சிறப்புச் செய்திகள்:- ரங்கநாதன் திருப்பதி ஓம் ஸ்ரீ பிரம்மரிஷி மகேந்திரகிரி சுவாமிகளின் 8-ஆம் ஆண்டு மஹா குருபூஜை விழா
குரோதி வருடம் தை மாதம் 14-ஆம் தேதி திங்கட்கிழமை 27 ஜனவரி 2025 மஹா குருவின் பூராடம் நட்சத்திரத்தில், சித்த யோகம் கூடிய சுபதினத்தில் ஓம் ஸ்ரீ பிரம்மரிஷி மகேந்திரகிரி சுவாமிகளின்
8-ஆம் ஆண்டு மஹா குருபூஜை விழா
மதகுபட்டியில் பாகனேரி சாலையில் அமைந்துள்ள பீடத்தில்
நடைபெறுவதால் மேற்கண்ட நிகழ்வில் மஹாகுருவின் சீடர்கள். சிவனடியார்கள், ஆன்மீக மெய்யன்பர்கள்,
பக்த கோடிப் பெருமக்கள் திரளாக வருகை தந்து குருவருளும், திருவருளும் பெற்றுச்செல்ல வேண்டுமென. ஓம் ஸ்ரீ பிரம்மரிஷி மகேந்திரகிரி சுவாமிகள் அருளாசி பீட நிர்வாக அறங்காவலர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்
பக்த கோடிப் பெருமக்கள் திரளாக வருகை தந்து குருவருளும், திருவருளும் பெற்றுச்செல்ல வேண்டுமென. ஓம் ஸ்ரீ பிரம்மரிஷி மகேந்திரகிரி சுவாமிகள் அருளாசி பீட நிர்வாக அறங்காவலர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்
ஓம் ஸ்ரீ பிரம்மரிஷி மகேந்திரிகிரி சுவாமிகள் ஆசியுடன்.
காலை 6.00 மணிக்கு மங்கள இசையுடன் விழா ஆரம்பம்,
சிங்கப்பூர், மலேசியா புகழ்பெற்ற மதகுபட்டி M.காளிஸ்வரன் நாதஸ்வர குழுவினரின் நாதஸ்வர கச்சேரி
தை மாதம் 13 ஆம் தேதி 26 ஜனவரி 2025 ஞாயிற்றுக்கிழமை
மாலை 5.00 மணி,
இரவு 7.00 மணி, இரவு 8.00 மணி,
விளக்கு பூஜையும். பின்னர்
இரவு உணவும்.
சுவாமிகளின் அற்புதங்களை
பகிர்ந்து கொள்ளும்
பக்தர்களின் சொற்பொழிவுகள்
நடைபெறும்.
தை மாதம் 14 ஆம் தேதி 27 ஜனவரி 2025 திங்கட்கிழமை
காலை 8.30 மணி
யாக வேள்வி பூஜைகள் ஆரம்பம் தொடர்ந்து கோ பூஜையும் நடைபெறும்.
காலை 8.40 மணி பக்தர்களுக்கு
காலை உணவு பூர்ணாகுதியும் தொடர்ந்து சுவாமிக்கு தீபதூப ஆராதனைகள் நடைபெறும்.
காலை 10.00 மணி தேவாரம், திருவாசகம். முற்றோதல்
காலை 10.30 மணி பாராயணம்.
காலை 10.50 மணி அன்னக்கொடி ஏற்றுதல், நண்பகல் 11.00 மணி
மகேஸ்வர பூஜையும் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும். பீடத்தில் சர்வசாதகம் மயில்ராயன் கோட்டை நாட்டுக் குருக்கள் வடவன்பட்டி G.சிவசுப்ரமணியக் குருக்கள் நடத்தி வைக்கும் நிலையில் பக்தர்கள் மற்றும் மெய்யன்பர்கள் வந்து கலந்து கொண்டு வழிபட்டு ஆசி பெற்றுச் செல்ல வேண்டுமாய்
விழா ஏற்பாடுகளை கவணிக்கும் திருப்புத்தூர் இராமலிங்கம் சேர்வை அழைப்புடன் தெரிவித்தார்.
விழா ஏற்பாடுகளை கவணிக்கும் திருப்புத்தூர் இராமலிங்கம் சேர்வை அழைப்புடன் தெரிவித்தார்.
மகேந்திரகிரி மலை என்பது தென்தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், பணகுடி பேரூராட்சிக்கு உட்பட்ட, காவல்கிணறு கிராமத்தின் அருகிலுள்ள மலை மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள இவ்விடத்தின் உயரம் 1654 மீட்டர் (5427 அடி) ஆகும். இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) நடத்தும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம் ஒன்று இந்த மலையடிவாரத்தில் செயல்படுகிறது. அது நாகர்கோவில் பகுதியில் மிக உயர் மலைச்சிகரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.இஸ்ரோ ப்ராபல்ஷன் காம்ப்ளக்ஸ் , இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஏவுகணை வாகனம் மற்றும் செயற்கைக்கோள் உந்துவிசை அமைப்புகளுக்கான சோதனை வசதி , இந்த மலையின் கீழ் சரிவுகளில் அமைந்துள்ளது.
மகேந்திரகிரி காப்புக் காடுகள் என்பது கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகாவில் உள்ள காப்புக்காடாகும் . மத்வ ஹிந்து பிரிவின் துறவி ஸ்ரீ வாதிராஜ தீர்த்தர் தனது புனித யாத்திரையான தீர்த்த பிரபந்தத்தில் மகேந்திர பர்வதத்தை (மகேந்திர கிரி) பற்றி விவரித்துள்ளார். நமது சித்தர் ஓம் ஸ்ரீ பிரம்மரிஷி மகேந்திரகிரி சுவாமிகள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அரசர் வழி வந்த மஹான் என்பது அவரை நெருங்கி அருள் பெற்ற பலரது வாக்கு, சித்தர் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார் அதில் கண்டனூர் சாமி, கணக்கன்பட்டி சாமி என இன்னும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
கருத்துகள்