கேரளாவைச் சேர்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ் - அந்தோனி தட்டில் திருமணம்
12 டிசம்பர் 2024 ல் வியாழக்கிழமை கோவாவிலுள்ள ஒரு ரிசார்ட்டில் நடைபெற்றது தமிழ், தெலுங்கு, மலையாளத்தைத் தொடர்ந்து ஹிந்தியிலும் தடம் பதித்து முன்னனியில் உள்ள நடிகையாகத் திகழும் நடிகை கீர்த்தி சுரேஷ் - அந்தோனி தட்டில் திருமணம் கோவாவில் அவர்கள் குடும்பமும், திரையுலக நெருங்கிய நண்பர்களும் சூழ தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான ஜோசப் விஜய் மற்றும் நடிகை திரிஷா கிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது. .
சரியாக காலை 9.40 மணிக்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார். மணமகன் ஆண்டனி தட்டில் S/O Mathew Thattil ,Rosily Mathew மணமகள் Keerthy Suresh D/O G. Suresh Kumar ,Menaka Suresh ஆகியோர் வரவேற்றனர் நடிகை கீர்த்தி சுரேஷ் - அந்தோனி தட்டில் திருமணத்திற்கு கோவாவில் குடும்பமும், திரையுலக நெருங்கிய நண்பர்களும் மட்டுமே சூழ நடைபெற்றது.
நடிகை கீர்த்தி சுரேஷ் 17 அக்டோபர் 1992 ல் பிறந்த 32 வயதான அவர் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறை நடிகை கேரளா திருவனந்தபுரம் பேர்ல் அகாடமியில் கல்வி முடிந்த நடிகை 2000–2005 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 2013 ஆம் ஆண்டு கதாநாயகியாக தற்போது திரைப்பட தயாரிப்பாளர் ஜி. சுரேஷ் குமார் நடிகை மேனகாவின் மகளாக 2013 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான கீதாஞ்சலியில் தனது முதல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த பெண் அறிமுகத்திற்கான SIIMA விருதை மலையாளத்தில் பெற்றார்.
இது என்ன மாயம் (2015) திரைப்படத்திற்காக சிறந்த பெண் அறிமுகத்திற்கான SIIMA விருதை வென்றார், கீர்த்தி ரிங் மாஸ்டர் (2014), நேனு சைலஜா (2016), ரஜினிமுருகன் (2016), ரெமோ (2016) ஆகிய வெற்றிபா படங்களில் நடித்தார் . பைரவா (2017), நேனு லோக்கல் (2017), சர்கார் (2018), தானா சேர்ந்த கூட்டம் (2018). மகாநதி (2018) திரைப்படத்தில் சாவித்ரியின் பாத்திரம் அவருக்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் தேசிய திரைப்பட விருதையும் பெற்றுத்தந்தது
ஆக்ஷன் படமான தசரா (2023)க்காக அவர் மற்றொரு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார். அவரது தாயார் மேனகா தமிழ் ஐயங்கார் வம்சாவளியைச் சேர்ந்த நடிகையாவார் . இவருக்கு ரேவதி சுரேஷ் என்ற மூத்த சகோதரி உள்ளார்கள்.15 வருடத்திற்குப் பிறகு, கீர்த்தி சுரேஷ் தனது நீண்டகால காதலர் கேரளாவைச் சேர்ந்த துபாயில் வசிக்கும் ஆன்டனி தட்டிலுக்கும் கோவாவில் பாரம்பரிய தமிழ் பிராமண முறையில் நடந்த திருமண விழாவில் மணந்தார். அவரது குடும்பம் கேரளாவின் கொச்சினிலிருந்து வந்தது.
நடிகர் விஜய்யும், திரிஷாவும் கலந்துகொண்டார்கள். சூழல் இப்படி இருக்க அவர்கள் இருவரும்; உதவியாளர்கள் நான்கு பேருமென ஆறு பேர் தனி விமானத்தில் சென்னையிலிருந்து கோவாவுக்குச் சென்றதாக புகைப்படங்கள் தற்போது ட்ரெண்டாகிறது.
அதேசமயம் இந்தத் தகவலை நடிகர் விஜய் மறுக்க வில்லை.
கருத்துகள்