அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை நிகழ்வு குறித்து
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் இன்று டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி சந்தித்துப் பேசிய போது, தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், புயல் பாதிப்புக்கு மாநில அரசு கேட்கும் நிவாரணத்தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என மூன்று கோரிக்கை கொண்ட மனுவை வழங்கினார்.
இந்த சந்திப்பின் போது விஜய்யுடன் கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் உடனிருந்தனர். ஆளுநரிடம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மூன்று பக்க அறிக்கையை வழங்கிய நிலையில் அதை வெளியிட்டுள்ளனர் மேற்கண்ட அறிக்கையில் : “இன்று (டிச.30) தவெக தலைவர் தலைமையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தோம்.
ஆளுநருடன் தவெக தலைவர் விஜய் சந்திப்பு: சட்டம், ஒழுங்கு உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மனு அளித்தோம்.
எங்கள் மனுவில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளோம். மேலும், தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை.
இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும், என தவெக சார்பில் வலியுறுத்தப்பட்டது. எங்கள் கோரிக்கைகளை கேட்ட ஆளுநர், அவற்றைப் பரிசீலிப்பதாக கூறினார்.” எனத் தெரிவித்த விபரம் குறித்து நடிகர் விஜய் கைப்பட எழுதிய கடிதத்தில், “எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன் அண்ணனாகவும், அரணாகவும். எனவே, எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவோம்.” எனத் தெரிவித்திருந்தார். தொடர்ந்து ஆளுநருடனான சந்திப்புக்கிடையில், இன்று காலை விஜய் எழுதிய கடிதத்தின் பிரதிகள் அச்சாகி விநியோகிக்கப்பட்டன. தவெக மகளிரணி நிர்வாகிகள் இந்தப் பிரதிகளை பெண்களுக்கு வழங்கி வந்த நிலையில் கட்சியின் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.துண்டறிக்கைகள், பிரசுரங்கள் தருவதற்கு அனுமதி பெற வேண்டுமென எந்தச் சட்டமும் சொல்லவில்லை ஆனால் அதில் அரசியல் தியாகராயநகரில் த.வெ.க தலைவர் நடிகர் விஜய் எழுதிய கடிதத்தை முறையான அனுமதியின்றி மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக துண்டு பிரச்சாரமாக விநியோகித்த த வெ கட்சியினரை கைது செய்தது காவல்துறை. அவர்களைப் பார்க்க வந்த புஸ்ஸி ஆனந்தும் கைது செய்யப்பட்டார்.
கருத்துகள்