போதைப் பொருள் கடத்தல் ஜாபர் சாதிக் வழக்கை விசாரித்த ஞானேஸ்வர் IPS ஐ திரும்பப் பெறுவதாக இந்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
டெல்லியில் போதைப் பொருள் கடத்திய வழக்கில் கைதான ஜாபர் சாதிக் வழக்கை விசாரித்த அலுவலர் ஞானேஸ்வர் IPS ஐ திரும்பப் பெறுவதாக இந்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு.
டெல்லியில் மத்திய போதைப் பொருள் தடுப்புக் காவல் பிரிவு மற்றும் டெல்லி சிறப்புக் காவல்படை சார்பில் நடைபெற்ற சோதனையில் 2024 பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ இரசாயன வகை போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சம்பவத்தில் ஈடுபட்ட மூவரைக் கைது செய்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளாக ரூபாய் மூவாயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டதாகவும், அதன் மொத்த மதிப்பு ரூபாய். இரண்டாயிரம் கோடி எனத் தெரிந்தது.
தொடர்பாக அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டது திரைப்படத் தயாரிப்பாளராக உள்ள அப்போதய திமுகவின் பிரமுகர் ஜாபர் சாதிக் எனத் தெரிந்தது. மேலும் இந்த கடத்தல் கும்பலுக்குத் தலைவனாக ஜாபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியான நிலையில் ஜாபர் சாதிக்கை சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினரும் கைது செய்தனர்.
மேலும் இது தொடர்பாக மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிற நிலையில் ஜாபர் சாதிக் வழக்கை விசாரித்த மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவின் விசாரணை அலுவலர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். துணை இயக்குநர் ஞானேஸ்வர் சிங் திரும்பப் பெறப்பட்டுள்ளார். அதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. முன்னதாக ஞானேஸ்வர் சிங், தமிழ்நாடு காவல்துறை அலுவலர்களுடன், ஜாபர் சாதிக் நெருங்கிப் பழகி போதைப் பொருட்களைக் கடத்தி உள்ளனர்” என்று தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து பல தரப்பினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜாபர் சாதிக் தொடர்புடைய, போதைப் பொருள் கடத்தல் வழக்கை விசாரித்து என்.சி.பி., தலைமை துணை இயக்குனர் ஞானேஸ்வர் சிங், அப்பொறுப்பிலிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளார்.
டில்லியில் ஐ.பி.எஸ்., அலுவலரான, என்.சி.பி., துணை இயக்குனர் ஞானேஸ்வர் சிங் பேட்டி அளித்த போது அவர், ஜாபர் சாதிக் விவகாரத்தில், அரசியல் உள்நோக்கத்துடன், பரபரப்பு மற்றும் புகழுக்காகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. முக்கியமான தகவல்களை மறைத்து விட்டதாகவும் கூறப்பட்டது.
ஜாபர் சாதிக் மீதான வழக்கு விசாரணையிலும், சரியான நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என, அவர் மீது சந்தேகப் பார்வையும் விழுந்தது தொடர்பாக, அவர் மீது, மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் என்.சி.பி., தலைமை இயக்கனரிடமும் புகாரளிக்கப்பட்டதையடுத்து, ஞானேஸ்வர் சிங் செயல்பாடுகள் மற்றும் வழக்கை அவர் விசாரித்த விதம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, என்.சி.பி., மேற்கு மண்டலத் தலைமை துணை இயக்குனர் மணீஷ்குமாருக்கு உத்தரவிடப்பட்டது.
அதையடுத்து, மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த விஜிலன்ஸ் பொறுப்பில் இருந்து ஞானேஸ்வர் சிங் நீக்கப்பட்டார். தற்போது அவரை, மத்திய உள்துறை அமைச்சகம், என்.சி.பி.,யில் இருந்து திரும்ப பெற்றுள்ளது. அவருக்கு புதிய பொறுப்பும் வழங்கப்படவில்லை. காத்திருக்கும் பட்டியலில் வைக்கப்பட்டார்.
கருத்துகள்