திருவண்ணாமலை மண் சரிவில் சிக்கிய 7 பேர் உயிரிழப்பு.
திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவால் பாறைகள் உருண்டதில் 3 வீடுகளுக்குள் 24 மணி நேரத்திற்கு மேல் சிக்கித் தவித்த 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஒரு சிறுவன் உள்ளிட்ட மூவரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை அளிக்கின்றத. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல்தெரிவித்த கட்சிகளின் தலைவர்கள் கருத்து இது- பாமக:- "அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் முன்னேறிவிட்டதாக பெருமிதத்தில், மண் சரிவில் சிக்கியவர்களை நம்மால் மீட்க முடியவில்லை என்பது மிகவும் வேதனை அளிக்கிறது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற சூழல்களில் துரிதமாக செயல்பட்ட, உயிரிழப்புகள் நிகழாமல் தடுப்பதற்கான உத்திகளை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வகுக்க வேண்டியது அவசியம்" என தெரிவிக்கப்பட்டது. பஞ்ச பூத ஸ்தலம்
மலையே அக்னிக் கடவுளாக வணங்குமிடம் திருவண்ணாமலை. 2662 அடி உயரம்முள்ள மலையின் சுற்றளவு 14.5 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. இந்த மலையே அண்ணாமலையாக நினைத்து பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். கார்த்திகை தீபத்தன்று மலை உச்சிக்கு சென்று தீபம் ஏற்ற அது சுற்று வட்டார பகுதிகளில் மக்கள் பக்தியோடு வழிபாடு மக்கள் செய்கிறார்கள்.
மலையடிவாரத்தில் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் வீடுகளைக் கட்டி மக்கள் வாழ்கின்றனர். மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் அவ்வளவு வீடுகள் இல்லை. மலையை சுற்றியுள்ள மலையடிவார பகுதிகள் வனத்துறை, வருவாய்த்துறை, தனிநபர்களின் மடங்கள் கொண்ட இடங்களாக உள்ளன. தனிநபர்களின் பெயரில் உள்ள நிலங்கள் விவசாய நிலங்களாகவும், குறைந்த அளவிலான இடங்கள் வீடுகள் மற்றும் வணிக வளாகங்களாக உள்ளன. வருவாய்த்துறை இடத்தில் மேற்கு, தாலுக்கா காவல் நிலையங்கள் உட்பட அரசு அலுவலகங்கள், இலங்கை அகதிகள் வசிக்கும் தற்காலிக குடியிருப்புகள் உள்ளன.
கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் அடிவாரத்திலிருந்து சில பகுதி மலை வரை மலைமீதிருந்த மரங்களையும், பாதைகளையும் வெட்டிவிட்டு வீடுகள், ஆஸ்ரமங்கள் கட்டினர். இதனால் மலை மீது பொழியும் மழை நீர் கீழே வருவதற்கான நீர்வழிப் பாதைகள் திசைமாறின, அடைப்பட்டன. மலையிலிருந்து வரும் மழை நீர் குளத்தில், ஆற்றில், ஏரியில் கலப்பது போல் நீர் வழிப் பாதைகளிருந்ததன. அதனை முற்றிலும் குடியிருப்பு வாசிகள் அழித்து விட்டார்கள். இதுகுறித்து நகராட்சியோ, வருவாய்த்துறையோ எதுவும் கவலைப்படவில்லை.
நகரத்திலிருந்த குளங்களை ஆக்கிரமித்து வீட்டுமனைகளாக, வணிக வளாகமாக அதிகாரத்தில் இருந்தவர்கள் மாற்றி விற்பனை செய்தனர் அதற்கு நகர் ஊரமைப்புத் துறை மற்றும் வருவாய் துறை துணை போனது தங்கள் அடையும் லஞ்ச லாவண்யங்களுக்கு இடமளித்து. வீடற்ற பொதுமக்களும் நகரப்பகுதியில் மலையடிவாரத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டினர். அரசியல் காரணங்களுக்காக அதை கண்டு கொள்ளாமல் இருக்கும் நிலையில் சிலநூறு வீடுகளாக இருந்தது, கடந்த 30 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான வீடுகளாக அவை மாறின. இதன வருவாய்த்துறை நில நிர்வாகம் மட்டுமே அல்லாமல் பணத்தை லஞ்சமாக வாங்கிக் கொண்டு நகராட்சியும் மின்சார வாரியமும் மின்சார வசதியை உருவாக்கித் தந்தது. நகராட்சியில் அதிகாரத்துக்கு வந்தவர்களும் இதுப்பற்றி கண்டுக்கொள்ளாமல் சிமென்ட் காங்கிரீட் சாலை, தெருவோர மின்விளக்கு வசதிகள், குடிநீர் தொட்டிகள் அமைத்துத் தந்தனர். இதனால் ஆக்கிரமிப்புகள் மலை மீது அதிகமானது. அதேபோல் மலையில் புதிதாக உருவான நித்தியானந்தா போல சில சாமியார்கள் நடத்திய ஆஸ்ரமங்கள், கோவில்கள் என்கிற பெயரில் இடத்தை ஆக்கிரமித்து வியாபாரம் செய்யத்துவங்கவே திருவண்ணாமலை நிலச்சரிவு நடந்துள்ளது;
சட்டவிரோதமாக வீடுகள் கட்டவும், ஆஷ்ரமங்கள் கட்டவும் மலையை சீர் செய்யத்துவங்கியபோது, சின்னசின்னமான பாறைகளை அப்புறப்படுத்தினர், மரங்களை வெட்டி எரிந்தனர். இதனால் அந்த மலைப்பகுதிகள் உறுதித் தன்மையை இழக்கத்துவங்கின, நீர் வழிப்பாதைகள் அடைபட்ட நிலையில் சிக்கலுக்கு உள்ளாகின. அதேபோல் கோடைக்காலத்தில் திட்டமிட்டே சமூகவிரோதிகள் மலைக்குத் தீவைத்து எரித்தனர். இதனால் புற்கள் மட்டுமில்லாமல் மரங்களும் தீக்கிறையாகின. இதுபோன்ற காரணங்களால் மலையிலுள்ள மண்ணின் தன்மை இளகியது.
திருவண்ணாமலை தீபமலையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் மயமான 7 பேரைத் தேடும் மீட்புப் பணி 2-வது நாளாக நடைபெற்று வருகிறது. பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலையில் பெய்த கன மழையால் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மலை உச்சியில் சுமார் 100 அடி உயரத்தில் இருந்து பாறை ஒன்று உருண்டு வந்தது. இதனால் தீப மலையிலிருந்து மண் சரிவு ஏற்பட்டு வ.உ.சி நகர் 9வது தெரு மேட்டிலுள்ள வீடுகள் மண்ணில் புதைந்தது.
இந்தச் சம்பவத்தில் ராஜ்குமார் என்பவரின் வீடு முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்துள்ளது. மேலும், 2 வீடுகளும் மண் சரிவுக்குள் சிக்கியுள்ளன. அந்த 2 வீடுகளில் குடியிருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் மண்ணில் புதையாமல் தப்பியுள்ளனர். ஆனால், முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்த ராஜ்குமாரின் வீட்டில் இருந்தவர்கள் என்ன ஆனார்கள்? அவர்களின் நிலை என்ன? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்தது. அந்த வீட்டுக்குள் ராஜ்குமார், அவரது மனைவி மீனா, அவர்களின் பிள்ளைகள் 2 பேர் மற்றும் அருகில் உள்ள வீடுகளைச் சேர்ந்த பிள்ளைகள் 3 பேர் என மொத்தம் 7 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்ததும் காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோரும் சம்பவ இடத்தை பார்வையிட்டனர் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர். இந்த நிலையில், 2வது நாளாக மண் சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் என்.டி.ஆர்.எஃப். உடன் இணைந்து மீட்பு பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். வீட்டின் மீது விழுந்த பாறைகள் மற்றும் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதனிடையே வ.உ.சி. நகரில் மேலும் ஓரு இடத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர் இந்த நிலையில். சென்னை - திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் அரசூரில் தேசிய நெடுஞ்சாலையை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்வதால் போக்குவரத்து துண்டிப்பு. ஆங்காங்கே வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
சென்னை – திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் 2 அடிக்கு மேல் தண்ணீர் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் சாலைகளில் இருபுறங்களிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் அரசூரில் தேசிய நெடுஞ்சாலையை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அரசூர் பேருந்து நிறுத்தம் அருகே மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திருச்சிராப்பள்ளி – சென்னை நெடுஞ் சாலையை மூழ்கடித்தது. விக்கிரவாண்டி அருகே மழைநீர் தேங்கியுள்ளதால் சித்தனியலிருந்து சுமார் 1.5 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தம்
சாலை துண்டிக்கப்பட்டதால் ஆங்காங்கே வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தப்பட்டுள்ள நிலையில் திருச்சிராப்பள்ளி நோக்கிச் சென்ற வாகனங்கள் மேலும் முன்னேற முடியாமல் ஆங்காங்கே சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கு, போக்குவரத்து முடக்கம், வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் விழுப்புரம் மாவட்டமே ஸ்தம்பித்துள்ளது. ஒகேனக்கல், சிறுவாணி போன்ற சுற்றுலா ஸ்தலங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிகப் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலையில் ஏற்கனவே மலைச்சரிவு ஏற்பட்டு 7 பேரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய இடத்தில் பெரிய பாறை ஒன்று உருண்டு வரும் நிலையில் உள்ளது. அந்தப் பாறை உருண்டு வரும் பட்சத்தில் இன்னும் பலத்த சேதத்தை அந்தப் பகுதியில் ஏற்படுத்தும் என்கிறார்கள். ஆபத்தை உருவாக்கும் நிலையில் உள்ள அந்தப் பாறையை மலை மீதே உடைக்க என்ன செய்யலாம் என முடிவு செய்ய சென்னை ஐஐடி தொழில்நுட்பப் பொறியாளர்கள் வந்துள்ளனர். அவர்கள் அந்தப் பாறை குறித்தும், மலை குறித்தும் ஆய்வு செய்கின்றனர். தற்போது பெய்த மழையில் மலையில் உள்ள மண் இலகுவாகி அரிப்பு அதிகமாகியுள்ளது. மீண்டும் ஒரு கனமழையை திருவண்ணாமலை நகரம் எதிர்கொள்ளும் பட்சத்தில் மலையில் மண்சரிவும், பாறைகளின் சரிவும் அதிகமாகும் நிலையில் உள்ளது.
கருத்துகள்