சிவகங்கை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக ஆஷிஷ் ராவத் பொறுப்பேற்பு.
சிவகங்கை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக 2014-ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அலுவலரான ஆஷிஷ் ராவத் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு முன்னோடியாக பணியிலிருந்த டோங்கரே பிரவின் உமேஷ் சென்னையிலுள்ள இலஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகத்தில் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஆஷிஷ் ராவத், முன்னர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவியில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளராகவும், புதுதில்லியில் பட்டாலியன் பிரிவில் கண்காணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். புதுதில்லியில் பணிபுரிந்ததைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் உள்ளிட்டவைகளில் கண்காணிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.
கருத்துகள்