முதலமைச்சரின் தனிச் செயலாளர்களின் துறைகள் மாற்றம் செய்து உத்தரவு.
முதலமைச்சரின் செயலாளரான அனு ஜார்ஜ் நீண்ட விடுப்பில் செல்வதால் துறைகளில் மாற்றம் செய்யப்பட்டதென அறிவிக்கப்பட்டது.முதலமைச்சரின் தனிச் செயலாளர்கள் துறைகளில் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயலாளராக பொறுப்பில் இருந்து வரும் அனு ஜார்ஜ் 136 நாள்கள் விடுப்பில் செல்கிறார் இருக்கிறார். அதன் காரணமாக நிர்வாக ரீதியாக மாற்றம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படடதன்படி, முதலமைச்சரின் தனிச் செயலாளராக உள்ள உமாநாத்திற்கு நிதி, மின்சாரம், உள்துறை, நெடுஞ்சாலை, பொதுப்பணி உள்ளிட்ட 17 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதேபோல், மற்றொரு தனிச் செயலாளராக பொறுப்பு வகிக்கும் சண்முகத்திற்கு வேளாண்மை, கூட்டுறவு, உயர்கல்வி, மருத்துவம், சட்டம் உள்ளிட்ட 16 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும், முதலமைச்சரின் இணைச் செயலாளரான லட்சுமிபதிக்கு சுற்றுச்சூழல், தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து உள்ளிட்ட 12 துறைகள் ஒதுக்கப்பட்டது. கூடுதல் தலைமைச் செயலாளர்களாக பணிப் பொறுப்பில் உயர்வு பெற்றுள்ள பெ.அமுதா, இ.ஆ.ப., முனைவர் அதுல் ஆனந்த், இ.ஆ.ப., காகர்லா உஷா, இ.ஆ.ப., செல்வி அபூர்வா, இ.ஆ.ப., ஆகியோர் முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
கருத்துகள்