ஆன்மீகப் பேச்சாளர் டாக்டர் சுதா சேஷய்யன் செம்மொழி ஆராய்சி நிறுவனத்திற்கு துணைத் தலைவராவார் டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி
அகத்தியருக்கு விழா செம்மொழி ஆராய்ச்சி நிறுவனம் கொண்டாடும்! சப்த ரிஷிகளில் அகத்தியரை .சித்த மருத்துவத்தை வளர்த்தெடுத்த பதினென் சித்தர்களில் ஒருவராகவும் அகத்தியர் விளங்கும் நிலையில்.
ரிக் வேதத்தில் இருக்கும் பாட்டையும் இவர் எழுதியுள்ளதால் நமது பெயர் தெரியாத சித்தர்கள் எழுதி வைத்த சித்த மருத்துவக் குறிப்புகளும் உண்டு தற்போது நாடி ஜோதிடம் பார்க்கும் பலரும் அகஸ்தியர் பெயரை பயன்படுத்த அந்த ஆதிசிவன் கல்யாணத்தின் போது இருந்ததாகவும், சிவன் கல்யாணத்தைக் காண அனைவரும் வட இந்தியா நோக்கி பயணப்பட்டு விட்டதால், பூமி தென் திசையில் சமன் குறைந்து கீழே போய்விடும் என்பதால், அதைச் சமன் செய்ய அகத்தியரை தென் திசைக்கு அனுப்பியதாக வரலாறு பேசும் நிலையில், தமிழ் இலக்கணத்தை உருவாக்கியவரும் அகத்தியரே என அவருக்கு மொழி அறிஞர் என்ற அந்தஸ்தை தந்துள்ளனர்.
தமிழ் இலக்கணத்தை உருவாக்கியவரே அகத்தியர் என பல காலம் நம்மை நம்ப வைத்து இருந்ததால், நமது மகாகவி பாரதியாரும் "நம்பி போகிற போக்கில், ஆதிசிவன் பெற்றுவிட்டான்– என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றொர் வேதியன் கண்டு மகிழ்ந்தே நிறை மேவும் இலக்கணம் செய்தான்". அகத்தியர் தமிழ் சித்தர்களில் முதன்மையானவராகவும், சப்த ரிஷிகளில் ஒருவராகவும் அறியப்படுகிறார்.அகத்தியமலை மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள ஒரு மலை முடியாகும். அதன் உயரம் 1,868 மீட்டர். மேட்டுப்பாளையம் அருகிலுள்ள அகத்தியர் ஞான பீடத்தில் குருபூஜை விழா ஆண்டு தோறும் நடைபெறுகிறது.
மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் செல்லும் சாலையில் கல்லாறு இரயில்வே குறுக்கீடு அருகே அகத்தியர் ஞானபீடமுள்ளது. இங்கு சித்தர் நெறிமுறைப்படி சர்வதேச நிவாரண மூலிகை மகா யாகமும், ஞான பீடத்தின், 22 ஆம் ஆண்டை முன்னிட்டு, அகத்தியர் குருபூஜை விழாவும் நடைபெற்றதுது. காலையில் ஏழு மணிக்கு கொடியேற்றம், அதைத்தொடர்ந்து, 18 சித்தர்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் குருபூஜை விழா துவங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு அகத்தியர் ஞானபீட பீடாதிபதி தவத்திரு சரோஜினி மாதாஜி அம்மையார் தலைமை தாங்கினார் தொடர்ந்து பஜனை நடைபெற்றது . பின்னர் சாதுக்கள் அருளாசியும், சரோஜினி மாதாஜியின் அருளாசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம், 2:00 மணிக்கு சர்வதேச நிவாரண யாகம் நடைபெற்றது. மாலை, 5:00 மணிக்கு பிரசாதம், தீர்த்தம் ஆகியவை வழங்கப்பட்டன ராமசுப்பிரமணியம் நன்றி கூறினார் அதேபோல திருநெல்வேலி: உலக சித்தர்கள் தினத்தை முன்னிட்டு அகத்திய முனிவர் கோவிலில் திருவிழா நடந்தது. அத்தாளநல்லுார் கிராமத்தில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள அகஸ்தியர் திருக்கோவிலில் ஆயில்யம் நட்சத்திரதினத்தில் மகரிஷி
அகஸ்திய மாமுனிவரின் உதயதினம் மற்றும் உலக சித்தர்கள் தினத்தினை முன்னிட்டு அத்தாளநல்லுார் அகத்தியருக்கு திருவிழா நடந்ததில் அகத்திய முனிவருக்கு காலை சிறப்பு ஹோமம், பூஜைகள் அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள், மேள தாளங்கள் முழங்க நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் அலங்கரிக்கப்பட்ட அகத்தியர் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சிகொடுத்தார். ஏற்பாடுகளை திருவிழா கமிட்டியினர் செய்திருந்தனர். இந்த நிலையில் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம், சென்னை பெரும்பாக்கத்தில் இயங்கி வருகிறது. இங்கு செவ்வியல் தமிழ் நூல்கள், பழங்கால இலக்கிய, இலக்கணம் தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. மேலும், தமிழ்மொழி ஆய்வு மற்றும் தமிழ் மேம்பாட்டு பணிகளும் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு முதல்வரைத் தலைவராக கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தின் இயக்குநராக பேராசிரியர் ரா.சந்திரசேகரன் பணியாற்றி வருகிறார். செம்மொழி தமிழாய்வு துணை தலைவராக சுதா சேஷய்யன் கடந்த செப்டம்பர் மாதம் நியமனம் செய்யப்பட்டார்
இந்நிலையில், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக டாக்டர் சுதா சேஷய்யனை நியமித்து மத்திய கல்விஅமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. அவர் பதவியேற்கும் நாளிலிருந்து 3 ஆண்டுகள் இந்தப் பதவியில் இருப்பார். மருத்துவர் சுதா சேஷய்யன் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியையாகவும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் துணைவேந்தராகவும் பணியாற்றியுள்ளார். தமிழ் ஆர்வலரானஅவர், 30-க்கும் மேலான இலக்கிய, ஆன்மிக நூல்களை எழுதியுள்ளார். தமிழ்நாடு அரசின் கலைமாமணி, சொல்லின் செல்வர் உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். தற்போது அகஸ்தியர் விழா நடத்த உள்ள நிலையில் அதற்கு கடவுள் மறுப்பாளர்கள் மத்தியில் விவாதம் நடக்கிறது அகஸ்தியர் ஒரு ஆன்மீக சித்தர் என்பதை அறியாமல்.
கருத்துகள்