பகழ்பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸதலமான ஸ்ரீ அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மன் ஆலய ஸ்தலத்தில்
தேரடி வீதியில் நாட்டுக்கோட்டை நகரத்தார்களால் 1872 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட மெ.க அன்னதான சத்திரத்தின் 150 ஆவது ஆண்டு நிறைவு விழா முடிந்த நிலையில் ஓயா மடம் உள்ளிட்ட பல அன்னதானம் செய்து வரும் சத்திரங்கள் இது சாவடிகள் இணைந்தது, இப்படியான மடங்களில் சோழநாட்டில் மகுட வைசியர்கள் பின்னர் பாண்டிய நாட்டில் 1317 ஆம் ஆண்டில் மாலிக்காபூர் படை எடுப்புக்கு பின்னர் குடிபுகுந்த பின்னர் ஆலயங்கள் ஒன்பதைக் கொண்ட காவிரிப்பூம்பட்டினம் பிரிவு நகரத்தார்கள் ஆன்மீக திருப்பணிகள் பல செய்த செம்மல் திருப்பணியாளர் கள் சுதந்திர காலத்திற்கு பிறகு வந்த அறநிலையத் துறையின் முழு நிர்வாகத்திற்கு முன்னாள் இவர்கள் வழிநடத்திய ஆலயங்கள் ஏராளம் நினைத்தாலே மோட்சம் தரும் ஸ்ரீ அண்ணாமலையார் ஸ்தலத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில்
அவர்கள் கோரிக்கை வைக்கும் நிலைக்கு கொண்டு சென்றது அரசாங்கத்தின் ஹிந்து சமய அறநிலையத் துறையின் ஊழல் நிறைந்த செயல்பாடு தான் காரணம், அன்னதானமும், திருப்பணிகளும் கால காலமாக செய்துவரும் இவர்களுக்கு வழங்க வேண்டிய மரியாதையை எந்த அருகதையும் இல்லாமல் சம்பந்தமில்லாத பலரும் பெறுவது வேடிக்கை அது இந்த ஆண்டு போல வாடிக்கை ஆகாது தடுக்க வேண்டிய பொறுப்பு ஹிந்து சமய அறநிலையத் துறை உயர் அலுவலர்கள் செய்ய வேண்டும் என்பதே. பெரிய புராணம் இயற்றிய சேக்கிழார் பெருமான் தொண்டை மண்டல முதலியார் சமூகம் சார்ந்த குன்றத்தூரில் பிறந்தவர் அவர் நகரத்தார் பெருமக்கள் குறித்து அப்பாடலிது
"சோறு மணக்கு மடங்களெலாந்
தூய்மை மணக்குஞ் சிந்தையெல்லாம்
சுவண மணக்கு மாடையெலாந்
தொங்கல் மணக்குந் தோள்களெல்லாஞ்
சேறு மணக்குங் கழனியெலாஞ்
செல்வ மணக்கு மாடமெலாந்
தென்றல் மணக்கு மேடையெலாந்
தெய்வ மணக்குஞ் செய்யுளெலாம்
நீறு மணக்கு நெற்றியெலாம்
நெய்யே மணக்கும் காய்கறிகளெலாம்
நெருப்பு மணக்கும் யாககுண்டமெலாம்
நேய மணக்கும் வீதியெலாம்
சாறு மணக்கும் செயல்பாடு நிறைந்த
சைவ நெறி வளர்ந்த நகரத்தார்"
உள்ள மடங்களிலெல்லாம் எப்போதும் சோற்று மணமே வீசும்; அவ்வூரில் உள்ள மாந்தர்தன் சிந்தையில் எல்லாம் தூய்மையே நிரம்பியிருக்கும்; அவர்கள் அணிந்துள்ள ஆடைகளில் பொன்னே மிகுந்திருக்கும்; அவர்கள் தோள்களிலெல்லாம் மலர் மாலைகளின் நறுமணமே மிகுந்திருக்கும்;
அவ்வூரில் உள்ள வயல்களிலெல்லாம் சேற்று மணமே வீசும்; அவ்வூர் மாளிகைகளிலெல்லாம் செல்வமே நிரம்பியிருக்கும்; அவ்வூர் நந்தவனங்களில் உள்ள மேடைகளிலெல்லாம் தென்றல் வீசிக்கொண்டே இருக்கும்; அவ்வூர் புலவர்கள் பாடும் செய்யுட்களிலெல்லாம் தெய்வமணமே வீசும்; அவ்வூர் மனிதர்களின் நெற்றியெல்லாம் திருநீற்றின் மணமே வீசும்; அவர்கள் உண்ணும் காய்கறிகளிலெல்லாம் நெய்யின் மணமே வீசும்; அங்கு நிகழ்த்தப்படும் வேள்விக் குண்டங்களிலெல்லாம் எஞ்ஞான்றும் நெருப்பு கனன்றுகொண்டே இருக்கும்; அவ்வூர் வீதிகளிலெல்லாம் அன்பே மணக்கும் அதன் சாட்சியாக உலகின் மிகப்பெரிய ரிஷப வாகனம் ஸ்ரீ அண்ணாமலையாரின் வெள்ளி ரிஷப வாகனம்
இது சுமார் 120 ஆண்டுகளுக்கு முன் கோட்டையூர் மெ.க செட்டியார் குடும்பத்தினரால் செய்து வைக்கப்பட்டது.(இந்த கோட்டையூர் மெ.க குடும்பத்தில் பிறந்தவர் தான் வள்ளல் டாக்டர் அழகப்ப செட்டியார்)
100 ஆண்டுகளுக்கு முன்பு வரை நகரத்தார் பராமரிப்பில் இருந்து வந்த ஆலயத்தில் கார்த்திகைத் திருநாள் உற்சவம் மிக விமரிசையாக நடைபெற்றது. வெளியூர் மக்கள் முப்பதாயிரமென்று இரயில்வே கணக்கால் தெரிகிறது. இவ்வாண்டிலும் அவ்வளவுக்குக் குறையாதென்றே கூறலாம். கால்நடையாக வந்திருக்கிற மக்கள் முப்பதாயிரத்துக்கு மேலிருக்கும். நாட்டுக்கோட்டை நகரத்தார் ஆண் பெண் மக்கள் ஆயிரம் பேருக்கு மேலிருக்கலாம். இந்த நிலையில் சத்திரங்களில் சோறு மணக்கும் மடங்களெலாம்" என்ற மேலேயுள்ள பாடல் பொருத்தமானது ராவ்பகதூர் ஸ்ரீமான் பெ.க.அ. சித. ஜாகையில் நடைபெறும் விருந்தே முக்கியமானதாகும். நகரத்தாரின் மடமாகிய ஓயா மடத்தில் ஏழாம் திருவிழா முதல் மகேசுவர பூஜை நடைபெறுகின்றது. ஜாதி சமய பேதமின்றி வந்தவர்கட்கெல்லாம் உணவளிக்கப்படுகிறது. நகரத்தாரின் பேருதவி பெற்று நடைபெறும் அறுபத்து மூவர் மடம், பவளக் குன்று மடம் முதலிய இடங்களிலும் உணவளிக்கப்படுகின்றது. கடியாபட்டி தீ.சொ நகரத்தார் குடும்பம் பெருமக்கள் கட்டிய மண்டபம் ஆலயத்தில் உண்டு இப்படி பல திருப்பணிகள் ஆனால் ஆலயத்தில் அனுமதி அட்டை ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல் வாதிகள் தவிர்த்து அரசுப் பணியாளர்கள் குடுமபத்தினர்களின் ஆக்கிரமிப்பு தான் அதிகம். அதுவும் ஊழல் தான். ஆலயத்தில் திருப்பணியாளர்களுக்கு மரியாதை செய்வதை ஊழல் காரணமாக ஸ்கீம் போடப்பட்ட கோவில்களில் கூட அறநிலையத் துறை செய்வதில்லை காரணம் வருவாய் தனிநபர்கள் லாபம் ஒன்று தான் வேறில்லை இதை அக்னி வடிவாக வந்த சிவன் அண்ணாமலையார் தண்டித்துத் தடுத்தால் மட்டுமே ஊழல் வாதிகள் திருந்துவார்கள்.ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் விழாவில் மட்டுமே பக்தர்கள் அதிகளவில் கூடுவார்கள் ஆனால் தர்மபுரம் ஆதீனம், சூரியனார் கோவில் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம், பாதரக்குடி ஆதீனம், திருவண்ணாமலை ஆதீனம், செங்கோல் ஆதீனம், நாச்சியார் கோவில் ஆதீனம், துழாவூர் ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மீகப் பெருமக்கள் நாட்டுக்கோட்டை நகரத்தாரின் 150 ஆவது ஆண்டு நிறைவு விழாவிற்கு திருவண்ணாமலை வருகை தந்த நிலையில் தமிழ்நாட்டில் நாட்டுக்கோட்டை நகரத்தாரால் பல்வேறு புராதனக் கோவில்களில் திருப்பணிகளும் கும்பாபிஷேகமும் நித்தியபடி அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்திற்கு நகரத்தாரின் திருப்பணிகளின் பங்கு அதிகமாகவே உள்ளது. உலகிலேயே மிகவும் பிரம்மாண்டமான வெள்ளி ரிஷபம் நாட்டுக்கோட்டை நகரத்தார் பெருமக்களால் ஸ்ரீ அண்ணாமலையார் கோவிலுக்கு உபயமளிக்கப்பட்டது. தேரடி வீதியிலுள்ள மெ.க அன்ன சத்திரத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தாரால் 150 ஆண்டுகளாக தொடர்ந்து இன்று வரை தினமும் மதிய வேளையில் அன்னதானம் வழங்கப்படுகிறது.இந்தியாவில் இராமேஸ்வரம் முதல் காசி வரை பெரும்பாலான புனித ஸ்தலங்களில் நகரத்தார் பெருமக்களால் அன்னதானம் சிறப்பாக நடந்து வரும் நிலையில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் திருவண்ணாமலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தியதில்,
அவர்கள் தெரிவித்துள்ள தகவல்:-
"ஸ்ரீ அண்ணாமலையார் கோவில் நிர்வாகத்தினர் நகரத்தார்களுக்குமுறையாக கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு உள்ளே செல்லும் அனுமதி அட்டை இந்த ஆண்டு கொடுக்கவில்லை. நாட்டுக்கோட்டை நகரத்தாரால் ஸ்ரீ அண்ணாமலையார் கோவிலுக்கு வெள்ளி ரிஷப வாகனம், வெள்ளி ரதம், காமதேனு கற்பகவிருட்சம், பிச்சாண்டவர் வாகனம் மற்றும் பிரகார உற்சவ மண்டபங்கள் உள்ளிட்டவை மற்றும் ஏராளமான வாகனங்களும், நகைகளும் கோவிலுக்கு பக்தியுடன் கொடுத்துள்ளோம். கோடிக்கணக்கில் நாங்கள் ஸ்ரீ அண்ணாமலையாருக்கு செய்திருந்தாலும் நாட்டுக்கொட்டை நகரத்தாருக்கு உரிய அங்கீகாரத்தை ஹிந்து சமய அறநிலையத் துறை சார்ந்த கோவில் நிர்வாகம் தருவதில்லை. தமிழ்நாடு அரசாங்கத்திற்கும் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ஸ்ரீ அண்ணாமலையார் ஆலயத்தின் நிர்வாகத்தினருக்கும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களுக்கும் நாங்கள் வைக்கும் கோரிக்கை, தீபத் திருவிழா அன்று 100 நகரத்தார் குடும்பங்கள் திருவண்ணாமலைக்கு வந்து அண்ணாமலையாரை தரிசிப்பதற்கு தீப திருவிழாவின் போது 1000 அனுமதி அட்டை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" எனத் தெரிவித்தார்கள்.
கருத்துகள்