மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ்
டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் துணை முதலமைச்சர்களாக பதவியேற்றதையடுத்து, மகாராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. பாரதிய ஜனதா கட்சி, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 39 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். பாஜகவின் மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே, மூத்த தலைவர்கள் ராதாகிருஷ்ண விகே பாட்டீல், சந்திரகாந்த் பாட்டீல் உள்ளிட்ட 19 பேர் புதிய அமைச்சர்கள் அதேபோல் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்கள் குலாப்ராவ் பாட்டீல், தாதா பூஸ் உள்ளிட்ட 11 பேர் அமைச்சர்கள்.
அதேபோல் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஹசன் முஷ்ரிப், தனஞ்செய் முண்டே உட்பட 9 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர் மகாராஷ்டிரரா மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்க முடியும். தற்போது ஒட்டுமொத்தமாக மகாராஷ்டிர அமைச்சரவையில் 42 பேர் இடம்பெற்றுள்ளனர். புதிய அமைச்சர்களில் 33 பேருக்கு கேபினட் அந்தஸ்தும், 6 பேருக்கு இணை அமைச்சர் அந்தஸ்தும் வழங்கப்பட்டது. அமைச்சரவையில் ஒரு இஸ்லாமியர், நான்கு பெண்கள் இடம்பெற்றுள்ளனர். மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வசம் உள்துறை, சட்டம், நீதித்துறை, எரிசக்தி ஆகிய இலாகாக்கள் இருக்கும் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு நகர்ப்புற வளர்ச்சி, வீட்டு வசதி, பொதுப்பணித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்றொரு துணை முதல்வர் அஜித் பவாருக்கு நிதி, திட்டமிடல், கலால் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தற்போது மகாராஷ்டிரா மாநில சட்டமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது அமைச்சர்களுக்கு தற்போது இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வசம் உள்துறை, சட்டம், நீதித்துறை, எரிசக்தி ஆகிய இலாகாக்கள் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு நகர்ப்புற வளர்ச்சி, வீட்டு வசதி, பொதுப்பணித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்றொரு துணை முதல்வர் அஜித் பவாருக்கு நிதி, திட்டமிடல், கலால் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
பள்ளிக்கல்வித்துறை, சுற்றுலா துறை, சுரங்கங்கள், போக்குவரத்து, வேலைவாய்ப்பு உத்தரவாதம், தோட்டக்கலை மற்றும் சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகள் ஏக்நாத ஷிண்டேவின் சிவசேனா கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மருத்துவக் கல்வி, குடிமைப்பொருள் வழங்கல், விளையாட்டு, சிறுபான்மையினர் மேம்பாடு, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, வேளாண் துறை, உணவு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
கருத்துகள்