தமிழ்நாடு என்னடா புறம்போக்கா? அதைத் தடுக்காமல் போகாது பாமக என முழங்கிய இயக்கம்.
இன்று குடும்பச் சண்டையில் அதன் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் குடும்பம் சார்ந்த மருத்துவர் அன்புமணி vs கோ.க.மணி மோதல் காரணமாக தந்தை மகன் இடையே வார்த்தை மோதல் கட்சி மோதலாகவே பொது வெளியில் வெடித்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி துவங்கிய 1988-89 காலத்திலிருந்து ஆண்டு தோறும் நடைபெறும் பொதுக்குழு டிசம்பர் மாதம் தேர்தல் ஆணையம் பதிவு அமைப்புச் சட்டம் மற்றும் துணை விதிகளின் படி வருடத்தின் கடைசியில் நடப்பது வழக்கம், கூட்டத்தில் இளைஞரணித் தலைவர் நியமனம் தொடர்பாக அதன் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸுக்கும் தலைவர் மருத்துவர் அன்புமணிக்கும் இடையே வார்த்தை மோதல்
நடந்த நிகழ்வுகள் பின்னணியில் தான் அரசியல் சூழ்ச்சி நகர்வுகள் உள்ளது. மருத்துவர் அன்புமணியின்
சகோதரி காந்திமதிக்கும் பரசுராமனுக்கும் மகனாக நிறுவனரின் மகள் வழிப் பேரனாக முகுந்தன் இருந்தாலும் கட்சியில் சேர்ந்த நான்கு மாதங்களில் எப்படி முகுந்தனை தலைவராக்கலாமென மருத்துவர் அன்புமணி பொதுக்குழுவில் கேள்வி எழுப்பவே ? “என் முடிவில் விருப்பம் இல்லாவிட்டால் விலகிக் கொள்ளலாம்” என நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் ஆவேசமாகவே பேசிய நிலையில், இது இன்று மட்டுமே நடந்த நிகழ்வுகள் அல்ல இது கடந்த நான்கு ஆண்டுகளில் நெருப்பாகப் புகைந்து, அனலாகத் தகிக்கும் நிலை என்பதைப் பலர் அறியாத நிகழ்வு. இதற்கு முக்கிய காரணம் கடந்த காலத்தில் சட்ட வழக்கறிஞர்கள் மன்ற உறுப்பினர் கோ.க.மணி மற்றும் அவரது மகன் தமிழ் குமரன் அரசியல் வளர்ச்சி தான் காரணம். அவர்கள் எப்போதும் திமுக சார்பாகவே சிந்தனை கொண்டவர்கள். ஆனால் மருத்துவர் அன்புமணி மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் சார்ந்த நிலையில் முடிவு செய்வதே ஆக குடும்ப கட்சி என திமுகவைக் கூறும் நபர்கள் தேமுதிக மற்றும் பாமகவை அறியாதவர்கள் எனலாம், கடந்த காலத்தில் பாமகவின் ஒரே முதல் சட்ட மன்ற உறுப்பினர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் யானையில் வென்றவர் வெளியேறக் காரணம் இரண்டாவதாக பாமக தனித்து நின்று நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆன கோ.க.மணி தான் ஆனால் அவரோடு வெற்றி பெற்ற தாரமங்கலம் கோவிந்தன், எடப்பாடி கணேசன், பேராசிரியர் தீரன் போன்றவர்கள் வெளியேற்றக் காரணமாக இருந்தது கோ.மணி தான்.
இவர் சந்தனக் கடத்தல் வீரப்பனின் உறவினர் ஒரு தொடக்கப் பள்ளி ஆசிரியர் இவரது மனைவி சுந்தராம்பாள் காலமாகிவிட்டார் இவர் தியாகச் செம்மல் பட்டம் அடைமொழி கொண்டு பாமகவின் செல்லப்பிள்ளை போல பார்க்கப்பட்ட நிலையில் தான் மகன் மருத்துவர் அன்புமணி அரசியல் களம் புகுந்து இளைஞர் சங்கம் நிர்வாகியாக வந்தார் அதற்கு முன்னர் சேலம் இரா.அருளும் காலம்சென்ற அரியலூர் அறிவுச் செல்வனும் இருந்து வெள்ளைச்சீறுடை மாநாடு மதுரையில் நடத்திய போராளிகள். அவர்கள் பதவியில் மருத்துவர் அன்புமணி அமர்த்தப்பட்டார்
அந்தப்பதவி தன்மகனான இன்று திமுகவின் முக்கிய புள்ளி நடத்தும் திரைப்பட நிறுவனம் சார்ந்த பொறுப்பினைக் கவணிக்கும் CEO தமிழ் குமரனுக்கு தக்கவைக்க முயற்சி செய்த கோ.க.மணிக்கு தோல்வி மட்டுமே மிஞ்சியது. கோ.க.மணி பாமகவின் அரசியல் களத்தில் ராஜதந்திர வேளைகளைச் செய்த நிலையில் வெளியேற்றப் பட்ட பலர் உண்டு அதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் தீரன். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பு.தா.இளங்கோவன் முன்னாள் மத்திய அமைச்சர் தலித் இரா.எழில் மலை, பசுபதி பாண்டியன், ஜான் பாண்டியன், முகையூர் கலிவரதன், ஓமலூர் தமிழரசு, தாராபுரம் சிவகாமி வின்சென்ட், மதுரை முருகவேல் ராஜன், அந்தியூர் கிருஷ்ணன் மற்றும் அமைப்பு செயளாலர் ஆகிய நாம் உள்ளிட்ட பலர் அடக்கம், இதில் பாதிக்கப்பட்ட பலர் உண்டு அதில் காலம் சென்ற பாக்கம் இராமகிருஷ்ணன்,
இல.க.சடகோபன்., மற்றும் நாகப்பட்டினம் எஸ் கே.ராமசாமி தற்போது சட்ட மன்ற உறுப்பினர் பண்ருட்டி வேல்முருகன் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்னுச்சாமி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் தனிப்பொறுப்பு என்.டி. சண்முகம் முன்னாள் மத்திய இரயில்வே இணை அமைச்சர் இரா.வேலு IAS (ஓய்வு) மற்றும் பால சுந்தரி, சைதை சிவா இராயபுரம் இராம. முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் உண்டு. அதன் பலனாக இவர் கடைசியாக வன்னியர் சங்கத்தின் தலைவர் காடுவெட்டி குருவுக்கு தீங்கு செய்ய மருத்துவர் ச.ராமதாஸைப் பயன்படுத்தி செய்த பல வேலைகள் காலஞ்சென்ற அண்ணன் நெற்குப்பை இராம.இராமநாதன் நன்கு அறிவார். கோ.க.மணி எரியும் தீ வெட்டிக்கு எண்ணெய் ஊற்றுவதில் கில்லாடி ஆகவே தனது பதவியை தட்டிப் பறித்து அதை ஒரே மகனுக்கு தாரை வார்த்த மருத்துவர் இராமதாஸுக்கு அவர் குடும்பத்தினர் மூலமே அரசியல் காய் நகர்த்தி தங்கை மகன் மூலம் தாய்மாமன் பதவிக்கு வேட்டு வைத்து குளிர் காய்வதை நாம் நேற்று நடந்த நிகழ்வில் அவர் நைசாக தலைவர் அன்புமணி மீண்டும் மைக் எடுக்க விடாமல் தடுக்கும் செயலைக் கண்டவர்கள் மட்டுமே அறிந்த உண்மை. இவரது செயல் இப்போது மருத்துவர் ச.இராமதாஸ் வளர்த்த பாமகவை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்கிறது. என்பது பாமகவில் அருகில் இருந்து பார்த்த பலரும் அறிவார்கள். மருத்துவர் ச.ராமதாஸால் தொடங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி 36-வது ஆண்டைக் கடந்து அடியெடித்து வைக்கிறது. அந்தக் கட்சியின் தேர்தல் பயணம் குறித்துப் பார்ப்போம்.
பிற்படுத்தப்பட்ட வன்னியர் சமூக மக்களின் இட ஒதுக்கீட்டும் போராட்டத்தில் உரிமைகள் உருவான இயக்கம். தான் வன்னியர் சங்கம். அதன் தொடர்ச்சியாக, 1989-ஆம் ஆண்டு இதே நாளில், சென்னை கடற்கரை சீரணி அரங்கில் 10 லட்சம் மக்கள் புடைசூழ பாட்டாளி மக்கள் கட்சியைத் தோற்றுவித்தார் அதில் அர்ஜுன் சிங், என்.டி திவாரி, வாழப்பாடி கூ. ராமமூர்த்தி, தராசு ஷ்யாம் உள்ளிட்ட பலர் வாழ்துரைக்க மருத்துவர் ச.ராமதாஸ். மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மக்கள், மதச்சிறுபான்மையோர் ஆகியோரை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் தங்களின் கட்சிக் கொடி, கொள்கை, நிர்வாகிகள் நியமனம் 108 ஜாதிவாரி பிரதிநிதிகள் உள்ளிட்ட விஷயங்களை வடிவமைத்தார் மருத்துவர் ச.ராமதாஸ். காரல் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் ஆகியோரை தங்களின் வழிகாட்டிகளாகவும் சமூகநீதி, சமத்துவம், ஜனநாயகம், மனித நேயம் என அறிவித்தார். பாமக தொடங்கப்பட்ட காலத்தில் தமிழகத்தின் சமூக மாற்றத்தை விரும்பும் பலர் அந்தக் கட்சியை மிகத் தீவிரமாக ஆதரித்தனர். பாமகவின் இரண்டாவது இதழான தமிழ் ஓசையில் கட்டுரைகளை ஏழுதினர். கட்சி தொடங்கிய ஆறு மாதத்துக்குள், அப்போதைய வேலூர் மாவட்டத்தில் பெரணமல்லூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டது பாட்டாளி மக்கள் கட்சி. வெற்றி பெறாவிட்டாலும் 22,000 வாக்குகளைப் பெற்றது. 1989 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் 33 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு, ஆறு சதவிகித வாக்குகளைப் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதன்பிறகு 1991 தேர்தலிலும் இஸ்லாமிய, தமிழ்த் தேசிய, அம்பேத்கரிய அமைப்புகளை இணைத்து ஒரு புதிய கூட்டணியை உருவாக்கினார் மருத்துவர் ச. ராமதாஸ்.
199 தொகுதிகளில் அந்த அமைப்பு போட்டியிட்டது பா.ம.க. ஆனால், அந்தத் தேர்தலில், பா.ம.க-வின் சார்பாகப் போட்டியிட்ட பண்ருட்டி ராமச்சந்தின் மட்டுமே வெற்றுபெற்றார். ஆனால், அந்தத் தேர்தலிலும் ஆறு சதவிகித வாக்குகளைப் பெற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது . அடுத்து வந்த 1996 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க-வுடன் கூட்டணிக்குச் செல்ல முடிவெடுத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் எழவே, பின் வாழப்பாடி கூ.ராமமூர்த்தியின் திவாரி காங்கிரஸ் மற்றும் 12 சிறிய கட்சிகளுடன் இணைந்து, 116 தொகுதியில் போட்டியிட்டு நான்கு தொகுதியில் வெற்றி பெற்றது பா.ம.க. மீண்டும் ஆறு சதவிகித வாக்குகளைப் பெற்றது. தமிழகத்தில் ஒரு கட்சி தொடங்கப்பட்டு மூன்று தேர்தலில், பிரதான இருபெரும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லாமல் ஆறு சதவிகித வாக்குகளைப் பெற்றது பா.ம.க-வின் மீது அனைவரின் கவனத்தையும் திருப்பியது. பின்னர், 1998- ஆம் ஆண்டில் அதிமுகவுடன் கூட்டணி. 5 தொகுதியில் போட்டியிட்டு 4 -ல் வெற்றி பெற்றது. கட்சிக்குக் கிடைத்த இரண்டு இணை அமைச்சர் பதவியில் முதலில் மத்திய இணை மந்திரி பதவியை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த தலித் இரா.எழில்மலைக்குக் கொடுத்தார் மருத்துவர் ச.ராமதாஸ். பிறகு, 1999 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜ.க மதிமுக, ஜனதா கூட்டணியில் இருந்து விலகிக்கொள்ள, தி,மு,க-வுடன் கூட்டணி சேரும் வாய்ப்பு உருவானது. அப்போது, ஏழு தொகுதியில் போட்டியிட்டு, ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்று, பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய மந்திரி சபையிலும் இடம் பெற்றது பா.ம.க. 2001 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து 20 இடங்களில் வெற்றி, 2004 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி என ஏறுமுகத்தையும், மத்திய சுகாதார அமைச்சர் பதவியைப் பெற்றது, 2009 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி. பிறகு 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்து, போட்டியிட்டு தர்மபுரி என்ற ஒரு இடத்தில் மட்டும் மருத்துவர் அன்புமணி வெற்றி என இறங்கு முகத்தையும் சந்தித்தது பா.ம.க.பிறகு, 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், இரண்டு திராவிடக் கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என அறிவித்து தனித்துக் களம் இறங்கியது பா.ம.க. அந்தக் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், அந்தத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட பா.ம.க-வுக்கு வெற்றி கிடைக்கவில்லை. 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது பா.ம.க. தர்மபுரியில் போட்டியிட்ட மருத்துவர் அன்புமணி மட்டும் வெற்றிபெற்றார். பிறகு, 2016 ஆம் ஆண்டு தேர்தலில், திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல், தனித்துப் போட்டியிடுவோம் என அறிவித்து அதேபோல போட்டியிட்டபோது பா.ம.க. அப்போது ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை என்றாலும், 5.36 சதவிகித சதவிகித வாக்கையும் பா.ம.கவின் மீது மக்கள் மத்தியில் சிறிதளவு நம்பிக்கையும் ஏற்பட்டது ஆனால், மீண்டும், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க, பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தது பா.ம.கவின் மீது மிகப்பெரிய விமர்சனத்தை உண்டாக்கியது..அந்தத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவும் முடியவில்லை...தொடர்ந்து, 2021 தேர்தலில், அதே கூட்டணியில், 23 இடங்களில் போட்டியிட்டு, 5 இடங்களில் வெற்றி பெற்றது.தொடர்ந்து, 2024 நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக அல்லாத தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பத்து இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை. 4.4 வாக்கு சதவிகிதத்தைப் பெற்று மாநிலக் கட்சி அந்தஸ்தையும் இழந்தது..,தொடர்ந்து நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், அதிமுக போட்டியிடவில்லை என ஒதுங்கிக்கொண்ட நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக, பாமக தேர்தலை எதிர்கொண்டது.., பாமக சார்பில் போட்டியிட்ட அன்புமணி 56,296 வாக்குகளைப் பெற்றார்..,திமுக வேட்பாளரிடம், 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்...கட்சி ஆரம்பித்து, 1989,1991,1996 என முதல் மூன்று பொதுத் தேர்தலில், ஆறு சதவிகித வாக்குகளையும் கணிசமான வெற்றியையும் பதிவு செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பாமக, அடுத்து வந்த,1998,1999,2001,2006 நான்கு தேர்தலில் நல்ல வெற்றியைப் பதிவு செய்து உச்சத்துக்குச் சென்றது. அடுத்து வந்த தேர்தல்களில் தொடர்ந்து பின்னடைவுகளைச் சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..,இனி வரும் காலங்களிலாவது மீளுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க நினைத்த பலரும் அதிர்ச்சி அடையும் விதமாக குடும்ப அரசியல் காரணமாக உடையும் நிலையில் உள்ள பாமக மீட்க வழி உண்டா இதுவே இப்போது எழும் வினா?
கருத்துகள்