அடுக்கடுக்காகப் பொய் வழக்கு உலகம் முழுவதும் தெரியவைத்த பின் பெங்களூருவில் உயிர்துறந்தார் ஐடி ஊழியர் மக்கள் கொதிப்பு
பெங்களூருவில் தனியார் நிறுவனத்தின் மேலாளர் குடும்ப விவகாரத்தில் தற்கொலை,
24 பக்க இறுதி வாக்குமூலம் சட்டம் ஆண்களை வஞ்சிப்பதாகக் கருத்து உத்திரப் பிரதேச மாநிலத்தின் அதுல் சுபாஷ் (வயது 34) பெங்களூருவிலுள்ள தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராகப் பணியாற்றினார். திங்கள்கிழமை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.
அதற்கு முன்னதாக, அவர் 24 பக்கத்தில் கடிதம் எழுதியதுடன் 90 நிமிடங்கள் பேசி வீடியோவையும் வெளியிட்டார். தனது மரண வாக்குமூலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க் உள்ளிட்டோரை X தளத்தில் டேக் செய்து,
சர்வதேச அளவில் விவாதிக்க வேண்டுமெனக் கோரிக்கை வைத்துள்ளார். எழுதிய கடிதத்தில், ‘‘எனக்கும் என் மனைவி நிகிதா சிங்காரியாவுக்கும் கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அடுத்த சில தினங்களில் எங்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. அடுத்த சில மாதங்களில் என் மாமனார் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். ஆனால் நான் வரதட்சணை கேட்டதால் தான் அவர் மாரடைப்பால் இறந்தார் என மனைவியின் வீட்டார் காவல் நிலையத்தில் பொய்யான புகார் அளித்தனர்.
என் மனைவி தனியார் நிறுவனத்தில் மாதம் ரூபாய்.1 லட்சம் சம்பாதித்த போதும் என்னிடம் ஜீவனாம்சமாக ரூபாய்.3.3 கோடி கேட்டார். எனது 3 வயது மகனைப் பராமரிக்க மாதம் ரூபாய்.4 லட்சம் கேட்டார். ஆனால் என் மகனைப் பார்க்கவே அனுமதிக்கவில்லை. இந்த விவகாரத்து வழக்கு உத்திரப் பிரதேசத்தின் ஜான்பூர் நீதிமன்றத்தில் நடந்த போது அதனை விசாரித்த குடும்பநல நீதிமன்ற நீதிபதி ரீட்டா கௌசிக், பராமரிப்புத் தொகையைகா குறைப்பதற்கு ரூபாய்.5 லட்சம் லஞ்சம் தர வேண்டும் எனக் கேட்டார். நாட்டிலுள்ள சட்டங்கள் அனைத்தும் பெண்களுக்கு ஆதரவாக இருக்கின்றன. ஆண்களை வஞ்சிப்பதாக உள்ளன. என் வழக்கில் எனக்கு நீதி கிடைத்தால் மட்டுமே என்னுடைய அஸ்தியை கங்கையில் கரைக்க வேண்டும். இல்லாவிடில் நீதிமன்ற வாசலில் ஓடும் சாக்கடையிலேயே கொட்டி விடுங்கள். என் மனைவியின் துன்புறுத்தலால் என் வயதான பெற்றோர் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கருணைக் கொலை செய்யக் கோரினால், அதை அனுமதிக்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்
சுபாஷின் இந்தக் கடிதமும், வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது,. அவரது மனைவி நிகிதாவை பணி நீக்கம் செய்ய வேண்டும் என ஏராளமானோர் மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர்.இது குறித்து அவரது சகோதரர் பிகாஸ் குமார் கூறுகையில், தங்கள் குடும்பத்தினர் மீது அதுல் சுபாஷின் மனைவி பல்வேறு பொய் வழக்குகளை தாக்கல் செய்ததாகவும், அதனால் அதுல் சுபாஷ் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார் எனத் தெரிவித்துள்ளார். அதுல் சுபாஷின் அறையில் பெங்களூருவில் காவல்துறை சோதனை செய்த போது, "நீதி கிடைக்க வேண்டும்" என்ற வாசகம் எழுதப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் அவர் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் வகையில் ஒரு கடிதத்தையும் விட்டுச் சென்றுள்ளார். அதில் நாட்டில் உள்ள குற்றவியல் நீதி அமைப்பு மற்றும் பொய் வழக்குகள் குறித்து அதுல் சுபாஷ் விமர்சித்துள்ளார். தன் மீது தனது மனைவி சுமத்திய வரதட்சனைக் கொடுமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மையில்லை என்றும், தனது பெற்றோரை தயவு செய்து துன்புறுத்த வேண்டாம் என்றும் அந்தக் கடிதத்தில் அதுல் சுபாஷ் எழுதியுள்ளார். அதுல் சுபாஷ் 2019-ஆம் ஆண்டு திருமண வரன் தேடும் இணையதளம் மூலம் பெண் பார்த்து திருமணம் செய்துள்ளார். அடுத்த ஆண்டு இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அதன் பிறகு அதுல் சுபாஷிடம் அவரது மனைவி மற்றும் மனைவியின் குடும்பத்தினர் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாகவும்,
அவர் பணம் கொடுக்க மறுப்புத் தெரிவித்ததால் 2021-ஆம் ஆண்டு அவரது மகனை அழைத்துக் கொண்டு அதுல் சுபாஷின் மனைவி பெற்றோர் வீட்டிற்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. தனது மகனைச் சந்திக்கவும் மனைவியின் குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை எனக் குறிப்பிடுள்ள அதுல் சுபாஷ், "நான் எவ்வளவு கடினமாக உழைத்தாலும், என்னிடம் உள்ள பணத்தைப் பிடுங்கப் போகிறார்கள். அதற்கு நீதித்துறை அமைப்பும் துணையாக இருக்கிறது. நான் சென்ற பிறகு, பணமும் இருக்காது, என் பெற்றோரை துன்புறுத்துவதற்கான காரணமும் இருக்காது. எனது உடலை அழித்து அனைத்தையும் நான் காப்பாற்றுகிறேன்" என அதில் தெரிவித்துள்ளார்"என் சாவுக்குப் பிறகும் எனக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், என் உடலை எரித்து அதன் சாம்பலை ஜான்பூர் நீதிமன்றத்தின் சாக்கடையில் கலந்து விடுங்கள், அந்த அவமானம் காலத்திற்கும் சாட்சியாக இருக்கட்டும்"
அதுல் சுபாஷின் இறுதி வரிகள், கோடிக்கணக்கான மக்களின் மனசாட்சியை உலுக்கியுள்ளது.
இவர் சாவுக்கு காரணமாக ஐந்து பேர்களைக் குறிப்பிட்டுள்ளார்
ஒரு பெண் நீதிபதி, அவரது மனைவி, அவரது மைத்துனர், மாமியார், அவர் மனைவியின் மாமன்,
லட்சகணக்கில் மனைவிக்கும் அவர் குடும்பத்தாருக்கும் அவர் உதவியுள்ளார், எந்தளவுக்கு என்றால் மனையின் தாய் தந்தையர் சொந்தமாக வீடு வாங்கும் அளவுக்கு,
ஒரு கட்டத்திற்கு மேல் அவர் அதை அவர் நிறுத்தி விடுகிறார்.
அதன் பிறகு தான் அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வேலைகளில் ஈடுப்படுகிறார்.
அவர் மீது மிக மோசமான எட்டு பொய் வழக்குகள் பதியப்படுகிறது,
கணவர் அடித்துக் கொடுமைப்படுத்துகிறார், வரதட்சணைக் கொடுமை செய்துள்ளார், மாமனாரை கொலை செய்தார், இயற்கைக்கு மாற்றமான முறையில் நடந்து கொள்கிறார், என ஏகப்பட்ட மனச்சாட்சி இல்லாத பொய் வழக்குகள் பதியப்படுகிறது.
ஒவ்வொரு வழக்கிற்கும் பல மாதங்கள் பெங்களூருக்கும் உத்திரபிரதேசத்திற்கும் அலைகிறார்,
ஒவ்வொன்றையும் பொய் என நிரூபிக்கிறார், ஆனால் இவர்கள் வழக்குப் போடுவதை மட்டும் நிறுத்தவில்லை,
நாற்பதுக்கும் அதிகமான முறை ஜான்பூர் நீதிமன்றத்தால் அலைக்கழிக்கப்பட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் அந்த பெண் நீதிபதியிடம் வாதாடுகிறார், மாமனார் உடல்நிலை மோசமாக இருந்தால் தான் திருமணமே விரைவாக நடத்தினார்கள், அவர் இயற்கையாக மரணித்ததை பொய்யாகக் குழப்பி கொலை குற்றம் சாட்டினார்கள்,
இயற்கைக்கு மாறாக எந்த செயலும் செய்யவில்லை, அதற்கான எந்த மருத்துவ ஆதாரமும் சமர்பிக்கப்படவில்லை,
மனைவியை அடித்துக் கொடுமைப்படுத்தியதாக எந்தக் காயமும் ஆதாரமாக இல்லை,
வரதட்சணைக் கொடுமை செய்தேன் என்கிறார்கள், அது உண்மையில்லை, லட்சக்கணக்கில் அவர்களுக்கு நான் உதவியுள்ள ஆதாரம் தன்னிடம் உள்ளது,
என் ஒரே பிள்ளையை என் கண்ணில் காட்டாமல் நீதிமன்றத்திற்குக் கூட அழைத்து வராமல் வைத்துக்கொண்டு விரட்டுகிறார்கள்,
என் மீதுள்ள எல்லா வழக்குகளும் நீதி பரிபாலன முறையில் விசாரித்தால் பொய் எனத் தெரியும்,
தயவு செய்து வழக்குகளைத் தள்ளுப்படி செய்யுங்கள், இப்படி மன ரீதியாக அழுத்தம் கொடுப்பதால் தான் பலர் தற்கொலை செய்துக்கொள்கிறார்கள் என கடிதம் மூலம் கண்ணீர் வடிக்கிறார் சுபாஷ்,
அதற்கு நீதிமன்றத்திலே அவரின் மனைவி அப்போ ஏன் உயிர் வாழ்கிறாய் செத்து தொலைய வேண்டியது தானே எனச் சொல்கிறார், அதற்கு அந்த பெண் நீதிபதியும் ஆமோதிப்பது போல் சத்தமாக சிரிக்கிறார்.
பின்பு நீதிபதி ஐந்து லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு இந்த வழக்கை எல்லாம் முடிப்பதாக பேரம் பேசுகிறார், இல்லை எனில் வழக்கிற்காக அலைய வேண்டியது தான் என மிரட்டுகிறார்.
தான் எந்தத் தவறும் செய்யாமல், இந்த மோசமான பெண்ணைத் திருமணம் செய்தது ஒன்று மட்டுமே தவறு, நேர்மையாக வரி கட்டி உழைத்துச் சேர்த்த பணத்தை நீதிபதியும் மனைவியும் அவரின் குடும்பத்தார்களும் இப்படி பேய்களாக தன்னை சூழ்ந்து பணத்திற்காக எவ்வளவு மன உளைச்சலை தருகிறார்களே என கவலைக்கொள்கிறார்.
மேற்கூறிய விஷயங்களை கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் வீடியோ காட்சிகள் மற்றும் நாற்பது பக்கங்களுக்கு கடிதத்தை எழுதி வைத்து சுபாஷ் தற்கொலை செய்துக்கொள்கிறார்,
நீதிமன்றம் இந்திய சட்டப்படி நடந்துக்கொள்ளவில்லை என்றும், பெண்களுக்கு வழங்கப்பட்ட பிரதேயக சட்டங்கள் தவறாக வழி நடத்தப்படுகிறது என்றும், அப்பாவி ஆண்களுக்கு இந்தச் சட்டம் நீதியைப் பெற்றுத் தரவில்லை என்றும், இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றும் கூறி அவர் உயிரை விட்டுள்ளார்.
இந்தியா எங்கும் இதை குறித்த விவாதங்கள் எழத் தொடங்கியுள்ளது.
குடும்ப வன்முறைச் சட்டமும் பாலியல் வன்புணர்வும் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் சில இடங்களில் நடக்கிறது என்பது அதுல் சுபாஷ் விஷயம் நிதர்சனமான உண்மை இவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடக்கிறது என்பது பெங்களூரில் கண்ட உண்மை..இந்த வழக்கு தொடர்பாக பெங்களூரு காவல் துறையினர் விசாரணை நடத்துகின்ற நிலையில்
இந்த வழக்கில் குற்றவாளியாக உள்ள நிகிதா சிங்கானியா, அவரது தாயார் நிஷா சிங்கானியா மற்றும் சகோதரர் அனுராக் சிங்கானியா ஆகிய மூவரும் கைது. மேலும் ஒரு குற்றவாளியான சுஷில் சிங்கானியா கைது செய்யப்படவில்லை.
கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவர்களை, நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
அதுல் சுபாஷ் தற்கொலை வழக்கில் நீதி கிடைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பெங்களூரு காவல்துறையினர் தெரிவித்தனர்.
கருத்துகள்