திமுகவின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன்,
மகன் வேலூர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் வீட்டில் நடத்த அமலாக்கத்துறை சோதனை
இன்று காலையில் அமலாக்கத்துறை அலுவலர்கள் வந்திருந்தனர். ஆனால் துரைமுருகன், கதிர் ஆனந்த் யாரும் வீட்டில் இல்லாததால் 7 மணி நேரமாக சோதனை செய்யமுடியாமல் காத்திருந்த நிலையில் கதிர் ஆனந்த் வீட்டில் சோதனை செய்ய அனுமதி அளித்த நிலையில், சோதனை நடத்தச் சென்ற அமலாக்கத்துறை அலுவலர்களை திமுகவினர் சோதனை செய்து உள்ளே அனுப்பினர். அதேபோல் துரைமுருகனின் வேண்டிய நபராகக் கூறப்படும் பூஞ்சோலை சீனிவாசனின் வீட்டில்
அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர். மத்திய தொழிற்பாதுகாப்புப் படை வீரர்களின் பாதுகாப்புடன் நடத்திய சோதனையில் திமுகவினர் வட்டாரத்தில் சிறிது நேரத்தில் வேலூர் காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீட்டிற்கு காரில் வந்த அமலாக்கத்துறை அலுவலர்கள் அங்கும் சோதனை நடத்தச் சென்றனர். துரைமுருகன் சென்னையிலுள்ள நிலையில், அவரது மகன் கதிர் ஆனந்த் வெளிநாட்டில் இருப்பதாகச் சொல்லப்பட்டதனால், சோதனை நடத்த வந்த அலுவலர்கள் வீட்டிற்குள் செல்ல முடியாத நிலை இருந்தது.
துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை நடத்துவதாக செய்தி வெளியான நிலையில், திமுகவினர் அங்கு குவிந்தனர். துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த் இருவருமே வீட்டில் இல்லாததால், அமலாக்கத்துறையின் அலுவலர்கள் சோதனை நடத்துவது தாமதமானது. வெளிநாட்டில் உள்ள கதிர் ஆனந்தைத் தொடர்பு கொண்டு அமலாக்கத்துறையின் அலுவலர்கள் பேசினர். சோதனை செய்ய 5 மணி நேரமாக காத்திருந்த நிலையில் இமெயில் மூலம் சோதனை நடத்த ஒப்புதல் தெரிவித்து கதிர் ஆனந்த் மின்னஞ்சல் அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது.
இந்த மின்னஞ்சலில் நாடாளுமன்ற உறுப்பினர் தரப்பில் யார் யார் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். அதில் காட்பாடி வடக்குப்பகுதி செயலாளர் சுனில் குமார் உள்ளிட்டோரின் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நடைமுறைகள் காரணமாக சோதனை தொடங்குவதற்கு கால தாமதம் ஆனது.பின்னர் சுமார் 7 மணி நேர தாமதத்திற்கு பிறகு அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை தொடங்கியுள்ளனர். சோதனை தொடங்கச் சென்ற அலுவலர்களிடம் ஏதேனும் பொருட்கள் இருக்கிறதா என திமுகவினர் சோதனை செய்தனர்.
அமலாக்கத்துறை அதிகாரிகளின் பர்ஸ் உள்ளிட்டவற்றை திமுகவினர் சோதனை செய்த பிறகே உள்ளே அனுப்பினர். பெண் அலுவலர்கள் வைத்திருந்த ஹேண்ட்பேக்குகள், லேப்டாப்கள் ஆகியவற்றையும் திமுகவினர் சோதனை செய்து பார்த்தனர். காட்பாடி காந்திநகரில் உள்ள அமைச்சரின் வீடு, மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகம், பூஞ்சோலை சீனிவாசன் அவரது உறவினர் வீடு உள்பட 4 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறதுமூத்த பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்த கருத்து "CBI ஒரு வழக்கை விசாரித்தால் குற்றச்சாட்டுக்குரியவரைக் கைது செய்வதற்கு நீதிபதியின் ஒப்புதல் தேவை. வருமான வரித்துறையாக இருந்தால் மட்டும் வாரண்ட் போடுவதற்கு முன் அந்தத் துறையின் உயர் அலுவலரிடம் ஒப்புதலைப் பெற வேண்டும். அமலாக்கத்துறைக்கு அந்தக் கட்டுப்பாடுகள் தேவையில்லை.
முன்பே ஒரு வழக்குப் பதியப்பட்டிருந்தால்தான் ED தான் அந்த வழக்கைக் எடுக்கும். சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை என்றால் கூட அதற்கென ஒரு உச்சவரம்பு உள்ளது. அதற்கு மேல் போனால் தான் ED விசாரணையைக் எடுக்கும்". என்றார்
2019 ஆம் ஆண்டு தேர்தல் நேரத்தில் 11 கோடி ரூபாய் பணம் பிடிபட்டதற்காக இந்தச் சோதனையா? இல்லை எனில் மணல் கொள்ளை தொடர்பாக ஏற்கெனவே ED ஒரு விசாரணையை நடத்ததகிறது. அதற்காகப் பல சோதனைகள் நடந்தன. அதற்கு நீதிமன்றத்தில் தடையையும் முன்பே பெற்றனர். அதை ED உடைத்தது. அதன் தொடர்ச்சி தான் இப்போது அமைச்சர் துரைமுருகன் வீட்டில் ED சோதனை நடத்தியது.
ஏனென்றால் தேர்தல் நேரத்தில் பணம் பறிமுதல் செய்தது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் தான் அதில் வழக்குத் தொடர முடியும். அதற்குள் ED வருவதற்கு வாய்ப்பில்லை. சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை என்றால் தான் ED நுழையும். ஏனென்றால் இதே போல் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் தரப்பில் தேர்தல் நேரத்தில் சில கோடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதற்குள் ED வரவில்லையே? ஆகவே, இது மணல் கொள்ளை தொடர்பான வழக்கில் ஆவணங்களைத் தேடித்தான் சோதனை நடந்திருக்கும்" என்கிறார். சட்டம் படித்த அந்தப் பத்திரிகையாளர்
இந்த சோதனை தொடர்பாக தனக்கு எந்தத் தகவலும் கொடுக்கப்படவில்லை. எந்தத் துறை சார்ந்த அலுவலர்கள் சோதனை நடத்தி வருகிறார்கள் என்பதே தனக்குத் தெரியாது என்கிறார் அமைச்சர் துரைமுருகன். ஆனால், சட்டப்படி சோதனைக்கு வரும் அலுவலர்கள் தாங்கள் எந்த இலாக்காவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலைக் கொடுத்த பிறகு தான் நடவடிக்கைகளில் இறங்குவார்கள் என்கிறார்கள் இந்த மாதிரியான வழக்குகளில் அனுபவம் பெற்ற முன்னாள் அலுவலர்கள்.
கருத்துகள்