பழுதுநீக்கிய மோட்டார் சைக்கிளுக்கு பணம் தராமல் மோசடி மேலும் பொய்வழக்கு போடுவதாக மிரட்டிய காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் பணியிடை நீக்கம்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சீனிவாசன் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் இருசக்கர வாகனம் பழுதுநீக்கும் மெக்கானிக்கல் கடை நடத்துகிறார்.
மூன்றாண்டுகளுக்கு முன் இவரது கடைக்கு வந்த வாடிப்பட்டி காவல்நிலையத்தில் பணி செய்த சிறப்பு சார்பு ஆய்வாளர் அண்ணாதுரை இவரிடம் அறிமுகமாகி அவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை (புல்லட்) மெக்கானிக் சீனிவாசனிடம் கொடுத்து சர்வீஸ் செய்து வாங்குவதை வழக்கமாகவே வைத்துள்ளார். ஆனால் புல்லட்டை சரி செய்த பின்னால், அதற்கான பணத்தை சீனிவாசனுக்கு சார்பு ஆய்வாளர் அண்ணாதுரை தராமலே இருந்துள்ள நிலையில்.
புல்லட்டை தொடர்ந்து சர்வீஸ் செய்து விட்டு இதுவரை மொத்த பாக்கியாக 8000 ரூபாய் வரை தராமல் வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளார். மேலும் தற்போது பாலமேடு காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணி மாறுதல் பெற்ற பின்னர், தம்முடன் பணிபுரியும் காவலர்களின் மோட்டார் சைக்கிள்களையும் சர்வீஸ் செய்து தருமாறு சீனிவாசனை வற்புறுத்தியதாகவும். செல்போனிலும் சீனிவாசனைத் தொடர்பு கொண்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார், பொருமை இழத்த நிலையில் ஒரு கட்டத்தில் அவரது போன் அழைப்பை சீனிவாசன் பிளாக் செய்து நிராகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த காவல் பணி சார்பு ஆய்வாளர் அண்ணாதுரை, ஜனவரி மாதம் 4 ஆம் தேதி சீனிவாசனின் மெக்கானிக் கடைக்குச் சென்று அவரை மிரட்டியதாகத் தெரிகிறது. சினிவாசனை தாக்கியது டன் கார் ஒன்றில் ஏற்றும் வீடியோ காணொளிக் காட்சியும் சமூக வலைதளங்களில் வெளியானது. புல்லட் ஒன்றை பழுது நீக்கியதில் பணமே கொடுக்காமல் ஏமாற்றி சரமாரியாகத் தாக்கியது குறித்தும், பொய்யாக கஞ்சா வழக்குப் போடுவேன் என மிரட்டியதுடன் கண்ணத்தில் அறைந்துள்ளது குறித்தும் வீடியோ ஆதாரத்துடன் மெக்கானிக் சீனிவாசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
இந்த நிலையில் வீடியோ வைரலாகி விடவே, மெக்கானிக்கிற்கு 'பளார்' விட்ட காவல் சார்பு ஆய்வாளர் அண்ணாதுரையை பணியிடை நீக்கம்' செய்து தென்மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்கா தற்போது உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள்