தனிநபருக்கு அரசு கட்டிக் கொடுத்த இலவசக் கழிப்பறைக்கு லஞ்சம் வாங்கிய இருவருக்கு தலா நான்காண்டுகள் தண்டனை
ஆண்டிமடம் அருகில் தனிநபருக்கு அரசு கட்டிக் கொடுத்த இலவசக் கழிப்பறைக்கு லஞ்சம் வாங்கிய நபர்கள் வழக்கில் பணி மேற்பாா்வையாளா் உள்ளிட்ட இருவருக்கு தலா நான்காண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது,
அரியலூா் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் .அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2017 ஆம் ஆண்டு ஒன்றியப் பணி மேற்பார்வையாளராக பணிபுரிந்த சங்கர், நாகம்பந்தல் கிராமத்தில் முழு சுகாதார திட்டத்தின் கீழ் இராதா கிருஷ்ணன், திரிசங்கு ஆகியோர் கட்டிய கழிவறைக்கு அரசு வழங்கும் தொகைக்கு ரூபாய்.12,000 லஞ்சமாக
சங்கர், ரத்தினசிகாமணி ஆகியோர் கேட்டுள்ளார். அதில் லஞ்சம் கொடுக்க விரும்பாத நிலையில் இருவரும் சேர்ந்து அரியலூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரளித்தனர்.
அதுகுறித்து ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்து மேற்பார்வையாளர் சங்கர் மற்றும்
உதவியாளர் ரத்தினசிகாமணி ஆகியோரைக் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மாவட்ட முதன்மைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது.
இறுதி விசாரணை முடிந்த நிலையில், கடந்த செவ்வாய் கிழமை வழக்கில் நீதிபதி மணிமேகலை, லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட சங்கர் மற்றும் ரத்தினசிகாமணி ஆகிய இருவருக்கும் ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 7-ன் கீழ் குற்றவாளிகள் என அறிவித்து இருவருக்கும் தலா மூன்றாண்டுகள், பிரிவு 13(1)- ன் கீழ் தலா நான்காண்டுகள் சிறைத் தண்டனையும், அதனை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும். திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் வழக்கறிஞர் முருகன் ஆஜரானார்.
கருத்துகள்