பிராமணர்களைப் பாதுகாக்க ஒரு தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளிக்கக் கோரி வழக்கு;
சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஒத்திவைப்பு பிராமணர்கள் சமூகத்தினரைப் பாதுகாக்க சட்டம் இயற்ற மதுரையில் ஜனவரி மாதம்.5 ஆம் தேதியில் நடத்துவதற்கு திட்டமிட்டு அந்த உண்ணாவிரதத்திற்கு அனுமதி வழங்கக் கோரித் தாக்கல் செய்த வழக்கில், மனுதாரர் தரப்பில் உத்தரவாதப் பத்திரம் தாக்கல் செய்ய அறிவுறுத்தி சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை தள்ளி வைத்தது.
பிராமண சமூகத்தினரை பாதுகாக்க சட்டம் இயற்ற இந்திய ய, மற்றும் தமிழ்நாடு மாநில அரசுகளை வலியுறுத்தி ஜனவரி மாதம்.5 ஆம் தேதியில் மதுரை பழங்காநத்தம் வட்டச்சாலை அருகே காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை உண்ணாவிரதம் நடத்த அனுமதியுடன் உரிய பாதுகாப்பும் வழங்கக் கோரி மாநகர் காவல்துறை ஆணையர், மற்றும் சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் ஆகியோரிடம் மனு அளித்தோம். அந்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். என குறிப்பிட்டிருந்த நிலையில்.
நீதிபதி எம்.நிர்மல் குமார் முன் பட்டியலிடப்பட்டு வந்த நிலையில் விசாரித்தார். அதற்கு
அரசு தரப்பில்: கோயம்புத்தூரில் ஹிந்து மக்கள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டம் சர்ச்சையானது. சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்துாரி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். ஆகவே இதற்கு அரசு வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவித்த நிலையில்
நீதிபதி "மதுரை உண்ணாவிரதத்தில் யார், யார் பேசுகின்றனர், எத்தனை பேர் பங்கேற்கின்றனர் விபரத்தையும், சட்டத்திற்குட்பட்டு சுமூகமாக நடத்தப்படும் என்பதற்கான உத்தரவாதத்தையும் மனுதாரர் தரப்பில் நேற்று (ஜனவரி மாதம் 3 ஆம் தேதி) தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தார்.
கருத்துகள்