பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூபாய். 13 ஆயிரம் கோடி கடனை வாங்கி
மோசடி செய்ததாக குஜராத் தொழில் அதிபர் மெகுல் சோக்சி மீது புகார் எழுந்த நிலையில் 2018-ஆம் ஆண்டு அவர் வெளிநாட்டிற்கு தப்பினார். அவர் ஆன்டிகுவாவில் வசித்து வருவதாக கூறப்படும். நிலையில் மோசடி தொடர்பாக மெகுல் சோக்சி மீது அமலாக்கத்துறை யினர் வழக்குப்பதிவு செய்தனர்.
அவருக்குச் சொந்தமான ரூபாய். 2,565 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் பறிமுதல் செய்தது தொடர்பான வழக்கு மும்பையில் சிறப்பு பண மோசடித் தடுப்புச் சட்ட நீதிமன்றத்தில் நடக்கிறது. இந்த வழக்கில் மெகுல் சோக்சிக்கு எதிராக இதுவரை 3 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விற்பதற்கு அமலாக்கத்துறையினருக்கு அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவிட்டதைத்தொடர்ந்து மெகுல் சோக்சியின் ரூபாய். 2,500 கோடி மதிப்பிலான சொத்துக்கள் ஏலம் விடப்படுகிறது.
அதில் கிழக்கு மும்பை சாண்டா குரூசில் கெனி டவரில் உள்ள 6 அடுக்கு மாடிக் குடியிருப்புகள், டெல்லி மஹர்ஷத்ராவில் உள்ள சாண்டா குரூஸ் எலக்ட்ரானிக்ஸ் எக்ஸ்போர்ட் மண்டலத்தில் அமைந்துள்ள 2 தொழிற்சாலைகளும் அடங்கும்.பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 (PMLA) மற்றும் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம், 2018 (FEOA) ஆகியவற்றின் விதிகளின்படி, விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரின் வழக்குகளில் பொருந்தும், வழக்கை விசாரிக்கும் நீதிமன்றமே அதை மீட்டெடுக்க முடியும். வங்கிகள் உட்பட சட்டப்பூர்வமான மூன்றாம் தரப்பு உரிமையாளருக்கு பணமோசடி செய்வதில் ஈடுபட்டுள்ள சொத்து
பொருளாதார மோசடியின் கீழ் வரும் தப்பியோடிய விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரின் 19,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன 3 ஆண்டுகளுக்கு முன்பு மார்ச் மாதம் 22 ஆம் தேதி 2022 ஆம் ஆண்டு தப்பியோடிய விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரின் 19,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் மத்திய அரசு மார்ச் 22 அன்று நாடாளுமன்றத்தில்
மாநிலங்களவையில் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி தெரிவித்தார். இந்த மூவரும் பொதுத்துறை வங்கிகளில் 22,585.83 கோடி ரூபாய் அளவுக்கு கொள்ளையடித்துள்ளனர்.
“மார்ச் மாதம் 15 ஆம் தேதி, 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, PMLA (பணமோசடி தடுப்புச் சட்டம்) மூலம் ரூபாய்.19,111.20 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இணைக்கப்பட்டுள்ளன,” எனக் கூறினார். மொத்தம் ரூபாய்.19,111.20 கோடியில் ரூபாய்.15,113.91 கோடி மதிப்புள்ள சொத்துகள் பொதுத்துறை வங்கிகளுக்குத் திரும்பியுள்ளன.
மேலும், 335.06 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். "மார்ச் மாதம் 15 ஆம் தேதி, 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்த வழக்குகளில் மொத்த மோசடிப் பணத்தில் 84.61 சதவீதம் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, மேலும் வங்கிகளுக்கு ஏற்பட்ட மொத்த சேதத்தில் 66.91 சதவீதம் வங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது மற்றும் இந்திய அரசாங்க முயற்சியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது"
கருத்துகள்