முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கந்தர் மலையில் சிக்கந்தர் கந்தூரி ஹிந்து முன்னணித் தலைவர் அறிக்கை

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் புராதண காலக் குடைவரைக் கோவில்.



குகைக்குள் கருவறை சுற்றி வர முடியாது. முருகன் திருமணக் கோலத்தில் பீடத்தில் அமர்ந்திருக்க, கீழே ஒரு புறம் மணப்பெண்ணான தேவயானை அமர்ந்திருக்க மறுபுறம் நாரதர்! (இதை இந்திரன் எனச் சொல்வோருமுண்டு! ஆனால் முனிவர் போல் தாடியும் உண்டு, பின்னாளில் "ஒட்டு வேலைகளும்" உண்டு) 

மேலே பறப்பது போல் பிரபையில் சூரிய சந்திரர்கள். விளக்கொளியில் இன்னும் நுட்பமாகக் கருவறையை உற்று நோக்கினால் விநாயகர், அஸ்வினி குமாரர்கள், அமரர்கள் எனப் பலருமுண்டு! மிக முக்கியமாக துர்க்கை அன்னையும், சிவபிரானும், பெருமாளும் கருவறையிலுள்ளார்கள்.


இப்படிச் சுற்றம் சூழ திருமணக் கோலமாகவே கருவறை அமைந்துள்ளது!

இங்கு முருகப் பெருமானுக்கு அபிஷேகம்  கிடையாது! அனைத்து அபிஷேகங்களும் திருக்கை வேலுக்கே! தமிழ்ச்சங்கத்தின் தலைமைப் பெரும் புலவராக மீனவரான நக்கீரர் திருமுருகாற்றுப்படையைச் செய்ததும் இங்கு தான்!



கொடிமரத்தின் முன்பு மூன்று வாகனங்கள் எலி, நந்தி, மயில் என மூன்றும் முன்னிற்கும்!

அதைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் அனைத்து தெய்வங்களுக்கும் அவரவர் சன்னிதிகளைக் காணலாம்! எல்லாமே சிறு குறுகலான குடைவரைகள் தான்!

சிவபெருமான் பரங்கிரி நாதராய் எழுந்தருளியுள்ளார். அம்மை ஆவுடை நாயகி.


திருப்பரங்குன்றத்து ஈசனைச் சம்பந்தரும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் தேவாரத்தில் பாடியுள்ளனர்!       


    தற்போது மலை மீதுள்ள தர்ஹாவில் ஆடுகள் பலியிட்டு  கந்தூரி கொடுப்பதற்கு காவல்துறை அனுமதி அளிக்காததால்  இஸ்லாமிய அமைப்பான எஸ்டிபிஐ மற்றும் ஐக்கிய ஜமாத் ஆகிய



அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மைலம் பட்டி சையது அபுதாகிர் (வயது 53) தனது குடும்பத்தினருடன் திருப்பரங்குன்றம் மலை மேல் அமைந்துள்ள சிக்கந்தர் பாதுஷா சமாதியில் அதாவது தர்ஹாவில்  ஆடு பலிகொடுத்து கந்தூரி கொடுப்பதற்கு கடந்த வாரம் ஆட்டுக் கிடாயுடன் வந்தபோது மலை மேலுள்ள திருப்பரங்குன்றம் சிக்கந்தர்  சமாதியான தர்ஹாவுக்குச் செல்லும் வழியில் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்கள் ஆட்டுக் கிடாயுடன் செல்ல அனுமதி இல்லை எனக் கூறியுள்ளார்.


ஆகையால் அருகிலிருந்தவர்கள் பள்ளிவாசல் மற்றும் இதர இஸ்லாமிய அமைப்புகளுக்கு தகவல் கூறிய நிலையில், ஜனவரி மாதம் 6 ஆம் தேதி திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்ஹா அதாவது சமாதி செல்ல மற்றும் அவரது நேர்த்திக்கடன் நிறைவேற்றம் செய்யத் தடை விதித்தனர் என காவல்துறை மற்றும் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியரைக் கண்டித்து, எஸ்டிபிஐ, மற்றும் ஐக்கிய ஜமாத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் ஒன்று சேர்ந்து திருப்பரங்குன்றத்தில்




ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதால் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 300க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்தனர். பின்னர் காவல்துறையினர் நடத்திய பேச்சு வார்த்தையில் அமைதியாகவே கலைந்து சென்றனர். மதுரை மாவட்டம் ஆறு படை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை எனக் கூறி மதக் கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கும் இஸ்லாமிய அமைப்புகளை எதிர்த்து, ஹிந்து முன்னணி சார்பில் மக்களைத் திரட்டி மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும்’ என அதன் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் எச்சரித்துள்ளார்.




ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா .சி. சுப்பிரமணியம் RSS சார்ந்தவர்,  கோயம்புத்தூர் மாவட்டம் பல்லடம் தாலுகா வாய்ப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   எந்த உரிமையும் இல்லாத முஸ்லிம் அமைப்பினர், திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்றும், அங்குள்ள தர்ஹாவில் ஆடு வெட்டிக் கந்தூரி செய்வோம் எனவும், கூறி வருகின்றனர். இதுபோன்ற செயல்களை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.




தவறும்பட்சத்தில் போராட்டம் முன்னெடுக்கப்படும்" என்று ஹிந்து முன்னணி எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் பள்ளிவாசல் செயலாளர் ஆரிப்கான் கடந்த மாதம் செய்தியாளர்களுக்கு ஒரு பேட்டி தந்திருந்தார். அதில், "இராஜபாளையத்திலுள்ள மலப்பட்டி சையது அபுதாகிர் தன் குடும்பத்திருடன் சேர்ந்து கந்தூரி நேர்த்திக்கடன் செலுத்த ஆடு வெட்டுவதற்காக, ஆட்டைக் கொண்டு வந்தார். பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர் ஆடு, கோழி பலியிடக் கூடாது என்று சொல்லி அவர்களை தடுத்துள்ளனர்.




இது தொடர்பாக உத்தரவு உள்ளதா? எனக் கேட்டதற்குத் தரவில்லை, சில வருடங்களாகவே திருப்பரங்குன்றம் மலையை வைத்து சில அரசியல் நடைபெறுகிறது.  1920 ஆம் ஆண்டில் லண்டனில் நடைபெற்ற வழக்கில் போது இந்த மலை எங்களுக்கெனத் தீர்ப்பளிக்கப்பட்டது. இப்படி ஒவ்வொரு விஷயமும் நாங்கள் நீதிமன்றத்திற்கு சென்று எங்கள் உரிமைகளை வாங்கி வருகிறோம். நாகூர், கோரிப்பாளையம் போல இங்கும் 400 ஆண்டுகளாக ஆடு வெட்டி கந்தூரி வழிபாடு நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயமும் திமுக அரசிற்கு ஆதரவளித்ததால் அரசு அலுவலர்கள் எதிர்க்கிறார்களா? எனத் தெரியவில்லை" எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தான் திருப்பரங்குன்றத்தில் அன்று இஸ்லாமியர்கள் நடத்தியிருந்த போராட்டம், மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கிய நிலையில், அந்த விவகாரத்துக்கு ஹிந்து முன்னணி சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.. இதுகுறித்து ஹிந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா. சி சுப்ரமணியம் கண்டன அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:- "முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடு திருப்பரங்குன்றம். ஹிந்துக்களின் புனித ஸ்தலமான மலை, முருகன் குன்றம் என அகநானுாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமுருகாற்றுப்படை, கலித்தொகை, மதுரைக் காஞ்சி, பரிபாடல் போன்ற பக்தி இலக்கியங்களிலும் இடம் பெற்றுள்ளது.





திருப்பரங்குன்றம் மலை யாருக்குச் சொந்தம்? என்ற பிரச்னை வந்தபோது, 'மலை முழுதுமே திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குச் சொந்தமானது' என, லண்டன் பிரிவியூ கவுன்சில் தீர்ப்புக் கூறியுள்ளது. அதன் அடிப்படையில் நீண்ட காலமாக மலை மேலுள்ள தீபத்துாணில் கார்த்திகைத் தீபம் ஏற்றப்படுகிறது. தீபம் ஏற்றுவதைத் தடுத்த இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக அப்போதிருந்த அரசு செயல்பட்டதால், 1996 ஆம் ஆண்டு, உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், குன்றிலுள்ள தீபத்துாணில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டது. இருப்பினும், ஹிந்து அறநிலையத்துறை, மோட்ச தீபம் ஏற்றுமிடத்தில் தீபம் ஏற்றி வருகிறது. தற்போது எந்த உரிமையும் இல்லாத முஸ்லிம் அமைப்பினர், திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்றும்,


அங்குள்ள (சமாதி) தர்ஹாவில் ஆடு வெட்டி கந்துாரி செய்வோம் எனவும், கூறி வருகின்றனர். இதுபோன்ற செயல்களை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் போராட்டம் முன்னெடுக்கப்படும்" எனக் கூறியிருக்கிறார் திருப்பரங்குன்றம் எனும் பரங்குன்றமும், பரம்புமலை எனும் கொடுங்குன்றமும் படையெடுப்பு ஆட்சி மாற்றங்களால் ஏற்பட்ட வரலாற்றுச் சிதைவுகள் காரணமாக மலையை சிக்கந்தர் மலையாக மாற்றவும்,  கடவுள் முருகப்பெருமானின் மலையை அபகரிக்கவும் ஆக்கிரமிக்கவும், ஹிந்து முஸ்லிம் மதக் கலவரத்தை உண்டாக்கவும் மிகப்பெரிய சதித் திட்டத்தோடு சில அமைப்புகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இதை தடுப்பது குறித்தும், தொடர் "போராட்டம் நடத்துவது குறித்தும்  ஜனவரி மாதம்.12 ஆம் தேதியில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. எனக் கூறினார். புண்படுத்துவதோடு, ஹிந்துக்களின் வழிபாட்டு உரிமையையும், மரபுகளையும் பறிக்கும் செயல்.


தற்போது திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் கந்தர்மலையை சிக்கந்தர் மலை என்று அழைப்பதும், காலண்டரில் சிக்கந்தர் மலை என்று அச்சிடுவதும், அவர்களது விளம்பரங்களில் சிக்கந்தர் மலை 'எனப் போஸ்டர் அடித்து ஒட்டுவதும், காசிவிஸ்வநாதர் கோவிலுக்குச் செல்லும் பக்தர்களை தடுப்பதுமாக சில அமைப்புகள் போட்டி போட்டுச் செயல்படுகின்றன. இதுகுறித்து ஹிந்து முன்னணியின் மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் தெரிவித்ததாவது: திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோவிலுள்ளது. பழநி ஆண்டவர் கோவில் மலைப் பாதை வழியாக காலகாலமாக காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு வேல் எடுத்துச் செல்லப்படுகிறது.

மலையடிவாரத்தில் குடி 'கொண்டிருக்கும் முருகப்பெருமானின் தலைக்கு மேல் 'நாங்கள் ஆடு வெட்டுவோம்' என்று சொல்வது முருகப்பெருமானை இழிவுபடுத்தி அவமானப்படுத்தும் செயல். காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்லும் பக்தர்களின் மனதை புண்படுத்தும் செயலானாலும் தொடர்ந்து பொய்யான காரணங்களைக் கூறி பிரசாரம் செய்து வருவதாக' தெரிவித்துள்ளார். இதற்கிடையே திருப்பரங்குன்றம் கந்தர் மலை புனிதத்தை காக்கும் வகையில் ஜனவரி மாதம்.12 ஆம் தேதியில் காலை 10:00 மணிக்கு ஹிந்து அமைப்புகள், பக்தர்கள், பல்வேறு கட்சியினர் பங்கேற்கும் ஆலோசனைக்கூட்டம் 'நடக்கிறது. இதில் ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.                                                                -விளம்பரம்-

                          -விளம்பரம்-
எனத் தெரிவித்துள்ளார்கள்.இந்த நிலையில் இதை மறுத்துள்ள தமிழ்நாடு அரசின் சமூக ஊடக சரிபார்ப்பகம், 'இது முற்றிலும் பொய். தர்காவில் ஆடுகளை பலிகொடுப்பது தொடர்பாக நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவிற்கு சென்று வழிபட எந்தத் தடையுமில்லை. ஆனால் சில நாட்களுக்கு முன் ஆடு பலி கொடுக்க இராஜபாளையம் மிலாம்பட்டி சையது அபுதாகீர் வயது 53, என்பவர் முயற்சித்தார். காவலர்கள் தடுத்தனர். இதைகண்டித்து எஸ்.டி.பி.ஐ., கட்சி மற்றும் சில இஸ்லாமிய அமைப்புகள் தர்காவில் 'முஸ்லிம்கள் தொழுகை நடத்த காவல்துறை அனுமதி மறுப்பதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.


இது இஸ்லாமிய துறவியான சுல்தான் சிக்கந்தர் பாதுஷா ஷஹீதின் கல்லறையுடன் ஏர்வாடியைச் சேர்ந்த பாதுஷா சுல்தான் சையத் இப்ராகிம் ஷாஹீத் லேப்ஸ், இஸ்லாம் மதத்திற்கு மாற மறுத்த மன்னன் திருப்பாண்டியனை எதிர்த்து மதுரை மாகாணத்தை வென்று , சுல்தான் சிக்கந்தர் பாதுஷாவை மதுரையின் பேரரசனாக்கினார்.                                                             -
விளம்பரம்-
                            -
விளம்பரம்-
பொது ஆண்டு 1268 முதல் 1310- ஆம் ஆண்டு வரையில் மதுரை பாண்டிய மன்னன் மாறவர்மன் குலசேகரபாண்டியன் ஸ்ரீ மீனாக்ஷி சோமசுந்தரர் திருக்கோவிலுக்குப் பலப்பல திருப்பணிகளைச் செய்துள்ளார் குலசேகரபாண்டிய மன்னனின் மனைவியர்  இருவர் அவர்களில் முதல் மனைவி மகன் சுந்தர பாண்டியன் மற்ற மனைவி மகன் வீரபாண்டியன் என இரு இளவரசுகளாவர். இவர்கள் ஆட்சிப் பொறுப்பிற்குப் பின் மதுரை மூன்று ஆண்டுகள் வளர்ச்சியற்ற, அதேசமயம் பொறுப்பற்ற முறையில் ஆட்சி நடந்தது என்றே கூறலாம்.

இவ்விரு மன்னர்களின் பகை மற்றும் ஒற்றுமைக்குறைவினால் மாற்றாரால் எளிதாய் மதுரையைக் கைப்பற்றக் காரணமாய் இருந்ததெனலாம். இந்தியாவை ஆண்ட மிகப்பெரிய பேரரசுகள் முகலாய பேரரசும், மௌரிய பேரரசும் தான். ஆனால் அவர்களின் இராஜ்ய வரைபடத்தைப் பார்க்கும் போது அதில் தமிழ்நாடும், கேரளாவும் ஒருபோதும் இருந்ததில்லை. இதற்கு நம் மன்னர்களின் வீரம், புவியியல் அமைப்பு, நட்பு என பல காரணங்கள் உள்ளது.

தென்னிந்திய வரலாற்றை  மாலிக்கபூர் படை எடுப்பை வைத்து முன்பு, பின்பு எனக் கூடப் பிரிக்கலாம். ஏனென்றால் தென்னிந்தியா வரை படையெடுத்து வந்த ஒரே டெல்லி சுல்தானின் படைத் தளபதியே மாலிக்கபூர் ஆவான். பிறப்பால் ஹிந்துவாக இருந்து பிற்காலத்தில் அலாவுதீன் கில்ஜியின் ஆசை நாயகியாகவும்,  படைத்தளபதியாகவும் (திருநங்கை) இருந்தவன்.


பொது ஆண்டு 1311 ஆம் ஆண்டில் காஷ்மீர் முதல் இராமேஸ்வரம் வரை உள்ள அகண்ட பாரதத்தை, தன்னுடைய ஹொசூர் (எஜமான்) காலனி  ஆதிக்கத்தில் கொண்டு வந்தவன். அப்படிப்பட்ட மாலிக்கபூர் கடைசியாக வெறியாட்டமாடிய பகுதி தான் பாண்டிய நாட்டின் இன்றைய மதுரை.!


பொது ஆண்டு 1311ஆம் ஆண்டு மதுரையில் பாண்டிய மன்னர்களிடையே ஏற்பட்ட சகோதர யுத்தத்தைப் பயன்படுத்திக் கொண்டு மாலிக்கபூர் தன்னுடைய கொடும்படையுடன் மதுரைக்குள் நுழைந்தான். அப்போது அவரை எல்லையில் எதிர்த்து உயிர் நீத்த கள்ளர் தளபதி கீழக்குயில்குடி வீரத்தேவர் என்பவருக்கு நடுகல் எழுப்பி இன்றும் அவரது வாரிசுதாரர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

மதுரையைத் தாக்கி பின்பு மதுரை திருப்புவனம் வழியாக திருப்பத்தூர் ஆலய ராஜகோபுரம் இடித்து, சூரைக்குடியை சூரையாடி, தேவகோட்டை, திருவாடனை, இராமேஸ்வரம் என தான் செல்லும் வழிகளிலுள்ள கோவில்களைச் சேதப்படுத்திக் கொண்டே 96 ஆயிரம் மணங்கு பொன்னும் பொருளையும் கொள்ளையிட்டுச் சென்ற படைத் தளபதி மாலிக்கபூர்.

அப்போது திருப்புவனம், திருப்பத்தூர், தேவகோட்டை, புதுக்கோட்டை பகுதி வாழ் கள்ளர் படைப்பற்றுகளை வீழ்த்திக் கொண்டே சென்றுள்ளான் மாலிக்கபூர்.


ஏனென்றால் மேலே குறிப்பிட்ட ஊர் மற்றும் நாடுகளில் கள்ளர் படைகள் (வில்லவர்கள், களப்படை) சுந்தர பாண்டியத்தேவரால் காவலுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மாலிக்கபூர் சென்ற வழித்தடம் அத்தனையும் தன்னாட்சிக் கள்ளர் நாடுகளே ..!


எனவேதான் ஒவ்வொரு கள்ளர் பற்றையும் கருவறுத்தே முன்னோக்கி சென்றுள்ளான்.  மாலிக்கபூருக்கு பின்பு அவரது அடிமைகளில் ஒருவனை மதுரையின் டெல்லி சுல்தான் பிரதிநிதியாக நியமித்து விட்டு மீண்டும் டெல்லிக்கே சென்று விட்டான் மாலிக்கபூர். அதற்குப் பின் பொது ஆண்டு 1335 ஆம் ஆண்டில் ஜலாலுதீன் ஆஷாம் கான் என்பவர் டெல்லியிலுள்ள துக்ளக் ஆட்சியை உதறி, மதுரையை தன்னாட்சியாக அறிவித்து அவருக்கு பின்பு ஏறக்குறைய 43 வருடங்கள் மதுரையை ஆட்சி புரிந்துள்ளனர்.



அந்த 43 வருடங்களில் திருப்பத்தூர், திருப்புவனம், திருப்பரங்குன்றம், காரைக்குடி, தேவகோட்டை, திருப்பூர், கோயம்புத்தூர், புதுக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்த பெரும்பாலான சைவ, வைணவத்  திருக்கோவில்கள் மேலும் சேதப்படுத்தப்பட்டன. அக்காலகட்டத்தில் மதுரை சுல்தான்களுக்கு எதிராக கலகம் செய்த சூரைக்குடி கள்ளர் குல விஜயாலயத்தேவர் தலைமை கொண்ட கள்ளர் படைப்பற்று உள்ளிட்ட பகுதிகளே மிகுந்த பாதிப்பைச் சந்தித்தது. 
.



பள்ளிவாசல் செயலாளர் ஆரிப்கான் கடந்த மாதம் செய்தியாளர்களுக்கு ஒரு பேட்டி தந்ததில், "ராஜபாளையம் மலப்பட்டி சையது அபுதாகிர்  தன்னுடைய குடும்பத்தினருடன் சேர்ந்து கந்தூரி  நடத்த அனுமதிக்க வில்லை


சில வருடங்களாகவே திருப்பரங்குன்றம் மலையை வைத்து அரசியல் நடைபெறுகிறது.1920 ஆம் ஆண்டில் லண்டனில் நடைபெற்ற வழக்கின் போது இந்த மலை எங்களுக்கு என தீர்ப்பளிக்கப்பட்டது. இப்படி ஒவ்வொரு விஷயமும் நாங்கள் நீதிமன்றத்திற்கு சென்று எங்கள் உரிமைகளை வாங்கி வருகிறோம். நாகூர் கோரிப்பாளையம் போல இங்கும் 400 ஆண்டுகளாக கந்தூரி வழிபாடு நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயமும் திமுக அரசிற்கு ஆதரவளித்ததால் அதிகாரிகள் எதிர்க்கிறார்களா எனத் தெரியவில்லை" என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தான் ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கண்டன அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் தெரிவித்திருப்பதாவது "முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடு திருப்பரங்குன்றம். ஹிந்துக்களின் இந்த புனிதத்தலம் உள்ள மலை, முருகன் குன்றம் என்று அகநானுாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமுருகாற்றுப்படை, கலித்தொகை, மதுரைக் காஞ்சி, பரிபாடல் போன்ற பக்தி இலக்கியங்களிலும் இடம் பெற்றுள்ளது.

திருப்பரங்குன்றம்: மலை யாருக்குச் சொந்தம்? என்ற பிரச்னை வந்தபோது, 'மலை முழுதுமே திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குச் சொந்தமானது' என, லண்டன் பிரிவியூ கவுன்சில் தீர்ப்பு கூறியுள்ளது. அதன் அடிப்படையில் நீண்ட காலமாக மலை மேல் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. தீபம் ஏற்றுவதை தடுத்த இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக அரசு செயல்பட்டதால், 1996 ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், குன்றில் உள்ள தீபத்துாணில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டது. இருப்பினும், ஹிந்து அறநிலையத்துறை, மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றி வருகிறது.தற்போது எந்த உரிமையும் இல்லாத முஸ்லிம் அமைப்பினர், திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்றும், அங்குள்ள தர்காவில் ஆடு வெட்டி கந்துாரி செய்வோம் எனவும், கூறி வருகின்றனர். இதுபோன்ற செயல்களை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் போராட்டம் முன்னெடுக்கப்படும்" என்று காட்டமாக கூறியிருக்கிறார்


பரங்குன்றமும்,  கொடுங்குன்றமும் படையெடுப்பு ஆட்சி மாற்றங்களால் ஏற்பட்ட வரலாற்றுச் சிதைவுகள் மலையை சிக்கந்தர் மலையாக மாற்றவும் நமது முப்பாட்டன் முருகப்பெருமானின் மலையை அபகரிக்கவும் ஆக்கிரமிக்கவும், ஹிந்து முஸ்லிம் மத கலவரத்தை உண்டாக்கவும் மிகப்பெரிய சதி திட்டத்தோடு சில அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இது ஹிந்துக்கள் மனதைப் புண்படுத்துவதோடு, ஹிந்துக்களின் வழிபாட்டு உரிமையையும், மரபுகளையும் பறிக்கும் செயல். எனவே இதைத் தடுப்பது குறித்தும், தொடர் "போராட்டம் நடத்துவது குறித்தும் தான் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது" என்றார்.

தற்போது திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் கந்தர்மலையை சிக்கந்தர் மலை என்று அழைப்பதும், காலண்டரில் சிக்கந்தர் மலை என்று அச்சிடுவதும், அவர்களது விளம்பரங்களில் சிக்கந்தர் மலை 'என்று போஸ்டர் அடித்து ஒட்டுவதும், காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களை தடுப்பதுமாக சில அமைப்புகள் போட்டி போட்டு செயல்படுகின்றன.இதுகுறித்து அக்கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் கூறியதாவது:- "திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோவிலுள்ளது. பழநியாண்டவர் கோவில் மலை பாதை வழியாக காலகாலமாக காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு வேல் எடுத்து செல்லப்படுகிறது.

மலை அடிவாரத்தில் குடி 'கொண்டிருக்கும் முருகப்பெருமானின் தலைக்கு மேல் 'நாங்கள் ஆடு வெட்டுவோம்' என்று சொல்வது முருகப்பெருமானை இழிவுபடுத்தி அவமானப்படுத்தும் செயல். காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் மனதை புண்படுத்தும் நோக்கில் தொடர்ந்து பொய்க் காரணங்களை கூறி பிரசாரம் செய்து வருவதாக' தெரிவித்துள்ளது. இதற்கிடையே திருப்பரங்குன்றம் கந்தர் மலை புனிதத்தை காக்கும் வகையில் ஜனவரி மாதம்.12ஆம் தேதி காலை 10:00 மணிக்கு ஹிந்து அமைப்புகள், பக்தர்கள், பல்வேறு கட்சியினர்  பங்கேற்கும் ஆலோசனைக்கூட்டம் 'நடக்கிறது. இதில் ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதை மறுத்துள்ள தமிழக அரசின் சமூக ஊடக சரிபார்ப்பகம், 'இது முற்றிலும் பொய். தர்ஹாவில் ஆடுகளை பலிகொடுப்பது தொடர்பாக நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது.  திருப்பரங்குன்றம் இஸ்லாமிய துறவியான சுல்தான் சிக்கந்தர் பாதுஷா ஷஹீதின் கல்லறையுடன் ஏர்வாடியைச் சேர்ந்த பாதுஷா சுல்தான் சையத் இப்ராகிம் ஷாஹீத் லேப்ஸ், இஸ்லாம் மதத்திற்கு மாற மறுத்த மன்னன் திருப்பாண்டியனை எதிர்த்து மதுரை மாகாணத்தை வென்று , சுல்தான் சிக்கந்தர் பாதுஷாவை மதுரையின் பேரரசனாக்கியுள்ளார். பொது ஆண்டு 1268 முதல் 1310- ஆம் ஆண்டில் அரசாட்சி செய் மாறவர்மன் குலசேகரபாண்டியன் ஸ்ரீ மீனாக்ஷிக்கும் சோமசுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்குப் பல திருப்பணிகளைச் செய்துள்ளார். மன்னர் மாறவர்மன் குலசேகரபாண்டியன் மனைவியர் இருவர் சுந்தர பாண்டியன், வீரபாண்டியன் என இரு இளவரசுகள் ஆவர். இவர்கள் ஆட்சிப் பொறுப்பிற்குப் பின் மதுரை மூன்றாண்டுகள் எந்த வளர்ச்சியுமற்ற, அதேசமயம் பொறுப்பற்ற ஆட்சி நடந்ததென்றே கூறலாம். இவ்விரு மன்னர்களின் சொந்தப் பகை மற்றும் ஒற்றுமைக்குறைவினால் மாற்றாரால் எளிதாய் மதுரையைக் கைப்பற்றக் காரணமாய் இருந்ததெனலாம்.  இந்தியாவை ஆண்ட மிகப்பெரிய பேரரசுகள் முகலாய பேரரசும், மௌரிய பேரரசும் தான். ஆனால் அவர்களின் இராஜிய வரைபடத்தைப் பார்க்கும் போது அதில் தமிழ்நாடும், கேரளாவும் ஒருபோதும் இருந்ததில்லை. இதற்கு நம் மன்னர்களின் வீரம், புவியியல் அமைப்பு, நட்பு எனப் பல காரணங்கள் உள்ளது.

தென்னிந்திய வரலாற்றை மாலிக்கபூரை வைத்து முன்பு, பின்பு எனக் கூட பிரிக்கலாம். ஏனென்றால் தென்னிந்தியா வரை படையெடுத்து வந்த ஒரே டெல்லி சுல்தானின் படைத் தளபதியே மாலிக்கபூர். பிறப்பால் ஹிந்துவாக இருந்து பிற்காலத்தில் அலாவுதீன் கில்ஜியின் ஆசை நாயகியாகவும் (திருநங்கை), படைத்தளபதியாகவும் இருந்தவர். பொது ஆண்டு 1311ஆம் ஆண்டு காஷ்மீர் முதல் இராமேஸ்வரம் வரை உள்ள அகண்ட பாரதத்தை, தன்னுடைய ஹொசூர்(எஜமான்) காலனியின் கீழ் கொண்டு வந்தவர்.அப்படிப்பட்ட மாலிக்கபூர் கடைசியாக வெறியாட்டம் ஆடிய பகுதி தான் இன்றைய மதுரை.....!


கிபி1311ஆம் ஆண்டு மதுரையில் பாண்டிய மன்னர்களிடையே ஏற்பட்ட சகோதர யுத்தத்தை பயன்படுத்திக் கொண்டு மாலிக்கபூர் தன்னுடைய கொடும்படையுடன் மதுரைக்குள் நுழைந்தார். அப்போது அவரை எல்லையில் எதிர்த்து உயிர் நீத்த கள்ளர் தளபதி கீழக்குயில்குடி வீரத்தேவர் என்பவருக்கு நடுகல் எழுப்பி இன்றும் அவர்களுடைய வாரிசுதாரர்கள் வாழ்ந்து வருகிறார்கள். மதுரையை தாக்கி பின்பு மதுரை திருப்புவனம் வழியாக திருப்பத்தூர், சூரைக்குடி, தேவகோட்டை, திருவாடனை, இராமேஸ்வரம் என தான் செல்லும் வழிகளில் உள்ள கோவில்களை சேதப்படுத்திக் கொண்டே சென்றான் மாலிக்கபூர்.

அப்போது திருப்புவனம், திருப்பத்தூர், தேவகோட்டை, புதுக்கோட்டை பகுதி வாழ் கள்ளர் படைப்பற்றுகளை வீழ்த்திக் கொண்டே சென்றுள்ளான் மாலிக்கபூர்.

ஏனென்றால் மேலே குறிப்பிட்ட ஊர் மற்றும் நாடுகளில் கள்ளர் படைகள் (வில்லவர்கள், களப்படை) சுந்தர பாண்டியத்தேவரால் காவலுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மாலிக்கபூர் சென்ற வழித்தடம் அத்தனையும் கள்ளர் நாடுகளே ..!

எனவேதான் ஒவ்வொரு கள்ளர் பற்றையும் கருவறுத்தே முன்னோக்கி சென்றுள்ளார்.  மாலிக்கபூருக்கு பின்பு அவரது அடிமையை மதுரையின் டெல்லி சுல்தான் பிரதிநிதியாக நியமித்து விட்டு மீண்டும் டெல்லிக்கே சென்றுவிட்டான் மாலிக்கபூர். அதற்கு பின்பு கிபி1335 ஜலாலுதீன் ஆசாம் கான் என்பவர் டெல்லியில் உள்ள துக்ளக் ஆட்சியை உதறி, மதுரையை தன்னாட்சியாக அறிவித்து அவருக்கு பின்பு ஏறக்குறைய 43 வருடங்கள் மதுரையை ஆட்சி புரிந்துள்ளனர். அந்த 43 வருடங்களில் திருப்பத்தூர், திருப்புவனம், திருப்பரங்குன்றம், காரைக்குடி, தேவக்கோட்டை, திருப்பூர், கோவை, புதுக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்த பெரும்பாலான சைவ, வைணவ கோவில்கள் சேதப்படுத்தப்பட்டன.அக்காலகட்டத்தில் மதுரை சுல்தான்களுக்கு எதிராக கலகம் செய்த சூரைக்குடி கள்ளர் குல விஜயாலத்தேவர் தலைமை கொண்ட கள்ளர் படைப்பற்று, மதுரை சுல்தானின் தளபதிக்கு கட்டுப்பட்ட பழைய மதுரை ஜில்லா அமராவதி தாலுகா மற்றும் பொன்னமராவதி நாட்டின் விராச்சிலை,கோட்டையூரில் சுல்தான் படைகளையும், ஊர்களையும் தாக்கி சூரையாடி பெரும் சேதத்தை தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வந்தனர்.  இதனால் கோபமுற்ற சுல்தான் தனது முதன்மை தளபதியான இராஜாதி கான் தலைமையில் மூன்று உப தளபதிகளான மஞ்சிலிஸ் எலிஸ் கான், ஆசாம் கான், முவாசம் கான் மற்றும் அவர்தம் பெரும் படைப்பற்றை வைத்து சூரைக்குடி கள்ளர் படைப்பற்றை தீக்கிரையாக்கி முற்றிலுமாக அழித்து தரைமட்டமாக்கிறார்கள்.  அழித்தது மட்டும் இல்லாமல், சுல்தான் மாத்தூர் குளத்தில் பொன்னமராவதி நாடான விராச்சிலை மட்டும் கோட்டையூர் நாட்டுக்கூட்டத்தை கூட்டச் சொன்னார். அப்படி அந்த பொன் அமராவதி நாட்டுக் கூட்டத்தில் எங்களுக்கு எதிராக வாளை சுழட்டிய கள்ளர்களையும் அவர்களது தலைமை இடமான சூரைக்குடியையும் அழித்துவிட்டோம்.  இனி எங்களுக்கு எதிராக யாரும் வாளை சுழட்டினால் சூரைக்குடி கள்ளர் பற்றுக்கு என்ன நேர்ந்ததோ அதே கதிதான் இந்த தேசத்தில் உள்ள அனைவருக்கும் ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள்.

இந்த சம்பத்தை திருக்கோலக்குடி நாயனார் கோவிலில் கல்வெட்டாக வெட்டியுள்ளனர். குலசேகரப் பாண்டியனின் ஆதிக்கத்திற்குட்பட்ட திருநெல்வேலி பகுதியில் சமயப் பிரச்சாரம் செய்து வந்த சுல்தான் சையது இப்ராஹிம் (வலி) அவர்களை எதிர்த்து மதுரையை ஆண்ட திருப்பாண்டியன் திருநெல்வேலியைத் தன் குடையின் கீழ்க் கொண்டு வரப் போர் தொடுத்தான்.

அப்போரில் திருப்பாண்டியன் தோற்கடிக்கப்பட்டான். பிறகு தப்பி ஓடி திருப்பதியில் தஞ்சம் புகுந்தான். இதனால் அச்சமுற்ற குலசேகரப் பாண்டியனும் திருநெல்வேலியை விட்டுச் சென்று இராமநாதபுரம் (முகவைப்) பகுதியை ஆண்ட தமயன் விக்கரம பாண்டியனிடம் தஞ்சம் புகுந்தான். இதன் விளைவாக, திருநெல்வேலி, மதுரை ஆகிய பகுதிகள் சுல்தான் சையது இப்ராஹீமின் மேலாண்மையின் கீழ் வந்தன. இப்பகுதிகளை மீட்பதற்காக விக்கிரம பாண்டியன் சுல்தானுக்கு எதிராக போர் தொடுத்தான்.

இப்போர் ‘பத்துநாள் போர்’ என்றழைக்கப்படுகிறது. இப்போரில் விக்கிரம பாண்டியனுடைய படைகள் தோற்கடிக்கப்பட்டன. அவனது இரு புதல்வர்களும் பல தளபதிகளும் கொல்லப்பட்டனர். வெற்றி வாகை சூடிய சுல்தான் சையது இப்ராஹீம்(வலி) ஏறத்தாழ பன்னிரெண்டாண்டுகள் (பொது ஆண்டு . 1195 முதல் பொது ஆண்டு 1207 வரை) பாண்டிய நாட்டின் கிழக்குப் பகுதியில் வைப்பாற்றிற்கும், வைகை நதிக்கும் இடைப்பட்ட பகுதியை ஆட்சி செய்தார்.

இதுவே தென்னிந்தியாவின் முகலாய படையெடுப்பு காரணமாக தமிழ் பேசும் மண்ணில் தோன்றிய முதல் முஸ்லிம் மன்னராட்சியாகும். இதன் தலைநகரம் பௌத்திர மாணிக்கப்பட்டிணம் என்றழைக்கப்பட்ட பெரியபட்டிணமாகும். தென்காசியில் பாண்டிய வம்சத்தின் ஆட்சியைத் தொடர்ந்து மதுரையில் இந்த குறுகிய கால மதுரை சுல்தானிய வம்சம் உருவானது , மேலும் இது மதுரை , திருச்சிராப்பள்ளி மற்றும் தென் ஆற்காட்டின் சில பகுதிகளை அடுத்த 43 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்தது, முதலில் டெல்லி சுல்தானகத்தின் நிலப்பிரபுக்களாகவும் பின்னர் சுதந்திரமாகவும் இருந்தது. பொது ஆண்டு 1378 வரை விஜயநகரப் பேரரசு அவர்களை வீழ்த்தி அழித்துக் கைப்பற்றியது வரை சுல்தானியம்.  மதுரை சுல்தானியகம் விஜயநகரப் பேரரசால் அழிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது , பின்னர் மதுரை நாயக்கர்களால் ஆளப்பட்டது . அஷன் கான் மற்றும் அவரது சந்ததியினர் மதுரை சுல்தானகத்தையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் பொது ஆண்டு 1378  வரை ஆட்சி செய்தனர், கடைசி சுல்தான் அலாவுதின் சிக்கந்தர் ஷா மதுரைப் போரில் குமார கம்பனாவால் கொல்லப்பட்டார் மற்றும் அவரது படைகள் விஜயநகரப் படைகளால் தோற்கடிக்கப்பட்டது மற்றும் விஜயநகரப் பேரரசு வெற்றி பெற்றது. இதே சுல்தான் ஆட்சிக் காலத்தில் கோயம்புத்தூரில் (இஸ்லாமிய ஹிஜிரி ஆண்டு 769) பொது ஆண்டு 1368  காங்கய நாட்டு முத்தூர் கோவில் சிவபிராமணருக்கும், திருவாநந்தீஸ்வரர் கோவில் சிவபிராமணருக்கும் ஓலை அனுப்பப் பெற்றுள்ளது.  அதில் கோவிலை பாதுகாக்க கள்ளர் மரபைச் சேர்ந்த ஒருவருக்கு காவல் உரிமை அளிக்கப்பட்டது.  தமிழ் நாட்டில் கிடைத்த ஹிஜிரா கல்வெட்டுகள் மிக மிகக் குறைவே அதில் பெரும்பாலும் கள்ளர்களின் உயிர்த்தியாகமும், காவலுமே உள்ளது. அதேபோல் ஏழாம் நூற்றாண்டில் பரம்பு மலை திருக்கொடுங்குன்றம் என்று அழைக்கப்பட்டிருப்பதை திருஞான சம்பந்தர் சுவாமிகளின் திருவாக்கால் அறிகின்றோம். பாண்டிய நாடு சிறப்பிற்குரிய பதினான்கு சிவதலங்களைக் கொண்டுள்ளது. அத்திருத்தலங்களுள் மலைத்தலங்கள் இரண்டு; ஒன்று திருக்கொடுங்குன்றம், மற்றொன்று திருப்பரங்குன்றம். திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் இந்த ஸ்தலத்தை பாடியுள்ளனர்.

இத்திருத்தலத்திற்குப் பதினைந்தாம் நூற்றாண்டில் வருகை புரிந்த அருணகிரிநாதருக்கு இங்குள்ள முருகப்பெருமான் திருநடனம் புரிந்து காட்சி தந்தருளினார் என்பர். திருக்கொடுங்குன்றம் திருத்தலம் இன்று பிரான்மலை என அழைக்கப்பெறுகின்றது.திருஞானசம்பந்தருக்கு சிவபெருமான் லிங்க வடிவில் திருக்கொடுங்குன்றமாக காட்சி அளித்ததால், இந்த மலை பிரான்மலை என அழைக்கிறோம். சுமார் 2 ஆயிரத்து 500 அடி உயரமுள்ள இம்மலை அடிவாரத்தில் தான் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மங்கைபாகர், தேனம்மை, பைரவர் கோயில் அமைந்துள்ளது.மூன்றடுக்கு ஆலயம்பாதாளம், பூமி, கைலாயம் என மூன்று அடுக்குகளாக அமைந்துள்ள இக்கோயிலில் சிவன் மூன்று நிலைகளில் காட்சிதருகிறார். இக்கோயிலின் கைலாய தளத்தில் மங்கைபாகர் தேனம்மை ஆகவும், பூமி தளத்தில் விஸ்வநாதர் விசாலாட்சி ஆகவும், பாதாள தளத்தில் திருக்கொடுங்குன்றநாதர் குயில்அமுத நாயகி அம்மனாகவும், சிவனும் பார்வதியும் காட்சி தருகின்றனர். பூமி தளத்தில் பைரவர், குருபகவான் சன்னதியும் அமைந்துள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் 2 ஆயிரத்து 500 அடி சுயம்புலிங்கமாக காட்சி அளிக்கும் திருக்கொடுங்குன்றம் எனும் பிரான்மலை உச்சியில் இருக்கும் விநாயகர், முருகனை வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிட்டுவது நிச்சயம். குறிஞ்சி நிலத்தின் குறையாத குடையாக விளங்கும் பிரான்மலை சிவகங்கை சீமை என்ற கிரீடத்தில் பதித்த மரகதக்கல் என்றால் மிகையாகாது. சுல்தான் படைகளையும், ஊர்களையும் தாக்கி   பிரான்மலை  சிவகங்கைச் சீமை என்ற கிரீடத்தில் பதித்த மரகதக்கல் என்றால் மிகையாகாது. அங்கு சேக் அப்துல்லா சாஹிப் தர்ஹா அதாவது சமாதி மலையில் உள்ளது அதற்கு இஸ்லாமியர் கந்தூரி நடத்தி வழிபாடு செய்கின்றனர்.                    நம் நாட்டிற்கு படை எடுத்து வந்தார்கள், வென்றார்கள், பின்னர் கொள்ளையடித்துச் சென்றார்கள், செல்லும் முன் மதம் பரப்பும் செயலாக மாற்று மதம் மற்றும் ஆலயங்கள் அழித்தார்கள் இதில் சுவாரசியமான ஒரு நிகழ்வு முகலாய அரசர் பாபரிடம் அவரது தளபதி கூறியதாக ஒரு செய்தி உள்ளது.

"போரில் இனி தோல்வி உறுதி என்கிற நிலை ஏற்படும் மாத்திரத்தில் இந்த ராஜபுத்திரர்கள் தங்கள் குடும்பங்களின் மானத்தைக் காக்கவேண்டி தாய், மனைவி, குழந்தைகளை வாலைப்பாய்ச்சிக் கொன்று விட்டு, தங்கள் போர் உடைகளைக் கலைந்து விடுவார்கள். அந்தக் கணமே உயிர் தியாகத்துக்கும், வீர சொர்கத்துக்கும் அவர்கள் தயாராகிவிட்டார்கள் என்று அர்த்தம். ராஜபுத்திர இனத்தின் சம்பிரதாயம் அது. இனி இவர்களுடைய உயிரற்ற உடல்களை மிதித்துக்கொன்டுதான் நாம் கோட்டைக்குள் நுழைய முடியும்..." பாதுஷா என்றாராம்.  இந்த நிலையில் தான் பல ஆலயங்களில் பின்னர் புனர் நிர்மாணம் நடந்த நிகழ்வுகள் உள்ளன. பொது ஆண்டு 1310 முதல் 1311 வரை உள்ள காலப்பகுதியில், டில்லி சுல்தானகத்தின் ஆட்சியாளர் அலாவுதீன் ஹீல்ஜி தனது சேனாதிபதி மாலிக் கபூர் தலைமையிலான படைகளை இந்தியத் துணைக்கண்டத்தின் தெற்கிலுள்ள நாடுகளைக் கைப்பற்ற அனுப்பினார். போசளர்களை அடிமைப்படுத்திய பின்னர், மாலிக் கபூர் துவாரஹசமுத்திரம் ஆண்ட ஹொய்சளர்கள், மற்றும் வாராங்கல் ஆண்ட காக்கத்தியர்கள், மற்றும் 

மேலைச் சாளுக்கியப் பேரரசின் சிற்றரசர்களாக வாழ்ந்த தேவகிரி யாதவ சிற்றரசைக் கைப்பற்றிய பின்னர்  பாண்டிய நாட்டின் தலைநகர் மதுரை (முஸ்லீம் காலக்கோவைகளில் மபார் என்று அழைக்கப்படுகிறது) மீது படையெடுத்தார். இதற்கு சகோதரர் சண்டை பலமாக இருக்கும் பாண்டிய சகோதரர்களான வீரபாண்டியன் மற்றும் சுந்தரபாண்டியன் ஆகியோருக்கு இடையிலான தொடர்ச்சியான போரைப் பயன்படுத்திக் கொண்டார். 1311 ஆம் ஆண்டு மார்ச்-ஏப்ரல் மாதக் காலக்கட்டத்தில், பாண்டிய நாட்டில் அவர்களின் தலைநகர் மதுரை உட்பட பல இடங்களில் திடீர்த்தாக்குதல் நடத்தினார். வீரபாண்டியன் சூழ்ச்சி செய்தபோதும்  டில்லி சுல்தானகத்துக்கு அடங்கிய ஆட்சியாளராக மதுரையை மீண்டும் மீட்ட சுந்தர பாண்டிய மன்னரை அவரால் வெற்றி பெற முடியவில்லை , ஆனால் பாண்டிய நாட்டிலிருந்து இராமேஸ்வரம் வரை சென்று 96,000 மணங்கு பொன்னும், பொருளும் தாய்லாந்து யானைகளில், அரபு நாட்டுக் குதிரைகளில், தங்கம் மற்றும் விலைமதிப்பற்ற ரத்தினக் கற்கள் உட்பட பலவற்றை பெரியளவில் கொள்ளையடித்த பொருட்களுடன் திரும்பிச் சென்ற போது இறந்த படை வீரர்களை அடக்கம் செய்து பல இடங்களில் (சமாதி) தர்ஹா அமைத்தனர் அவ்வாறு அமைந்துள்ள இடங்கள் தான் தர்ஹா அதில் காட்டு பாபா உள்ளிட்ட பல இடங்களில் உண்டு , இதில் இந்துக்கள் மரபு நடுகல் என்பது இறந்தவர்களின் நினைவாக வைக்கப்படும் நினைவுக் கல். இவற்றை ‘வீரக் கற்கள்’ எனலாம். உலகின் பல பகுதிகளிலும் பெருங்கற்காலம் முதலே இவ்வழக்கம் இருந்துள்ளது. இந்தியாவிலும் வடக்கு, தெற்கு என்ற பேதமின்றி நெடுங்காலமாகவே நடுகற்கள் எடுக்கப்பட்டு வந்துள்ளன. ஆனால் 

சதிக்கல் என்பது இறந்துவிட்ட கணவனோடு தீப்பாய்ந்து (உடன்கட்டை ஏறி) உயிரை மாய்த்துக் கொண்ட மனைவிக்கும், அவரது கணவனுக்கும் சேர்த்தே நடப்படும் நினைவுச் சின்னம். எனவே இங்கு காணப்படுவது நடுகல்லுடன் கூடிய சதிக்கல்லாகும்.” அதில்.

"’ஸ்ரீ வீரபாண்டிய தேவருக்கு யாண்டு 14வது துலுக்கர் பூசலில் பட்டார் அடா தெல்லார் ராகுத்தர் இவருடைய தேவியார் மல்லண தேவியார் இ ஊரிலே தீப்பாய்ந்தாள்’ என்ற வரிகளுடன் தொடங்கும் இந்த கல்வெட்டானது, 'அவிரியூர் சிவன் கோவில் கற்களில் சேர்ந்தார் போல் சுமார் 5 அடி உயரம் கொண்ட தூணில் சிற்பங்களுடன் கல்வெட்டு செதுக்கப்பட்டுள்ளது.'" .கல்வெட்டில் பிற்காலப் பாண்டிய மன்னன் வீரபாண்டியனின்  14-ஆவது பொதுஆண்டு-1311 ஆம் ஆட்சி ஆண்டில் துலுக்கர் (இஸ்லாமிய) சண்டையில் அடாதெல்லா ராவுத்தர் என்பவர் இறந்ததையும், இதனால் இவருடைய மனைவி மல்லண தேவி என்பவர் இவ்வூரில் தீப்பாய்ந்து இறந்தார் என்பதை கல்வெட்டு குறிப்பிடுகிறது.” இது வரலாற்றுத் துறை பேராசிரியர்கள் கூற்று. ஆட்சி அதிகாரம் மாறிய நிலையில் இன்னும் சில ஆன்மீக ஸ்தலங்களில் ஆக்கிரமிப்புகள் மட்டும் மாறவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...