மரணத்தில் சந்தேகம் உள்ளதால் பிரேதப் பரிசோதனை முடித்து செவிலியர் மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்.
புதுக்கோட்டை மாவட்ட அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் மாணவியின் மரணத்தில் சந்தேகமிருப்பதாகத் தெரிவித்து பிரேதப் பரிசோதனை முடித்த அவரது உடலை வாங்க மறுத்து இறந்த பெண்னின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட் டம் வடகாடு அருகில் உள்ள கருக்காக்குறிச்சி வடக்கு ராஜா குடியிருப்பைச் சேர்ந்த ரமேஷ் மகள் சௌமியா (வயது 20) புதுக் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் டிப்னமோ நர்சிங் 3-ஆம் ஆண்டு படித்து வந்தார். டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி இரவு வீட்டிலிருந்து மாயமானது தொடர் பாக வடகாடு காவல் நிலையத்தில் அவர் தந்தை கொடுத்த புகாரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்த நிலையில் அவரது விட்டின் அருகில் உள்ள கிணற்றில் நேற்று முன்தினம் பிரேதமாக மிதந்த மாணவியின் உடலை ஊர்மக்கள் மற்றும் காவல் துறையினர் மீட்டு பிரேத பரிசோத ணைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில்
அவரது மரணத்தில் சந்தேகமிருப்பதாகவும் அது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டுமென அவரது குடும்பத்தினர், உறவினர்கள் புதுக்கோட்டை அரசு மருந்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று காலையில் திரண்டனர். மேலும் மாணவியின் ஜாங் சார்ந்த சங்கத்தினரும் திரண்டு வந்து செவிலியர் மாணவி சாவில் இளைஞர் ஒருவருக்குத் தொடர்பிருப்பதாகவும் காதல் விவகா ரத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாமெனவும், அவரது உடலில் காயங்கள் இருப்பதாகவும் குற்றம்சாட்டினர். மேலும் மாணவியின் மரணத்தில் நீதி விசாரணை வேண்டுமெனக் கூறினர்.
மாணவியின் உடலை அவரது உறவினர்கள் வாங்க மறுத்து மருத்துவக்கல்லூரி வளாகத்திலிருந்து ஊர்வலமாகப் புறப் பட்டு தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.அந்த வழியாக வந்த பேரூந்துகள், வாகனங்கள் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும், கோரிக்கை தொடர்பாக தோஷங்களையும் எழுப்பினர். மாணவியின் புகைப்படத்துடன் கூடிய பதாகையை கையில் ஏந்தி சிலர் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்கள் பேச்சு நடத்தினர். பிரேதப் பரிசோதனை அறிக்கைவந்ததும், அடுத்தக்கட்ட நடவ டிக்கை எடுக்கப்படும் எனவும், மாணவியின் செல்போன் எண் மூலம் உரையாடல்கள் உள்ளிட்டவற்றைப் பார்த்து. உரிய விசாரணை நடத்தப் படும் என்றும், தாங்கள் தெரி விக்கும் சந்தேகங்கள் கோரிக்கையின் படியும் நடவடிக்கை எடுப்பதாகவும் காவலர்கள்
உறுதியளித்ததைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். அதே நேரத்தில் சவுமியா சாவில் சந்தேகம் தொடர்பாக சம்பந்தப்பட்ட வாலிபரை கைது செய்யும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் எனக்கூறினர். இந்த மறியல் போராட்டத் தால் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பரபரப்புடன் காணப் பட்டது. மேலும் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம்போக்குவரத்து பாதித்தது.
கருத்துகள்