மதுரை மாநகரக் காவல்துறையின் வடக்கு காவல் துணை ஆணையராக ஜி.எஸ்.அனிதா பொறுப்பேற்றுக் கொண்டார். மது குமாரிக்குப் பின்னர் அவர் பணிப்பொறுப்பேற்றார்.
2009- ஆம் ஆண்டு பேட்ச் துணைக் கண்காணிப்பாளரான அனிதா இதுவரை திருநெல்வேலி மாநகரக் காவல் துறையில் துணைக் காவல் ஆணையராக (தலைமையகம்) இருந்தார். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயமுத்தூர் மாவட்டத்தில் துணைக் கண்காணிப்பாளராகவும், ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் தூத்துக்குடியில் கூடுதல் காவல்துறைக் கண்காணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
திருநெல்வேலி மாநகருக்கு மீண்டும் மாற்றப்படுவதற்கு முன்பு, அனிதாவும் 2024 ஜனவரியில் மதுரை வடக்கு DCP யாக சில காலம் பணியாற்றினார்.
கருத்துகள்