பூமியை நோக்கி வரும் விண்கல் விஞ்ஞானிகள் தகவல். சிறுகோள்கள் எனும் விண்கற்கள் சூரிய மண்டலத்தைச் சுற்றி வருகின்றன.
கணக்கில் எண்ண இயலாத அளவு சுற்றி வரும் இந்த விண்கற்கள் அவ்வப்போது, புவி ஈர்ப்பு விசைக்குள் வந்து பூமியின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைவதுண்டு.பெரும்பாலும் அவை வளிமண்டலத்திலேயே அழிந்து போகும். பூமி எப்படி சூரியனைச் சுற்றி வருகிறதோ அதே போல, விண்கற்களும் சுற்றி வருகின்றன. சிறிய விண்கல் முதல் 500 கிலோ மீட்டர் பரப்பளவுக்கும் மேல் அளவு கொண்ட ராட்ஷத பாறைகளால் ஆன விண்கற்களும் இவற்றிலடங்கும். இந்த விண்கற்கள் பூமியின் மீது மோதினால் பேரழிவு ஏற்படும் என்பதால் விஞ்ஞானிகள் இந்த சிறுகோள்களைத் தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறார்கள்.
இந்த விண்கல் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாது எனவும், ஒரு தீப்பந்து போல பெரும்பாலும் காட்சியளித்துச் சென்றுவிடும் என விஞ்ஞானிகள் கணித்தனர். இந்த விண்கல் பூமியிலிருந்து பார்க்கும் போது பிளாஷ் லைட் போலவே கண்களுக்குப் புலப்படும். ஒருவேளை பூமியில் விழலாம் அல்லது வானிலேயே அழிந்து போகலாம் எனவும் இதில் அச்சப்பட எதுவுமில்லை எனவும் வானியல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
இந்த சிறுகோள்கள் அரிதாக சில நேரம் பூமி மீது மோதுவதுண்டு. தற்போது, ஒரு விண்கல் புவி வட்டப்பாதைக்குள் வந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறினர். இந்த விண்கல் செர்பியா அருகே வளிமண்டலத்திற்குள் நுழையலாம் என விஞ்ஞானிகள் கூறினர். 70 சென்டி மீட்டர் அளவு கொண்ட இந்த விண்கல் இரவு 9.45 மணியளவில் வளிமண்டலத்திற்குள் நுழைகிறது.
கருத்துகள்