திருப்பூர் மாவட்டம் முத்தனம்பாளையம் கிராமம் ரங்கேகவுண்டம்பாளையம் ஜீவா.(வயது 28) காய்கறி வியாபாரி.
அவரது தந்தை ராஜேந்திரனை, பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டனர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதி பெற ஏற்பாடு நடக்கிறது. அதற்குத் தேவையான ஆவணங்களை வருவாய்த்துறை அலுவலகத்தில் இறப்புச் சான்றிதழ் வாங்கிய பிறகு வாரிசு சான்றிதழ் கேட்டு திருப்பூர் தெற்கு தாலுகா, நல்லூரில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அதற்காக நல்லூர் வருவாய் ஆய்வாளரான மைதிலியை அணுகியதில். வாரிசு சான்றிதழ் தரவேண்டுமானால், ரூபாய்.7,000 லஞ்சம் தர வேண்டும் எனக் கேட்டதாகத் தெரிகிறது. அந்த அளவு தன்னால் பணம் தர முடியாது என ஜீவா கூறியிருக்கிறார். அதனால் மைதிலி, ரூபாய்.2000 மாவது தரும்படி கேட்டுள்ளார். எனவே, ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் சென்ற ஜீவா, மைதிலி மீது புகாரளித்தார் .
ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் ஆலோசனையின் பேரில், ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் அறிவுரைகளின் படி, ஜீவா வருவாய் ஆய்வாளர் மாலதிக்கு பணம் கொடுப்பதாக கூறி பணத்தை, எங்கே கொண்டு வருவது எனக் கேட்டதற்கு அவர்கள் நல்லூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துக்கு பணத்தைக் கொண்டு வரும் படி கூறினாராம் அதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி ஆய்வாளர் தலைமையிலானகுழுவினர் வருவாய் ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் மறைத்து கண்காணிப்பில் இருந்த போது அங்கு வந்த ஜீவா அரசு சாட்சியுடன் லஞ்சப்பணமாக ரூபாய்.2000 வருவாய் ஆய்வாளர் மாலதியிடம் கொடுத்தார். அதை அவர் கையில் வாங்கியதும் அங்கிருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை லஞ்சம் பெற்ற கையுடன் பிடித்துக் கைது செய்யப்பட்டார். விசாரணை நடத்திய பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறைக்கு அனுப்பப்பட்டனர்
கருத்துகள்