மின்சார இணைப்பை இடமாற்றம் செய்வதற்கு லஞ்சம் பெற்ற உதவி மின் பொறியாளர் மற்றும் மின் கம்பியாளர் கைது, காஞ்சிபுரம் மாவட்டம்
தாமல் அடுத்த மாந்தாங்கல் கிராமத்தில் பிரபாகர் (வயது 28). இவர் தன் இடத்தில் புதிதாக வீடு கட்டுவதற்காக ஏற்கனவே இருந்த மின்சார இணைப்பை இடமாற்றம் செய்ய முடிவு செய்தார்.
அதற்காக தாமல் மின்சார வாரிய இளநிலைப் செயற்பொறியாளர் அலுவலகத்தில் உதவி மின் பொறியாளர் அசோக்ராஜ் என்பவரைத் தொடர்பு கொண்டு. ஆன்லைன் மூலமாக மின் இணைப்பு இடமாற்றம் செய்ய 1550.00 ரூபாய் கட்டணமும் செலுத்தும் படி கூறியுள்ளார். அதன் பிறகு
ஆன்லைனில் பணத்தைக் கட்டி விட்டு அசோக் ராஜை தொடர்பு கொண்ட பிரபாகரிடம் , மீட்டர் மற்றும் டேரிப் கட்டண விகிதம் மாற்றித் தருவதற்கு ரூபாய் நாலாயிரம் ரூபாய் பணத்தை கம்பியாளர் சாந்தமூர்த்தியிடம் கொடுக்குமாறு அசோக்ராஜ் கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத, பிரபாகர், அது குறித்து காஞ்சிபுரம் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார், புகாரின் அடிப்படையில் அரசு சாட்சிகள் வரவழைத்து பினாப்தலீன் ரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட்டுக்களை பிரபாகரிடம் பெற்று சோதனை நடத்தி பின்னர் கொடுத்து, மின்வாரிய அலுவலகத்தில் அரசு சாட்சிகள் முன்னிலையில் கொடுக்குமாறு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கூறினர்.
அதனடிப்படையில் பிரபாகர் அன்று காலை ரசாயனப் பொடி தடவிய நோட்டுகளை கம்பியாளர் சாந்தமூர்த்தியிடம் கொடுக்கும் போது, மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் தூணைக் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் தலைமையில் மறைந்திருந்த குழுவினர்,
அசோக் ராஜ் மற்றும் சாந்த மூர்த்தி ஆகிய இருவரையும் லஞ்சம் பெற்ற கையுடன் பிடித்துக் கைது செய்தனர் பின்னர் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவர்கள் இருவரிடமும் சோடியம் கார்பனேட்டு கரைசலில் உறுதி செய்து தீவிர விசாரணை நடத்திய பிறகு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி இருவரும் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள்
கருத்துகள்