துறைக்கு ஆலோசகராக 1970 -ஆம் ஆண்டுகளில் நியமிக்கப்பட்டார்.
1991 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றி நிதியமைச்சராக இருந்தவர் 1998 - ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை உள்ள காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். பிறகுதான், 2004 முதல் 2009 ஆம் ஆண்டுகள் வரை மற்றும் 2009 முதல் 2014 ஆம் ஆண்டுகள் வரை என இரண்டு முறை பிரதமராகவும் இருந்தார்.92 வயதாகும் மன்மோகன் சிங் சில மணி நேரத்திற்கு முன் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தகவல்.
மன்மோகன் சிங்கின் இறப்பை காங்கிரஸ் கட்சி மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனையும் உறுதி செய்திருக்கிறது.11932-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ஆம் தேதியில், தற்போது பாகிஸ்தானில் உள்ள கா எனும் இடத்தில் பிறந்தவர், 2004 முதல் 2014 வரை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர். நாட்டின் 13-வது பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங் சுமார் 33 ஆண்டுகள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். பின்னர், ஓய்வு பெற்றார். இந்தியாவின் பொருளாதாரம் தாராளமயம் ஆவதற்கான பணியில் முக்கிய பங்காற்றியதற்காக அவர் நினைவு கூறப்படுவார். அவருடைய பதவிக் காலத்தில், உலகின் விரைவாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியாவை உருமாற்றியதில் பெரும் பங்கு வகித்த பெருமைக்குரியவராவார்.
பிரதமராவதற்கு முன்பு, 1990-ஆம் ஆண்டு காலகட்டத்தில் நிதி மந்திரியாகவும் இருந்துள்ளார்.அவருடைய மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்