மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. இராதாகிருஷ்ணன், பிரதமர் முன்னிலையில் முதல்வர் தேவேந்திர சரிதா கங்காதர் ராவ் ஃபட்னாவிஸுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மும்பை ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. இராதாகிருஷ்ணன், முதல்வர் தேவேந்திர சரிதா கங்காதர் ராவ் ஃபட்னாவிஸுக்கு
பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். மேலும் துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் பூங்கொத்துகளை வழங்கினார்.
முதல்வர் மற்றும் துணை முதல்வர்களுக்கு பிரதமர் நேரில் வாழ்த்துத் தெரிவித்தார். மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, முதல்வர்கள் யோகி ஆதித்யநாத் (உத்திரப்பிரதேசம்), நிதிஷ் குமார் (பீஹார்), சந்திரபாபு நாயுடு (ஆந்திரப் பிரதேசம்), மத்திய அமைச்சர்கள், பல துறைகளின் முக்கியப் பிரமுகர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸின் பெயர் தேர்தல் முடிவுகள் வெளிவந்த ஒரு வார முடிவில் இறுதி செய்யப்பட்டது,
டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸின் பெயர் இறுதி செய்யப்பட்ட நிலையில், மகாராஷ்டிர பாஜகவின் சட்டமன்ற கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டத்துக்கு மத்திய பார்வையாளர்களாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விஜய் ரூபானி ஆகியோர் நியமிக்கப்பட்ட நிலையில் அறிவிக்கப்பட்டது.இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி வெளியிட்ட அறிவிப்பில், "மகாராஷ்டிராவில் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டத்திற்கு மத்திய பார்வையாளர்களாக குஜராத் முன்னாள் முதல்வரும், பஞ்சாப் மற்றும் சண்டிகரின் கட்சிப் பொறுப்பாளருமான விஜய் ரூபானி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை கட்சியின் உயர்மட்டக் குழு நியமித்துள்ளது" என தெரிவிக்கப்பட்டது.
மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட மஹாயுதி கூட்டணி, மொத்தம் 288 சட்டமன்றத் தொகுதிகளில் 230 இடங்களைக் கைப்பற்றியதில்,
பாரதிய ஜனதா கட்சி 132 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், என்சிபி 41 இடங்களிலும் வெற்றி பெற்றன. தேர்தல் முடிவுகளை அடுத்து சிவசேனா தலைவரும் முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிர பாஜக மூத்த தலைவரும் துணை முதல்வருமான தேவேந்திர ஃபட்னவிஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் ஆகியோர் டெல்லியில் பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரைச் சந்தித்து ஆட்சி அமைப்பது தொடர்பாக நடந்த ஆலோசனைக்குப் பிறகு
செய்தியாளர்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே, மகாயுதி கூட்டணியின் முதல்வராக பாஜக மேலிடம் யாரைத் தேர்வு செய்தாலும் அதை தானும் சிவ சேனாவும் ஆதரிக்கும் என தெரிவித்ததையடுத்து, இம்முறை பாஜகவைச் சேர்ந்தவர் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என்ற தகவல் வெளியானது. அதில் ஆர் எஸ் எஸ் முடிவு செய்து முதல்வராக பதவி ஏற்றார் தேவேந்திர பட்னாவிஸ் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு நிகழ்வுக்கு வருவாரா மாட்டாரா என்று நிலை இருந்தது அதில் அரசியல் இருந்த நிலையில் பதவியை இழக்க நேர்வதால் ஏக்நாத் ஷிண்டே வருத்தம் அடைந்திருப்பதாகவும் கூறப்பட்டது.
எனினும், பாஜக தலைமை ஆர் எஸ் எஸ் முடிவை மீறி எதையும் தெரிவிக்கவில்லை. இதனிடையே, சிவசேனா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக ஏக்நாத் ஷிண்டேவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக அஜித் பவாரும் அந்தந்த கட்சிகளின் எம்எல்ஏக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பாஜகவின் சட்டமன்றக் கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் மத்திய பார்வையாளர்கள் குறித்த அறிவிப்பை
பாஜக வெளியிட்ட நேரத்தில், பதவியேற்பு விழா டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி மும்பை ஆசாத் மைதானத்தில் நடைபெறும் என்று மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே தெரிவித்தார். இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்றும் கூறப்பட்டது. முன்னதாக, பதவி விலகும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் பாஜகவின் முடிவை ஆதரிப்பதாகக் கூறினார்.288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பாஜக 132 இடங்களைக் கைப்பற்றி மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது,
அதே நேரத்தில் அதன் கூட்டணிக் கட்சிகளான ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் அஜித் பவார் தலைமையிலான என்சிபி - 57 மற்றும் முறையே 41 இடங்கள். மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 20 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23ஆம் தேதியும் நடைபெற்றது. தற்போது மத்திய அமைச்சர் பாஜகவின் மூத்த தலைவர் நிதின் கட்காரி ஆதரவாளராக உள்ள தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் பதவியை ஏற்றார்.
கருத்துகள்