ஜாமீனில் வெளி வந்த மறுநாளே அமைச்சராகப் பொறுப்பேற்றது ஏன்? என செந்தில் பாலாஜிக்கு நீதிபதி ஓஹா கண்டனம்
பல வழக்குகள் நிலுவையில் உள்ள போது எவ்வாறு அமைச்சராகப் பொறுப்பேற்க முடியுமென சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்துள்ள தமிழ்நாடு மின்சாரத் துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அபே ஓஹா கேள்வி எழுப்பினார்.
சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் ஓராண்டுக்கு மேல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி அண்மையில் வெளியே ஜாமீனில் வந்ததும் ஓரிரு நாட்களில் அமைச்சரவை மாற்றப்பட்டது.
அதன்படி செந்தில் பாலாஜிக்கு அவர் ஏற்கெனவே வகித்த பதவியான மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையே திரும்ப வழங்கப்பட்ட நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை எதிர்த்து வித்யாகுமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவானது நீதிபதி அபே ஓஹா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது நீதிபதி ஓஹா, "மனுதாரரின் குற்றச்சாட்டில் நியாயமுள்ளது. பல வழக்குகள் நிலுவையிலுள்ள போது அமைச்சராக எப்படிப் பொறுப்பேற்க முடியும்? நாங்கள் ஜாமீன் கொடுத்த அடுத்த நாளே நீங்கள் அமைச்சராக பொறுப்பேற்றது எந்த வகையில் நியாயமானது ? என்ன தான் நடக்கிறது" என நீதிபதி அபே ஓஹா கேள்வி எழுப்பினார்.
அமைச்சருக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க பயப்படுவார்கள் என்றும் குறிப்பிட்ட நீதிபதி ஓஹா, இதுகுறித்த விளக்கத்தை பிரமாணப் பத்திரமாக அளிக்க அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் மாதம் 13 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அந்த துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் பணத்தை ஏமாற்றியதாக செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனையும் இருந்ததால் அமலாக்கத் துறையும் வழக்கில் உள்ளே வந்தது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது. அதைத் தொடர்ந்து அவர் வகித்த மின்சாரத் துறை, நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்ட நிலையில் சிறையில் 243 நாட்கள் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்ந்தார். அவருடைய ஜாமீனுக்கு அமலாக்கத் துறை எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி நிறுத்தி வைத்ததைத் தொடர்ந்து பல முறை ஜாமீன் மனு ரத்தான நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
அதையடுத்து அவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. இதனிடையே அமைச்சரவையில் மாற்றம் என தொடர்ந்து பேசப்பட்டு வந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்த 3 நாட்களில் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைத்தது. அதிலும் அவர் ஏற்கெனவே வகித்த மின்சாரத் துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையே வழங்கப்பட்டது. ஜாமீனில் வெளியே வந்ததும் எதற்காக செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என அவர் அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதே கேள்வியை உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.செந்தில்பாலாஜி பதினைந்து மாதங்களுக்கு மேல் ஜாமீன் பெற முடியாமல் சிறையிலிருந்தார். கிரிமினல் சதி, மோசடி மற்றும் ஊழல் உள்ளிட்ட திட்டமிடப்பட்ட குற்றங்களை உள்ளடக்கிய மூன்று FIR கள் மற்றும் பல குற்றப்பத்திரிகைகள், 2000 க்கும் மேற்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் 600 க்கும் மேற்பட்ட சாட்சிகள்.இந்த வழக்கில் முறையான அறிவிப்பை வெளியிடாத நீதிமன்றம், இப்போது சாட்சிகள் "ஒரு மாநில அமைச்சரை எதிர்க்கும் மனநிலையில் இருக்க மாட்டார்கள்" என்று தற்போது உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த விண்ணப்பத்தில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டை விசாரிக்கும் எனக் கூறியது. மேலும் இந்த வழக்கை டிசம்பர் மாதம் 13-ஆம் தேதிக்கு நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது
வேலை வாய்ப்பு மோசடியில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான கே. வித்யா குமார் என்பவர் இந்த மனுவைத் தாக்கல் செய்தார். பணமோசடி வழக்கு மோசடியுடன் தொடர்புடையது. வழக்கறிஞர் நேஹா ரதி மூலம் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் வழக்கறிஞர் ஆர்.பாலாஜி ஆஜரானார்.
தற்போதய அமைச்சர் செந்தில்பாலாஜியின் கணக்கில் ரூபாய் 1.34 கோடியும், அவரது மனைவி எஸ்.மேகலாவின் கணக்கில் ரூபாய் 29.55 லட்சமும் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாக வங்கி அறிக்கைகள் தெரிவிக்கின்றன . மேலும், அவரது சகோதரர் அசோக்குமாரிடம் ரூபாய் 13.13 கோடியும், அவரது மனைவி ஏ.நிர்மலாவிடம் ரூபாய் 53.89 லட்சமும், செந்தில்பாலாஜியின் தனி உதவியாளர் பி.சண்முகத்திடம் ரூபாய் 2.19 கோடியும் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது.
பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் அவர் ஏற்கனவே விதிக்கப்பட்ட தண்டனையின் கணிசமான பகுதியை அனுபவித்ததாக உச்ச நீதிமன்றம் முன்னர் குறிப்பிட்டது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 43D(5) மற்றும் PMLA ன் பிரிவு 45 போன்ற ஜாமீன் விதிகளில் பட்டியலிடப்பட்டுள்ள கடுமையான நிபந்தனைகளை “ஜாமீன் மறுப்பதற்கான ஒரே அளவீடாகவோ அல்லது விரைவான அரசியலமைப்பு உரிமையை மொத்தமாக மீறுவதற்காகவோ பயன்படுத்தக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தின் பெஞ்ச் கவனித்தது. விசாரணை".மேல்முறையீட்டாளரான செந்தில்பாலாஜி மீது தடுப்புக்காவல் தொடர்ந்தால், அது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவின் கீழ் அவரது அடிப்படை உரிமையை மீறுவதாக அமையும்” என செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி தீர்ப்பை எழுதிய நீதிபதி ஓகா அப்போது ஜாமீன் மனு மீதான விசாரணையில் தெரிவித்த கருத்து இது.. நீதி வழங்குவது மட்டுமல்ல, வெளிப்படையாகச் செய்யப்பட வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் முன் உள்ள அடிப்படைக் கொள்கை என்று நீதிபதி ஓஹா வலியுறுத்தினார்.
செந்தில்பாலாஜி ஜாமீன் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள சட்டத்தை மீண்டும் வலியுறுத்திய நீதிபதி ஓஹா, இந்த வழக்கில் தற்போது செந்தில்பாலாஜியை அமைச்சராக நியமிப்பதில் தவறு உள்ளது என்ற மனுதாரர் தாக்கல் செய்த மனுவின் நிலையில் மட்டுமே இப்போது கவனம் செலுத்தப்படும் என்றார்.
கருத்துகள்