இடதுசாரித் தமிழ் தேசிய சித்தாந்தத்தை முன்னெடுக்கும்
விடுதலை பாகம் இரண்டு, முதலில் சற்றே பிரசாரத்தை முன்னெடுத்தாலும் பிற்பாதியில் சுவாரஸ்யமான திரைக்கதை மொழி, தேர்ந்த அரசியல் என விடுதலைக்கான வெற்றிக் கொடியைப் பறக்க விட்டுள்ளார்இயக்குனர் வெற்றிமாறன். கம்யூனிஸம் தமிழ்நாட்டில் அதன் தாக்கம் அதிகம், அதில் காவிரி டெல்டா பகுதியில் இன்னும் அதிகம். அதில் புலவர் கலியப் பெருமாள் வாத்தியார் என்றால் இன்று வரை தெரியாதவர்கள் இல்லை, அவரின் வரலாற்று நிகழ்வுகள் சிலவற்றை விடுதலை மற்றும் பாகம் இரண்டு பேசுகிறது.
விடுதலை' முதல் பாகத்தில் கடைநிலைக் காவலரான குமரேசனால் (சூரி) கைது செய்யப்படும் தமிழர் மக்கள் படையின் தலைவர் பெருமாள் வாத்தியாரை (விஜய் சேதுபதி), மலைக்காட்டு வழியாக காவல் படை வேறு இடத்துக்கு அழைத்துச் செல்கிறது. போகும் வழியில் பெருமாள் வாத்தியார், தன் காதல் கதையையும் உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக, தான் உருவெடுத்த கதையையும் ஃபிளாஷ் பேக்கில் சொல்கிறார்.
இன்னொரு புறம் அவர் கைதை வைத்து அதிகாரவர்க்கம் வேறு விதமாகத் திட்டம் போடுகிறது. அதே சூழலில் பெருமாள் வாத்தியாரை மீட்க அவர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் காவல் படையுடன் மோதலில் ஈடுபடுகின்றனர். இதில் பெருமாள் வாத்தியார் தப்பித்தாரா ?, இல்லையா ? (ஆனால் உண்மையில் தப்பித்து மரணதண்டனையிலிருந்து அப்போதய குடியரசுத் தலைவரால் தப்பி ஆயுள் தண்டனை பெற்ற புலவர் கலியப் பெருமாள் வேறு) அதை முழுமையாகக் கூறவில்லை கதை களம் என்பது தான் இந்த விடுதலை கதை. விடுதலை படம் கீழ்வென்மணி சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது
இதில் இந்திய அரசு தனிக்கைத் துறையால் நீக்கப்பட்ட காட்சிகள் பல உண்டு. கதை உண்மைக்களத்தைக் காட்சிப்படுத்த அவை தேவை தான் என்ற போதும் அது தணிக்கைத் துறை நீக்கியதில் சித்தாந்திகள் கருத்து வேதாந்திகளுக்குப் புரியாது என்பதே ! இந்தத் திரைப்படம் கம்யூனிஸம், மற்றும் சோஷலிசம் பேசும் நபர்களுக்குப் புரியும் ஆதரவாக, ஆனால் பாசிசம் மற்றும் ஏகாதிபத்தியம், Non செக்யூலரிஸம், பேசும் நபர்களுக்குப் புரியாது எதிராகவே இருக்கும்
விஜய் சேதுபதி கையில் காம்ரேட் சிங்காரவேலர் சிலை, படத்தில் வரும் ஆறுமுகனார் இல்லம், மற்றும் சிங்காரவேலர் இல்லம் ஆகியவை. விடுதலை இடதுசாரி அரசியல் படம் என்பதால் தான் சென்சார் வேலை இங்கு அதிகம்,
இடதுசாரி அரசியலை பேசும் படம் வலது சாரிகள் மத்தியில் கொள்கை ரீதியான பயமும் கூட ஒரு கடந்த கால நிகழ்வைக் கூறுவதற்காக எடுக்கப்பட்ட டாக்குமெண்ட்டரி படமாக இருந்தால் இதில் கம்யூனிஸ சித்தாந்தக் கொள்கை கொண்ட நபர்கள் எடுத்த பாடமாகப் பார்க்கலாம். ஆனால் வர்த்தக ரீதியான பலகோடிகள் விற்பனை என்பது தான் இங்கு இலாப நோக்கில் முதலாளித்துவம். இப்படி கதை பெரும் பொருள் செலவில் எடுப்பதற்கு பதிலாக - இடதுசாரிச் சித்தாந்தப்படி எல்லாருக்கும் ஒரே சமத்துவச் சம்பளம் என்று கதாநாயகன் , இயக்குனர் முதல் லைட்ஸ்மேன்கள் வரை அனைவருக்கும் சரியாக பகிர்ந்து சமமாக சம்பளத்தைக் கொடுத்து படம் எடுத்து, அதை சம பங்காக லாபத்தை பிரிக்கும் அடிப்படைதான் இடதுசாரித் தத்துவம், அந்த தத்துவத்தைக் கொண்டே ஒரு படத்தை முதலில் இவர்கள் எடுக்க வேண்டும். எந்த ஒரு நடிகரும் எந்த இயக்குனர் முன் வருவார் பாக்கலாம்.
ஆனால் 30 கோடி சம்பளத்தை வாங்கி கொண்டு கதாநாயகன் லைட்மேன் மகனுக்கு நக்ஸல்பாரி இடதுசாரிச் சிந்தனையை பின்பற்றச் சொல்லித் தூண்டி விடுவது போல் பெரிய ஆபத்து வேறு எதுவுமில்லை.
இது போல் சினிமா இளைஞர்கள் வாழ்வை உணர்வைத் தூண்டி நாசமாக்குமே ஒழிய , எந்த நல்லதும் செய்யாது. போராடுவதற்கு ஊர் பிள்ளைகளைத் தூண்டிவிட்டு இவர்கள் பிள்ளைகள் படம் எடுக்கவும் நடிக்கவும் போய்விடுவதால் இதில் எச்சரிக்கை தேவை தான். இயக்குனர் நடிகர் பெரிய பட்ஜெட் படத்துக்கு லாபம் எதிர்பார்ப்பது வியாபார மனப்பான்மை தானே? இது என்ன புது மாதிரி கமர்ஷியல் கம்யூனிஸம் இப்படி மக்களிடம் டிக்கெட் விற்று, அதிக லாபம் பார்க்கிறது சரியானதா?கம்யூனிஸம் என்பது தனிநபர் லாபத்தை முக்கியமாக நினைக்கிறது என்ன நியாயம் படத்தில் வருகின்ற ஒரு சிறந்த வசனம்: "தத்துவம் இல்லாத தலைவர்களால் ரசிகர்களைத் தான் உருவாக்க முடியும்" என்பது
கூடவே தவறான தத்துவங்களைக் கொண்ட தலைமைகளால் சில தற்குறிகளைத் தான் உருவாக்க முடியும் என்றும் சேர்த்திருக்க வேண்டும். நாமும் கம்யூனிஸ சித்தாந்தம் அறிந்தவர்கள் தான் ஆனால் அதில் தீர்க்கமும் தெளிவும் உண்டு. கீழ்வென்மணி சம்பவம் கோபாலகிருஷ்ண நாயுடு ஏன்ற பண்ணையாருக்கு எதிராக புலவர் கலியப் பெருமாள் வாத்தியார் என்ற கம்யூனிஸ்ட் நக்சல்பாரி நடத்திய யுத்தம் அதன் வரலாறு காலம் வேறு இப்போது காலம் சூழல் வேறு. இதை தியாகு வழியில் வரலாறு கேட்டு இயக்குனர் அறிந்திருக்க வேண்டும். கீழ வெண்மணி சம்பவம் 55 ஆண்டுகளுக்கு பின்னரும் தமிழ்நாட்டில் இன்றும் அடித்தள மக்களால் பேசப்படுகிற துயர சம்பவம் . 44 ஏழைக் கூலித் தொழிலாளர்கள் ஆண் பெண் குழந்தைகளென உயிரோடு எரித்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தான் அந்த கீழ வெண்மணி துயரம். அப்போது தஞ்சாவூர் மண்ணில் மன்னர் காலம் தொட்டே உச்சரிக்கப்பட்ட பெருநில உடைமையாளர்களான கபிர்ஸ்தலம் கோவிந்தசாமி மூப்பனார் (ஜி.கருப்பையா மூப்பனார் தந்தை), பூண்டி வாண்டையார், வடபாதிமங்கலம் தியாகராஜ முதலியார், குன்னியூர் சாம்பசிவ ஐயர், நிலக்கிழார் வெண்மணி கோபாலகிருஷ்ண நாயுடு. ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் 1968-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25- ஆம் தேதி அரைப் படி' நெல் மட்டுமே கூலி உயர்வாகக் கேட்டதால் , நிலக்கிழாரான பண்ணையார் கோபாலகிருஷ்ண நாயுடுவின் அடியாட்களுக்கும் 'கூலித் தொழிலாளர்களுக்குமிடையே நடந்த மோதல் காவல் துறையினருடன் கோபாலகிருஷ்ண நாயுடுவின் அடியாட்களுடன் கூலித் தொழிலாளர்களை பழி தீர்த்த போது கீழ வெண்மணியில் இராமையா என்பவரின் குடிசையில் ஆண்கள், பெண்கள், பச்சிளம் குழந்தைகள் என உயிருக்குப் அஞ்சிப் பயந்து பதுங்கினர். ஈவிரக்கமற்று கொடூரமாக கோபாலகிருஷ்ண நாயுடு ஒட்டுமொத்தமாக அத்தனை பேரையும் தீ வைத்து எரிக்க உத்தரவிட்டதால் அடியாட்கள் படை இராமையாவின் குடிசையை தீ வைத்தது குடிசைக்குள் பதுங்கியிருந்த 44 மனித உயிர்களும் எழுப்பிய மரண ஓலம் எவர் காதிலும் விழவில்லை சாம்பலாகவே உதிர்ந்தது. தமிழ்நாட்டை அதிர்ச்சியில் உறைய வைத்த 44 பேர் கொல்லப்பட்ட கீழ் வெண்மணி சம்பவத்துக்குக் காரணமான கோபாலகிருஷ்ண நாயுடுவை நீதிமன்றம் விடுதலை செய்தது. ஆனால் கோபாலகிருஷ்ண நாயுடுவின் தலையை வெட்டி சாய்த்த இடதுசாரிகளின் போராட்டம் என்பதாகவே
55 ஆண்டுகள் கடந்த போதும் கீழவெண்மணியின் அனலும் தனலாய் தகிக்கவே!
அதன் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது தான் விடுதலை திரைப்படம். இதில் புத்திசாலித்தனமான செயல் இயக்குநர் செய்தது இதில் கோபாலகிருஷ்ண நாயுடு என்ற பண்ணையார் எதிர்ப்பு என்பதை அதே சமூகத்தின் நடிகரான விஜய்சேதுபதியை நடிக்க வைத்தார் என்பதே ஜாதியம் இன்று வரை நிலைகொண்டிருந்தன் அடையாளம் "தானாறு பாயுமுன்னு நாம நம்பி வாழ்த்திருக்க காணல் நீராகிப் போச்சே......, கையூனி மேலெழும்ப காலம் வந்து சேருமுனு, ஊர் முழுக்கப் பேசுதம்மா பேச்சே. ...........! சொல்லாத வாழ்க்கையிலே சொல்லும் படி ஒண்ணுமில்ல...
கண்ணே நா என்ன சொல்ல கண்ணீர் சிந்திப் பலனுமில்ல!. கை சீறும் காலம் வரும்..ஓ.. ஹோ.... எல்லாமே மாறி விடும் ......! காதருவி ஓடி வந்த கல்லும் மண்ணும் உருளுதம்மா....! மொட்டு வாழை கௌலி சத்தம் சேதி சொல்லி சீறுதம்மா ...மகளே என் மகளே.......! தூக்கத்திலே பொலம்புறது துக்கத்திலும் தொடருதம்மா.....!
கக்கத்திலே ராப் பகலும் கஷ்டம் நம்ம சுமக்குதம்மா.....மகளே என் மகளே....! ஆஹா இசைஞானியின் இசையுடன் பாடல்களை ரசிக்கலாம்.
கருத்துகள்