இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி, விவேகானந்தர் அமெரிக்கா செல்லும் கடற் பயணத்திற்கு உதவினார்.
1893 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்ட சுவாமி விவேகானந்தர், துறவி தான் என்பதை சேதுபதி மன்னர் நேரில் சந்தித்து இராமவிலாசம் அரண்மனையில் வரவேற்று அவரது நாவில் ஒரு திருச்சிராப்பள்ளி அச்சு வெல்லம் வைத்தார் அது 15 நிமிடம் வரை கறைந்து போகாத நிலையில் துறவியாக அவரை வணங்கி
ஜூலை மாதத்தில் அமெரிக்காவில் உள்ள சிகாகோவை அடையுமாறு பண பொருட்கள் உதவி அனுப்பி வைத்தார். சிகாகோ அரங்கில் ஹிந்து மதத்தின் புகழைத் தன் சொற்பொழிவால் நிலை நிறுத்தியவர் சுவாமி விவேகானந்தர், அமெரிக்கப் பயணத்தை முடித்து விட்டு இலங்கை மார்க்கமாக 26 ஜனவரி 1897 ஆம் தேதியன்று பாம்பன் குந்துகால் பகுதியில் வந்திறங்கினார் .
பிரிக்கப்படாத வங்காளத்தில் கொல்கத்தா நகரில் ஒரு பிரபுத்துவக் காயஸ்தா குடும்பத்தில் பிறந்த விவேகானந்தர், சிறு வயதில் மதம் மற்றும் ஆன்மீகத்தின் மீது நாட்டம் கொண்டார். 18 வயதில் அவர் ஸ்ரீ ராமகிருஷ்ணரைச் சந்தித்த பின் பக்தியுடன் பின்பற்றுபவர் மற்றும் சன்னியாசத் துறவியானார்.நவீன இந்தியாவில் ஹிந்து மதத்தின் மறுமலர்ச்சியில் சுவாமி விவேகானந்தர் முக்கிய சக்தியாவார்இ ளமையில் ஸ்ரீ ராமகிருஷ்ண சமாஜத்திற்குச் சென்றவர், பின்னர் ஸ்ரீ ராமகிருஷ்ணருடன் தொடர்பு கொண்டார். ஸ்ரீ ராமகிருஷ்ணர் அவருக்கு தீட்சையளித்தார், அவரது மரணத்திற்குப் பின்னர் நரேந்திரநாத் தனது வீட்டை விட்டு வெளியேறி ஸ்ரீ ராமகிருஷ்ணா இயக்கத்தைக் கண்டுபிடித்தார்.
பாம்பனில் மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தார் அன்றைய இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி. விவேகானந்தரின் பாதங்கள் தன் தலையில் பட்ட பிறகே தரையைத் தொடவேண்டும் என முழங்காலிட்டு அமர்ந்த சேதுபதி மன்னரின் செயலை மறுத்து அவரை ஆரத் தழுவினார் சுவாமி விவேகானந்தர் இலங்கை கொழும்புவிலிருந்து பாம்பனுக்குக் கப்பலில் வந்திறங்கிய சுவாமி விவேகானந்தரை இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி வரவேற்று, தேரில் அமரவைத்து, குதிரைகளை அவிழ்த்து விட்டுத் தானும், தன் பரிவாரங்களும் சேர்ந்து கொண்டு, அத்தேரை இழுத்துக் கொண்டு போனது வரலாறு. கொல்கத்தாவிலிருந்து சென்னைக்குப் புகைவண்டியில் பயணமான சுவாமி விவேகானந்தரின் தரிசனத்தைப் பெற்றே ஆக வேண்டும் என்ற பக்தி நெறியில், மக்கள் வெள்ளம் தண்டவாளங்களில் அமர்ந்து, மீட்டர் கேஜ் புகைவண்டி நிற்காத இடங்களிலெல்லாம் அவ்வண்டியை நிற்கச் செய்தது.
பாம்பன் வரவேற்பு விழாவில் பேசிய சுவாமி விவேகானந்தர், “உலக சர்வசமய மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று மன்னர் பாஸ்கர சேதுபதி தனக்கு வந்த அழைப்பிதழை என்னிடம் கொடுத்து, என்னை கலந்துகொள்ள வலியுறுத்தினார். இடையறாது என்னைத் தூண்டி முழு உதவியும் செய்து வழியனுப்பினார்.
இதுவரை வெளியுலகு அறியாது சாதாரணத் துறவியாக இருந்த என்னை உலகறியச் செய்ய உலக ஞானியாக மாற்றியவரும் மன்னர் பாஸ்கர சேதுபதியே. இந்த நல்ல பணிக்கு இந்திய நாடே கடமைப்பட்டுள்ளது. ஹிந்து மதத்திற்கு என்னால் ஏதேனும் நன்மை உண்டாகுமானால் அதன் சிறப்பனைத்திற்கும் பாத்திரமானவர் நமது மன்னர் சேதுபதியே” என தமது அருகிலிருந்த பாஸ்கர சேதுபதி மன்னரை நெகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்டி மகிழ்ந்தார் சுவாமி விவேகானந்தர். 1888 ஆம் ஆண்டில் மன்னர் பாஸ்கர சேதுபதி சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலிருந்து பட்டதாரியாக வெளி வந்தவுடன் இராமநாதபுரம் சமஸ்தானத்தின் ஜமீன்தார் பொறுப்பை ஏற்றார் 14 செப்டம்பர் 1893-ஆம் நாள் அமெரிக்க நாட்டு சிக்காகோ நகரில் நடைபெற்ற அனைத்துலக சமயப் பேரவைக்குச் சுவாமி விவேகானந்தரை அனுப்பி வைத்து நாட்டின் பெருமையினை உலகறியச் செய்ததார் மன்னர் பாஸ்கர சேதுபதி என்னும் முத்துவிஜய ரகுநாத பாஸ்கர சேதுபதி நாம் சுவாமி விவேகானந்தரை நினைவில் கொள்ளும் போதெல்லாம் முன் வரும் பெயர் மன்னர் பாஸ்கர சேதுபதி தான்.
கருத்துகள்