ஆலயத்தின் நிர்வாகம் தொடர்பான வழக்கை விசாரிக்க உரிமையியல் நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை உயர் நீதிமன்றம் உத்தரவு
ஆலயத்தின் நிர்வாகம் தொடர்பான வழக்கை விசாரிக்க உரிமையியல் நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை அமர்வு உத்தரவு
கோவில் நிர்வாகம் தொடர்பான வழக்கை உரிமையியல் நீதிமன்றம் விசாரிக்க முடியாது அது HR&CE நீதிமன்றத்தில் தான் நடந்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் ஆத்திக்காடு தெக்கூர் சிவன் கோவில் நகரத்தார் டிரஸ்ட் நிர்வாகி தணிகாசலம் செட்டியார், சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை அமர்வில் தாக்கல் செய்த ரிட் மனுவில்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஆத்திக்காடு தெக்கூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலை நகரத்தார் சமூகத்தினர் துவக்க காலத்தில் இருந்து நிர்வகித்து வருகின்றனர். இந்தக் கோவில் நகரத்தார் சமுதாயத்துக்கு தனித்துப் பாத்தியப்பட்டது என ஹிந்து சமய அறநிலையத் துறை 1982-ஆம் ஆண்டில் உத்தரவிட்டுள்ளது.
கோவில் எதிரில் அமைந்துள்ள ஊருணியைச் சுற்றிலும் உள்ளூரைச் சேர்ந்த மாற்று சமூகத்தின் 48 நபர்கள் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை சட்டப்படி அகற்றும் நடவடிக்கையை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் எடுத்துள்ளார். அதையடுத்து, சிவன் கோவில் நிர்வாகத்தை முடக்கும் செயலாக ஆக்கிரமிப்பாளர்கள் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். கோவிலில் நடைபெறும் திருமணம், காதுகுத்து போன்ற வைபவங்களின் வருமானத்தில் உரிமை கோரி திருப்பத்தூர் உரிமையியல் நீதிமன்றத்தில் சிவில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.இந்த வழக்கில் கோவில் நிர்வாகம் விளக்கமளிக்குமாறு உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
எனவே, உரிமையியல் நீதிமன்ற வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து உத்தரவிட வேண்டுமென அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கோவிந்தராஜ், திலகவதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது. மனுதாரர் தரப்பில் CRP(MD)/3054/2024 மற்றும் CMP(MD)1265/2024 ல் கண்ட வழக்கில் மூத்த வழக்கறிஞர் இராம.அருண் சுவாமிநாதன் ஆஜராகி "கோவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததால், பழிவாங்கும் எண்ணத்தில் உரிமையியல் வழக்குத் தொடரப்பட்டுள்ளது,
கோவில் நிர்வாகம் தொடர்பான வழக்கை உரிமையியல் நீதிமன்றம் விசாரிக்க முடியாது அது HR&CE சட்டத்திற்கு உட்பட்டது என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், "சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உரிமையியல் நீதிமன்றத்துக்கு, கோவில் நிர்வாகம் குறித்த வழக்கை விசாரிக்கும் அதிகாரமில்லை. கோவில் தொடர்பான வழக்கை, உரிமையியல் நீதிமன்றம் விசாரிக்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை தள்ளிவைக்கப்படுகிறது" என உத்தரவிட்டனர். அதையடுத்து District Munsif Cum Judicial Magistrate Court, திருப்பத்தூர் வழக்கு OS-71/2024 க்கு. ஆ.தெக்கூர் நீதிபதி என்ற நபர், மற்றும் காளியம்மாள், அர்ச்சுனன், தனசேகர், தொப்புலன் குமார் ஆகிய ஐந்து நபர்களுக்காக வக்கீல் - ஏ.பிரபாகர் தாக்கல் செய்த வழக்கில். எதிர்தரப்பில் இராமநாதன் செட்டியார், தணிகாசலம் செட்டியார், காந்தி செட்டியார், சாத்தப்பசெட்டியார், இராமசாமி செட்டியார், பாலாஜி, அலமேலு ஆச்சி, இராமு ஆச்சி, முத்துக்கிருஷ்ணன் செட்டியார்,சோமசுந்தரம் செட்டியார், கண்ணாத்தாள் ஆச்சி, காந்திமதி நாதன், மற்றும் துணை ஆணையர் HR&CE, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பிரதிவாதிகள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.எம்.அருண் சுவாமிநாதனுடன் அரசுதரப்பு வழக்கறிஞரும் ஆஜராகிய நிலையில் தற்போது தடை உத்தரவு கிடைத்துள்ளது.
கருத்துகள்