மத்திய கனிமவள புவியியல் சுரங்க அமைச்சகம் டங்ஸ்டன் சுரங்க ஆய்வை ரத்து செய்ய மத்திய அரசு முன்வரவில்லை. ஆகவே தற்காலிகமாக நிறுத்துகிறது
அதேநேரம், சர்ச்சைக்குரிய பகுதியை தவிர்த்துவிட்டு, புதிதாக திட்ட வரைபடம் தயாரிக்கத் தான் மத்திய அரசு விரும்புகிறது என்று தெளிவாகத் தெரிகிறது இந்த நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் அரிட்டாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2015 ஏக்கர் பரப்பளவு நிலப்பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனத்திற்குச் சொந்தமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்ந தமிழ்நாட்டின் சிறந்த பல்லுயிர் வாழிடப் பகுதிகளில் ஒன்றான அரிட்டாப்பட்டி பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி ஆகும். அரிட்டாபட்டி , மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்களில் இருக்கும் 193.215 ஹெக்டேர் பரப்பளவுள்ள பகுதிகளை பல்லுயிர் பாரம்பரிய ஸ்தலமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஏழு சிறிய குன்றுகள் இதில் அடங்குகின்றன. இவை 250 வகையான பறவைகளுக்கு வாழ்விடமாகும். தனித்துவம் மிக்க இந்த மலைப்பரப்பு 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்றுக் குளங்களுக்கான ஆதாரமாகும். இப்பகுதியில், 2,200 ஆண்டுகள் பழமையான தமிழி எழுத்துக் கல்வெட்டுகள், சமணர் படுக்கைகள் மற்றும் குடைவரைக் கோவில்கள் உள்ளன அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டால் அங்குள்ள பல்லுயிர் வாழிடங்களும், புராதனப் பெருமை மிக்க சின்னங்களும் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விடும் எனக் கூறி அப்பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்த முயற்சிக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்த நிலையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவைக் கூட்டத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவைக் கூட்டம் கூடிய நிலையில், டங்ஸ்டன் சுரங்கதிற்கு எதிரான தீர்மானத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்து சட்டசபையில் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் தீர்மானம் மத்திய அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டதை அடுத்து டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமையும் இடத்தை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு தற்போது பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக வெளியாகிய அறிவிப்பில்,” பொருளாதார வளர்ச்சிக்காக கனிமங்களை ஏலம் விடுவது மத்திய அரசின் கனிம வளத் துறையின் பணி. கூட்டு உரிமம், கனிமச் சுரங்கத்தை குத்தகைக்கு விட கையெழுத்திடுவது மாநில அரசால் செய்யப்படுகிற நிலையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.பல்லுயிர் பகுதிகளை தவிர்த்து விட்டு மற்ற இடங்களை ஆய்வு செய்யலாம். கனிமச் சுரங்க ஏலம் விட பல தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்ததால் மறுபரிசீலனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளஅதே நேரத்தில் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்க ஏலம் விடும் பணிகள் தொடங்கியது முதல் தமிழ்நாடு எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை. டங்ஸ்டன் ஏலம் தொடர்பாக 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதியில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் தேதி முடிவை அறிவிக்கும் வரை தமிழ்நாட்டிலிருந்து எதிர்ப்பு வரவில்லை” எனக் கூறப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள டங்ஸ்டனுக்கான புவியியல் குறிப்பாணையை 2021 செப்டம்பரில் தமிழ்நாடு அரசிடம் GSI ஒப்படைத்த போது மாநில அரசு டங்ஸ்டன் போன்ற முக்கியமான கனிமங்கள் உட்பட அனைத்து முக்கிய கனிமங்களையும் ஏலம் விட அதிகாரம் பெற்றிருந்தது. சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957, 2023 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது, இது டங்ஸ்டன் உள்பட 'முக்கியமான மற்றும் மூலோபாய கனிமங்கள்' தொடர்பான சுரங்கக் குத்தகைகள் மற்றும் கலப்பு உரிமங்களை பிரத்தியேகமாக ஏலம் விடுவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரமளித்தது.
இந்தத் திருத்தத்தின் அடிப்படையில், நாயக்கர்பட்டி டங்ஸ்டன் தொகுதி உட்பட, மாநிலத்தில் உள்ள முக்கியமான கனிமத் தொகுதிகளை ஏலம் விடுவது குறித்து, சுரங்கத் துறை அமைச்சகம், செப்டம்பர் 2023 ஆம் ஆண்டில், தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியது. ஆனால், இதற்கு பதிலளித்த தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட திருத்தச் சட்டம் குறித்து கேள்வி எழுப்பியதோடு, முக்கியமான கனிமங்களை ஏலம் விடுவதற்கான அதிகாரமும் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கோரினார்.“2021-2023 ஆம் ஆண்டில், முக்கியமான கனிமங்களை ஏலம் விடுவதற்கு அரசுக்கு அதிகாரம் இருந்தபோது, தமிழ்நாடு எதையும் செய்யவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. உண்மையில், ஏலம் ஆட்சி வந்ததிலிருந்து, கடந்த ஒன்பது ஆண்டுகளாக தமிழ்நாடு ஒரு பெரிய கனிம வளத்தையும் ஏலம் விடவில்லை.
கருத்துகள்