உதவிப் பேராசிரியர் நியமனத் தகுதிகளில் மாற்றம்
தகுதித் தேர்வுகள் கட்டாயமில்லை,
முதுகலைப் பட்டம் பெற்றாலும் உதவி பேராசிரியர் ஆகலாம் இனி உதவிப் பேராசிரியர் பணிக்கு NET மற்றும் SET மற்றும் Ph.D அவசியமில்லை; UGC-யில் புதிய விதிமுறைகள் மாற்றம்.
இந்தியாவிலுள்ள அனைத்து பல்கலைக்கழகம், சார்ந்த கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு குறைந்தபட்சத் தகுதியாக நெட் அல்லது செட் உள்ளிட்ட தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிலை தற்போது இருக்கும் நிலையில், இனி நெட் அல்லது செட் அல்லது செலெட் உள்ளிட்ட தகுதித் தேர்வுகள் கட்டாயமில்லை என்ற விதிமுறையை UGC கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் நியமனம், ஆசிரியர் நியமனம் மற்றும் உயர்கல்வியில் தரத்தை உயர்த்துதல் உள்ளிட்டவற்றுக்கான விதிமுறைகளில் UGC மாற்றம் கொண்டுவர உள்ளது. அதற்கான வரைவு அறிக்கை கருத்துக்கள் கேட்பிற்காக வெளியிடப்பட்டுள்ளது. (UGC Regulations 2025 for Assistant) பல்கலைக்கழகம் மற்றும்
கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நியமனம் என்பது பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) விதிமுறைகளின் படி நடைபெறுகிற நிலையில், உதவிப் பேராசிரியர் நியமத்திற்கான தகுதிகளில் UGC முக்கிய மாற்றங்களைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. அதாவது, உதவிப் பேராசிரியர்கள் பணிக்கு குறைந்தபட்சம்
பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் கல்வி கற்பிக்கும் பணியில் முதல் தொடக்க பதவி உதவிப் பேராசிரியர் ஆகும். அதனைத்தொடர்ந்து, அனுபவம் மற்றும் கல்விசார் அடிப்படையில் இணை பேராசிரியர் மற்றும் பேராசிரியர் ஆகிய பணிகளுக்குச் செல்ல முடியும். இதற்கான நியமன தகுதிகளை UGC வகுக்கிறது. மற்றும்
அதனையே நாடு முழுவதும் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும்.இந்த நிலையில், டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி UGC இந்த விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டுவந்து அதற்கான வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஆகியவற்றுக்கான வரைமுறைகள் மாற்றப்பட்ட புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதில் குறிப்பிடத்தக்கதாக உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதிகளில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களில் , ஒருவர் நான்கு வருட இளங்கலையில் (UG) இயற்பியல் மற்றும் முதுகலையில் (PG) கணிதப் பட்டம் பெற்றிருந்தாலும், நெட் தேர்வில் (NET) வேதியியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், பிஎச்.டி (Ph.D) வேதியியலில் பெற்றிருந்தாலும், அவர்கள் வேதியியல் பாடத்திற்கு கற்பிக்க தகுதியானவர்கள்
ஆவார்கள். ஒன்று நெட் உள்ளிட்ட தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பிஎச்.டி பெற்றிருக்க வேண்டும். இரண்டுமே பெற்றிருகக் வேண்டும் என்ற அவசியம் இல்லை. 2. தகுதி தேர்வு கட்டாயம் இல்லை
உதவிப் பேராசிரியர் பதவிக்கு NET அல்லது SET அல்லது SLET ஆகிய தகுதித் தேர்வு அவசியம் என்ற நிலை இருக்கிறது. இந்நிலையில், இத்தகுதி தேர்வுகள் கட்டயாமில்லை என மாற்றியமைக்கப்படுகிறது. அதாவாது, எந்த பாடத்தில் உதவிப் பேராசிரியர் ஆக விரும்புகிறார்களே அதில் பிஎச்.டி அல்லது முதுகலை பட்டம் பெற்றிருந்தால் போதுமானது.3. பிஎச்.டி கட்டாயம் இல்லை
ஆம், உதவிப் பேராசிரியாராக நியமிக்க பிஎச்.டி பட்டம் கட்டாயமில்லை என மாற்றப்படுகிறது. 55 சதவீத மதிப்பெண்களுடன் பெறும் முதுகலை பட்டம் போதுமானது.உதவிப் பேராசிரியர் பணிக்கான புதிய 3 தகுதிகள்
முதலில்.75 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் அல்லது 55 சதவீதத்துடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், பிஎச்.டி முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டாவதாக. 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் மற்றும் NET அல்லது SET அல்லது SLET ஆகிய தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மூன்றாவதாக முதுகலை பட்டம் (கிரெடிட் நிலை 7 -M.E., M. Tech) 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதில் எஸ்சி. மற்றும் எஸ்டி மற்றும் ஒபிசி, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் தளர்வு உள்ளது.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர், இணை பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பதவிகளுக்கான பதவி உயர்விற்கு பிஎச்.டி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலை, வணிகம், மனிதநேயம், கல்வி, சட்டம், சமூக அறிவியல், அறிவியல், மொழிகள், நூலக அறிவியல், உடற்கல்வி, இதழியல் மற்றும் மக்கள் தொடர்பு, பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், மேலாண்மை ஆகிய துறைகளுக்கு இந்த புதிய விதிமுறைகளின் அடிப்படையில் உதவிப் பேராசிரியர்கள் பணி
நியமனம் மேற்கொள்ளப்பட வேண்டுமென UGC கட்டாயமாக்க உள்ளது. தற்போது இந்த வரைவு அறிக்கை கருத்து கேட்பிற்காக வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அமல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறைகள் தேசிய கல்விக் கொள்கை 2020 அடிப்படையில் கொண்டுவரப்படுகிறது. இதனை மீறும் கல்வி நிறுவனங்கள் நடத்தும் பட்டங்கள் ரத்து செய்யப்படும், உயர்கல்வி நிறுவன அங்கீகாரம் நீக்கப்படும் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்