தனிப்பட்ட டிஜிட்டல் தரவு பாதுகாப்பு வரைவு விதிகள் வெளியீடு - பிப்ரவரி 18-ம் தேதிக்குள் பொதுமக்களிடம் இருந்து கருத்துகள் கோரப்படுகிறது மின்னணு - தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தனிப்பட்ட டிஜிட்டல் தரவுப் பாதுகாப்பு சட்டம் -2023-ஐ (DPDP சட்டம்) செயல்படுத்த வசதியாக தனிப்பட்ட டிஜிட்டல் தரவு பாதுகாப்பு விதிகள்- 2025- ஐ உருவாக்கியுள்ளது. தேவையான விவரங்களையும் செயல்பாட்டுக் கட்டமைப்பையும் வழங்குவதன் மூலம் டிஜிட்டல் தரவைப் பாதுகாப்பதற்கான சட்ட கட்டமைப்பை வலுப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. வரைவு விதிகள் குறித்த கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ள சம்பந்தப்பட்ட தரப்பினர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். டிஜிட்டல் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு வரைவு விதிகள்- 2025 பற்றிய விளக்கக் குறிப்பைக் காண இந்த இணைய தள இணைப்பைப் பார்க்கவும்: https://www.meity.gov.in/writereaddata/files/Explanatory-Note-DPDP-Rules-2025.pdf விதிகள் உருவாக்கத்தில் சாரல் கட்டமைப்பிற்கு இணங்க, எளிய நடைமுறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வரைவு விதிகளை அணுகவும், புரிந்து கொள்ளவும் உதவும் வகையில் எளிமைப்படுத்தப்ப...
RNI:TNTAM/2013/50347