நாகாலாந்து ஆளுநரும் ஆர் எஸ் எஸ் சார்ந்த பாஜகவின் பிரமுகராக இருந்த இல.கணேசனின் சகோதரர் இல. கோபாலன் இன்று காலமானார்.
முதுமை உடல்நலக்குறைவால் இல.கோபாலன் 83 ஆம் வயதில் காலமானார். தற்போது நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராகப் பதவி வகித்து வரும் இல.கணேசன். முன்னதாக மணிப்பூர் மாநில ஆளுநராகவும், மேற்கு வங்க மாநில பொறுப்பு ஆளுநராகவும் பதவியில் இருந்தார். பாஜகவில் மாநில தலைவர், தேசியச் செயலாளர், தேசிய துணைத் தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்துள்ள இல கணேசன், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார் அவரது சகோதரர் இல.கோபாலனின் சதாபிஷேக விழா அதாவது 80வது பிறந்தநாள் விழா 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்ற நிலையில்,
இல.கோபாலன் தனது 83வது வயதில் இன்று காலமானார். இல.கோபாலனின் உடல் சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்