உயர்நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும் வழிமுறைகள் குறித்து அரசு துறைகளுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்
தமிழ்நாடு அரசு சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் மனுவிற்கு புதிய நிபந்தனைகளை விதித்தது அனைத்து துறைச் செய லாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் எழுதிய கடிதம்.
தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம் எழுதிய கடிதத்தில் :
சென்னை உயர்நீதிமன்றத்தில் 'ரிட்' மனு 9 ஆம் விதியின்படி, ஒரு மனுவுக்கு ஆதாரமாக இணைக்கப்படும் பிரமாணப் பத்திரம் எனும் உறுதிச் சான்று (அபிடவிட்). முறை யாக வழக்கறிஞர் நோட்டரி அல்லது உறுதிமொழி ஆணையர் மூலம் சான்றொப்பம் இடப்பட வேண்டும்
(Attested) ஆனால் அரசு தாக்கல் செய்யும் வழக்குகளில் நீண்டகால நடைமுறையாக, சான்றுரைப்பவரும். துணை நிலை அலுவலரும் தான் உறுதிச்சான்றின் ஒவ் வொரு பக்கத்திலும் கையெழுத்திடுகின்றனர்.
இதில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வு எடுத்துள்ள முடிவை அரசின் கவனத் திற்கு அரசு வழக்கறிஞர் கொண்டு வந்ததன்படி, உறுதிச்சான்றுகள், பதில் மனுக்கள், ஆதார மனுக்கள் உள்ளிட்டவற்றை சான்றளிப்பதில் 'ரிட்' மனு 9 ஆம் விதிமுறைகள் கண்டிப்புடன் பின்பற் றப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்ப டையில் சில உத்தரவுகளை
அரசு தற்போது பிறப்பித்துள்ளதன்படி, அரசின் துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோர், மனுவுக்கு ஆதாரமாக தாக்கல் செய்யும் ஒவ்வொரு உறுதிச்சான்றும், சென்னை உயர்நீதிமன்றம், மற்றும் மதுரை கிளை, மற்ற விசாரணை நீதிமன்றங்களில் உள்ள அரசு நோட்டரி மற்றும் சான்று உறுதி ஆணையரால் தான் சான்றளிக்கப்பட வேண்டும். அந்த வழக்கில் ஆஜராகும் அரசு வழக்கறிஞர் அதில் சான்றளிக்கக் கூடாது. சான்றளிப்பவரின் கையெழுத்து, முத்திரை, பதிவு எண், முகவரி போன்றவை அதில் பதிவு செய்யப்பட வேண்டும். அரசு பிளீடர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும். (இதில் வழக்கறிஞர் கையெழுத்து இருந்தால் அவர் அந்த வழக்கில் ஆஜராக முடியாது அவர் சாட்சியாகிறார்)
ஆகவே இந்த கடிதம் மூலம் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்