மதுரை மாவட்டம் சோழவந்தான் வெற்றிலை புவிசார் குறியீடு பெற்றது பெருமைக்குரிய தாகும்.
"கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம்"... மஹாகவி பாரதியார்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா சோழவந்தான் பகுதியில் பயிரிடப்படும் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என மதுரை மாவட்ட ஊரக கல்வி மற்றும் வளர்ச்சி மையம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.மதுரை மாநகரில் சந்தைக்கு விற்பனைக்கு வரும் பொருட்களின் சிறப்புகளை விவரிக்கும், சங்க இலக்கியம் 'மதுரை காஞ்சி' பாடல்களில் வெற்றிலை குறிப்பிடப்பட்டுள்ளது."பாகனூர் கூற்றத்து சோழாந்தக சதுர்வேதி மங்கலம் என கல்வெட்டுகளில் அழைக்கப்பட்ட இவ்வூர் சோழவந்தான் என தற்போது அழைக்கப்படுகிறது. சோழாந்தகன் என்பது வீரபாண்டியனின் சிறப்புப் பெயர். சோழவந்தான்
'கொடிகால் பிள்ளைமார்' என்ற பிரிவு வெள்ளாளர் சமூகத்தின் சார்பில் வெற்றிலை பயிரிடப்படுவதாக மதுரை காஞ்சிப் பாடல்களில் உள்ளது.சோழவந்தான் எனும் பெயர் சோழர்களுக்கு அந்தகன் (எமன்) என்ற சிறப்புப் பெயரே அது. கோவீர பாண்டியன் சோழாந்தகன் எனப்பட்டான். அது மருவி சோழவந்தான் என்றானது.
வயிற்றிலிருந்து வாயுவை வெளிக்கொண்டு வரும் தன்மை பெற்றது. மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றைப் பலப்படுத்தி ஆரோக்கியம் தரும். நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுப்பதால் படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்து வர ஞாபக சக்தி கூடும்.வெற்றிலையை மெல்லுவதால், பல் ஈறுகளில் உள்ள வலி, இரத்தக் கசிவை நீக்கி, ஆட்டம் காணும் பற்களையும் கெட்டியாக்கும் ஈறுகளை வெற்றிலை தயார் செய்கிறது.வெற்றிலை பாக்கு ஸ்கிசோஃப்ரினியாவுக்கு பயன்படுத்தப்படுகிறது, இது பார்வை இழப்பு ( கிளாக்கோமா ), மோசமான செரிமானம் மற்றும் பல நிலைமைகளுக்கு வழிவகுக்கும் கண் கோளாறுகளின் குழு ஆகும், வெற்றிலையைப் பயன்படுத்துவதும் பாதுகாப்பற்றதாக இருக்கலாம். சிலர் வெற்றிலையை ஒரு பொழுதுபோக்கு மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள், இது மத்திய நரம்பு மண்டலத்தை (சிஎன்எஸ்) துரிதப்படுத்துகிறது வெற்றிலை மூளை மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தின் பிற பகுதிகளில் உள்ள சில இரசாயனங்களை பாதிக்கிறது.
வெற்றிலை மூளை மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தின் பிற பகுதிகளில் உள்ள சில இரசாயனங்களை பாதிக்கிறது. வெற்றிலைக்கு தாம்பூலம், நாகவல்லி, வேந்தன், திரையல், மெல்லிலை எனப் பல பெயர்கள் உண்டு. வெற்றிலையில், கம்மாறு வெற்றிலை, கற்பூர வெற்றிலை, சாதா வெற்றிலை போன்ற வகைகள் உள்ளது. வெற்றிலையில் அதன் இலையும் வேரும் மருத்துவப் பலன்களை கொண்டவை.
கொடி வகையைச் சேர்ந்தது, வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடியது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ‘சி’ சத்துக்கள் அதிகம். வைட்டமின்களுடன், நார்ச்சத்தும் இருப்பதால் சீதள நோய்களை நீக்கி, உடல் இறுக்கம், குடல் புண்களை குணப்படுத்துகிறது. வெற்றிலை என்பது பிப்பரேசியா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கொடி வகை இது இந்தியா மற்றும் ஆசியாவில் 'பான்' ஆக 'பாக்கு' உடன் உட்கொள்ளப்படுகிறது.
பலர் பலமான விருந்துக்குப் பிறகு வெற்றிலை போடுவர், சிலர் அடிக்கடி வெற்றிலைப் போடுவதையே ஒரு பழக்கமாகவே வைத்திருப்பர். இந்தியாவில் மத சடங்குகளின் போது தாம்பூலம் வெற்றிலை குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடிக்கிறது. வெற்றிலை என்பது அரேகா தாவரத்திலிருந்து வரும் கொட்டை. இது சில நேரங்களில் மருந்து தயாரிக்க பயன்படுகிறது. வெற்றிலை தனியாக அல்லது க்விட் வடிவில், வெட்டப்பட்ட வெற்றிலை மற்றும் பிற பொருட்களின் கலவையாக வடமாநிலங்களில் அதிக நபர்களால் உட்கொள்ளும் நிலை.வைகை ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள ஊர் சோழவந்தான்
மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரிடப்படும் வெற்றிலைகள் மிகவும் பிரபலமானவை. வண்டல் மண்ணில் பயிரிடப்படுவதால் வெற்றிலையின் சுவை, மனம் உள்ளிட்ட பிரத்யேகத் தரமானவை. குறைவான காரத்தன்மையுடைய இந்த வெற்றிலைகளை ஏராளமான மக்கள், உடல் நலன்களை பேணும் நோக்கில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். சோழவந்தான் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் சார்பில், வெற்றிலை விவசாய பாதுகாப்பு நலச் சங்கம் கடந்த 1964 ஆம் ஆண்டு தொடங்கி, செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பகுதிகளில் உள்ள விவசாயிகள், வேறு பயிர்களை சாகுபடி செய்தாலும், தங்கள் நிலத்தின் சிறு பகுதியை ஒதுக்கி அதில் வெற்றிலை பயிரிடுவதை மன்னர் காலம் தொட்டே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அவற்றை கள்ளழகர் கோவிலுக்கு கொண்டு செல்வதை பரம்பரியமாக கடைப்பிடிக்கின்றனர். பாண்டிய நாட்டில் சோழவந்தான் வெற்றிலை தான் மிகவும் சிறந்தது என்ற அடிப்படையில், ஐரோப்பியர்கள் இங்கு வந்து வெற்றியை வாங்கிச் சென்றதாக பேசும் கருத்துள்ளது.
இப் பகுதியில், சாகுபடி செய்யப்படும் வெற்றிலை தொன்மையான சிறப்புக் கொண்டவை என்பதற்குச் சான்றாக கல்வெட்டுகள், சங்க கால இலக்கியங்கள் பலவற்றில் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. சோழவந்தான் பகுதியிலுள்ள 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 'ஜனக நாராயணசாமி பெருமாள்' கோவிலில் உள்ள கல்வெட்டில் அதன் வரலாறு கூறப்பட்டுள்ளது. அதாவது, “சோழவந்தான் பகுதியில் உள்ள வெற்றிலை விவசாயிகள், தங்கள் வருமானத்திலிருந்து ஜனக நாராயணசாமி பெருமாள் கோவிலுக்கு நன்கொடை வழங்க வேண்டும். கோவிலுக்காக விவசாயிகள் செலவிடும் தொகையை, பாண்டியப் பேரரசிடமிருந்து மூன்று மடங்காகப் பெற்றுக் கொள்ளலாம்'' என்று கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்