தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் தற்காலிகமான பணியிடங்கள்
பத்தாண்டுகளுக்கு மேலாகத் தொடர் நீட்டிப்பு ஆணை பெற்று வரும் நிலையில் மேலும் தொடர்வதன் அவசியத்தை ஆராய்வதற்கு குழு அமைக்கப்பட்டது அதன் விபரம் வருமாறு :-
பள்ளிக் கல்வித்துறையில் 47,013 பணியிடங்கள் மட்டுமே ஆனால் ஒழிக்கப்படப்போகும் பணியிடங்களில் 5418 ல் ஆசிரியர் பணியிடங்கள் பிரித்துக் காட்டப்படவில்லை.
பள்ளிக் கல்வித்துறையில் முதன்மைக் கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், ஏவலர்கள் மற்றும் இரவுக் காவலர்கள் வரையிலான பல பணியிடங்கள் அந்தந்தக் காலத்தின் தேவையை முன்வைத்து 1997 ஆம் ஆண்டு முதல் தற்காலிகமாக உருவாக்கப்பட்ட நிலையில்.
2022 ஆம் ஆண்டு வரை மொத்தம் 52,578 பணியிடங்கள் தேவை எனக் கருதி தற்காலிகமாக உருவாக்கப்பட்டாலும், அதன் தேவை தொடரும் வரை அதில் பணியாற்றுவோருக்கு அரசின் முழுமையான காலமுறை ஊதியம் வழங்கப்படும். சில நேரங்களில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டு பின்னர் சிலருக்கு காலமுறை ஊதியமாக மாற்றப்பட்டதும் உண்டு.
ஒவ்வோராண்டும் இந்தப்பணியிடங்கள் இனியும் தேவைதானா என்பதைப் பொறுத்து அப்பணியிடத்திற்கு கால நீட்டிப்பு வழங்கப்படும். ஆனால் அது தேவையில்லை எனில் அப்பணியிடத்தை அரசு இரத்து செய்துவிடும். ஒவ்வோராண்டும் ஒப்புதல் வழங்கப்பட்ட பின்னரே அந்தப்பணியிடத்திற்கான ஊதியத்திற்கு நிதி ஒதுக்கப்படும். ஆனால் ஒப்புதல் காலதாமதமாகும் போது ஊதியம் உரிய காலத்தில் பெற இயலாத சூழ்நிலையும் ஏற்படும்.
இந்த நிலையில் இதுவரை ஒவ்வோராண்டும் தொடர் பணி நீட்டிப்பு செய்யப்பட்டு வந்த 52,578 பணியிடங்களில் 47,013 மட்டுமே நிரந்தரமாகத் தேவைப்படும் பணியிடங்கள் தானென இது சார்ந்து ஆராய 2022 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட குழு அறிக்கை அளித்ததன்படி, இனி இந்த 47,013 பணியிடங்களுக்கும் ஒவ்வோராண்டும் ஒப்புதல் பணி நீட்டிப்பு செய்யவேண்டிய தேவையைத் தவிர்த்து அவற்றை நிரந்தரமாகத் தேவைப்படும் பணியிடங்களாக அறிவித்து அரசாணை (ப.க.து. G.O.9 நாள் 27.01.2025) தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதே குழுவின் ஆய்வு முடிவுகளின் படி 3035 தொழிற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்கள் உட்பட 5418 பணியிடங்களுக்கு இப்போது ஒழிக்கப்பட்டு அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களில் பணிபுரிந்து வருவோர் ஓய்வு பெற்றபின் மீண்டும் அவை புதிய நபர்கள் மூலம் நிரப்பப்பட மாட்டாது, அப்பணியிடமே ஒழிக்கப்பட்டுவிடும்.
ஆகவே மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 3035 தொழிற்கல்வி ஆசிரியர்களின் பணியிடங்கள் இனி நிரப்பப்படப் போவதேயில்லை என்பதால், இனி அந்தப் பாடப் பிரிவுகளே பள்ளிகளிலிருந்து தூக்கப்படப் போகிறது என்பதும் இங்கு கவனிக்க வேண்டும். அப்பணியிடத்திற்கான தனிப்பட்ட சிறப்புத் தகுதியோடு பல ஆண்டுகளாகப் படித்து முடித்து பணிக்காகக் காத்திருப்போரின் வேலைவாய்ப்பும் தற்போது பறிபோயுள்ளது.
மொத்தத்தில் இந்த நடவடிக்கை என்பது 47,013 பணியிடங்களை நிரந்தரமாக்கும் அதிரடி அறிவிப்பாக மட்டுமே சில செய்தி ஊடகங்களில் பலூன் போல ஊதிப் பெரிதாக்காட்டப்பட்டாலும், அதில் 5418 பணியிடங்கள் ஒழிக்கப்பட்டதன் மூலம் 5418 பணியாளர்கள் பெறும் வேலைவாய்ப்புகள் ஒழிக்கப்பட்டதோடு, குறிப்பாக 3035 தொழிற்கல்வி ஆசிரியர் (Vocational Group) மற்றும் இயந்திரப் பொறியியல், விவசாயம், தையல், ஓவியம், விளையாட்டு உள்ளிட்ட ஆசிரியர் பணியிடங்கள் இந்த அரசாணை மூலம் ஒழிக்கப்பட்டதோடே தொழிற்கல்வி சார்ந்த பள்ளி மாணவர்களின் விருப்பத்திற்கும் தேவைக்கும் அது முடிவுகட்டப்பட்டசெய்தி முழுமையாகத் தவிர்க்கப்பட்டுள்ளது என்பதே விவாதத்திற்குரிய தகவலாகும்.
பள்ளிக் கல்வி இயக்குனரகத்தின் நிர்வாகத்திலுள்ள ஆசிரியர், ஆசிரியரல்லாத 47013 பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாகவும், 5418 பணியிடங்களில் பணிபுரிபவர்கள் ஓய்வு பெறும் போது நாளடைவில் அதோடு முடிவடையும் காலிப் பணியிடங்களாகவும், 145 பணியிடங்களுக்கு 31டிசம்பர்2028 ஆம் தேதி வரை தொடர்ச்சியாக நீட்டிப்பு வழங்கியும் - தற்போது அரசாணை வெளியிடப்பட்டதன் படி
பள்ளிக்கல்வித்துறை அரசாணை (நிலை) எண்.19 நாள்: 27.01.2025. உத்தரவில் கண்டுள்ளபடி பார்வையில்: காட்டப்படும்
1. அரசாணை (டி) எண்.271, நிதி (CMPC) துறை, நாள். 18.08.2022. மற்றும்
2. அரசு கடித எண்.20006/-1/2022-1,வரவு நாள். 26.09.2022, மற்றும்
3. பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் கடிதம் ந.க.எண்.055549/எல்/3/2022, நாள். 17.10.2024. மற்றும்
4. அரசாணை (2டி) எண்.155, பள்ளிக்கல்வித் துறை, நாள் .18.10.2024. ஆகியவற்றை மையமாக வைத்து திருத்தம் செய்து சேர்க்கப்பட்டு கீழ் கண்ட விபரப்படி உள்ள புதிய அரசாணையில் :-
மேலே முதலாவதாகப் குறிப்பிடப்பட்ட அரசாணையில், பத்தாண்டுகளுக்கு மேலாக தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டு வரும் ஆசிரியர், ஆசிரியரல்லாத தற்காலிகப் பணியிடங்களைத் தொடர்ந்து நீட்டிப்பதன் அவசியம் குறித்து ஆராய்வதற்கு குழு அமைத்து ஆணை வெளியிடப்பட்டது.
2. மேலே இரண்டாவதாக உள்ள கடிதத்தில், மேலே முதலாவதாக உள்ள அரசாணையின்படி, பள்ளிக்கல்வித் துறையில் பத்தாண்டுகளுக்கு மேலாக தற்காலிகமாக உள்ள பணியிடங்கள் தொடர்வதன் அவசியம் குறித்து ஆராய பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
3. மேலே இரண்டாவதாக குறிப்பிட்ட கடிதத்தின்படி அமைக்கப்பட்ட குழுவின் கூட்டம் 09.02.2024 ஆம் தேதியன்று நடைபெற்றதில் அதில் 5.வதாக பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துருவை பரிசீலனை செய்த தாகவும் அரசு அதை ஏற்று அரசாணையின் இணைப்பு 1-ல் கண்டுள்ள பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகத்தின் கீழ் பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டு வரும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத 47013 தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாகவும், இணைப்பு 2-ல் கண்டுள்ள 5418 பணியிடங்களில் பணிபுரிபவர்களின் பணி ஓய்வுக்குப் பின்னர் அது நாளடைவில் ஒழிக்கப்படும் பணியிடங்களாக (Vanishing post) என அறிவித்து, அவர்கள் பணியிலிருந்து ஒய்வு பெறும் வரை தற்காலிகப் பணியிடங்களாகத் தொடரலாம் என்றும், இந்தப்பணியிடங்களில் பணிபுரிபவர்கள் ஒய்வு பெறும் நாளின் போது இந்தப் பணியிடங்களை திருப்பி ஒப்படைக்க அனுமதி வழங்கலாம் எனவும், இணைப்பு 3- ல் கண்டுள்ள 145 பணியிடங்களுக்கு கடைசியாக தொடராணை வழங்கப்பட்டு தொடராணை முடிவடையும் நாளுக்கு அடுத்த நாள் முதல் 31.12.2028 ஆம் தேதி வரை தொடர் நீட்டிப்பு வழங்கலாமென முடிவு செய்து இந்த அரசு ஆணை வெளியிடப்படுகிறது.
மேலும் பத்தி 3 ல் வரிசை எண். (56) மற்றும் வரிசை எண். (57)-ல் குறிப்பிட்டுள்ள முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் (ஆண்) மற்றும் முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் (பெண்) ஆகிய இரு பணியிடங்களுக்கு புத்தாக்கம் (Revival) செய்து, மேலே நான்காவதாக படிக்கப்பட்ட அரசாணையில் தனிப்பட்ட ஆணை வெளியிடப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதில் பொது நீதி யாதெனில் படித்த பள்ளியில் பல்துறை ஆசிரியர்களை பார்த்த மற்றும் இலவசக் கல்வி படித்த கடைசி தலைமுறை நாம் மட்டும் தான் இனி அடுத்த தலைமுறை இந்த வரலாறு அறியாது என்பதே உண்மை.
கருத்துகள்