இந்திய (மார்க்சிஸ்ட்) கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்வானார்.
கே.பாலகிருஷ்ணின் பதவிக் காலம் நிறைவடைந்ததால் சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்திய (மார்க்சிஸ்ட்) கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை ஜனவரி .3 ஆம் தேதி துவங்கி இன்று வரை மூன்று நாட்கள் மாநாடு நடைபெற்றது. முதல்நாளில் செந்தொண்டர் பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. இரண்டாவது நாளான சனிக்கிழமை மாநாட்டு பிரதிநிதிகளின் விவாதமும். மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை புதிய நிர்வாகிகள், மாநிலக்குழு, மாநில செயற்குழு, புதிய மாநிலச் செயலாளர்கள் தேர்வு நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்திய (மார்க்சிஸ்ட்) கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் தமிழ்நாடு அரசின் அம்பேத்கர் விருது பெற்றவர். ஏற்கனவே கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக உள்ளார். பழங்குடியின மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். கட்சியின் இளைஞர் அமைப்பு, விவசாய சங்கத்தின் மாநிலச் செயலாளராகவும் இருந்துள்ளார். வாச்சாத்தி வழக்கை இறுதி வரை நடத்தியவர். புதிய மாநிலச் செயலாளராக தேர்வானதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பெ.சண்முகம்,
"மதவெறி சக்திகளை ஒழிக்க திமுகவுடன் இணைந்து இந்திய (மார்க்சிஸ்ட்) கம்யூனிஸ்ட் கட்சி போராடும். மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் மக்கள் விரோத நடவடிக்கையில் பாஜக ஈடுபடுகிறது. வேலைவாய்ப்பை பறிக்கும் செயலிலும் ஈடுபடுகிறது. உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக இந்திய (மார்க்சிஸ்ட்) கம்யூனிஸ்ட் கட்சி போராடும். ஜனநாயக முறையில் போராட்டம் நடத்துவோம்" என்று கூறினார். சிபிஐ(எம்) கட்சியின் 80 பேர் கொண்ட மாநில நிர்வாகக் குழுவினர் கூடி விவாதித்தது. பின்னர் சிபிஐ (எம்) கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பெ.சண்முகம், புதிய மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பெ.சண்முகம். மாணவப் பருவம் முதல் இடதுசாரி கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து பயணிப்பவர். மலைவாழ் மக்கள் சங்கம் உள்ளிட்டவற்றை முன்னெடுத்து நடத்தியவர். வாச்சாத்தி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்காக நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்தியவர் பெ. சண்முகம். இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு., மாநில மாநாட்டில், அக்கட்சியின் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை நடக்கும்போது தட்டி கேட்கும் உரிமை எல்லாருக்கும் உள்ளது. தமிழ்நாடு பா.ஜ க., தலைவர் அண்ணாமலை, பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவம் குறித்து இதுவரை ஏன் பேசவில்லை.
அரசியல் தான் அவர்களுக்கு முக்கியம். தமிழ்நாட்டில் பா.ஜ.க, ஆட்சி அமைக்கும் கனவில் உள்ளது. அதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.
தமிழ்நாட்டில் நடக்கும் தி.மு.க., ஆட்சியில் மக்களுக்காக செயல்படுத்த வேண்டிய திட்டங்களை தடையின்றி செயல்படுத்த வேண்டும்.
ஆனால், கிராமத்தில் பட்டா கேட்டு சிறு இயக்கம் நடத்தினாலும், தெருமுனைக் கூட்டம் என்றாலும், காவல்துறை தடை போட்டு வழக்கு போடுகிறது. ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என்றால் அனுமதி மறுக்கிறது.
முதல்வரை இந்த மாநாட்டின் வாயிலாகக் கேட்கிறேன். தமிழ்நாடச அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளீர்களா?.ஏன், போலீஸ் துறை கட்டுப்பாடில்லாமல் செயல்படுகிறது. இந்திய மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சி., மாநில மாநாட்டு பேரணிக்கு அனுமதி கேட்டோம், மறுத்துவிட்டீர்கள், செங்கொடி பேரணிக்கும் தடை விதித்தீர்கள். இதன் மீதெல்லாம் ஏன் உங்களுக்கு அச்சம்.
எதிர்கட்சிகள் நடத்தும் போராட்டத்துக்கும் அனுமதி அளிக்காமல் தடுப்பது ஏன். சீப்பை ஒளித்து விட்டால் கல்யாணம் நின்றுவிடுமா.
கூட்டணி ஆட்சியில் நாங்கள் இல்லை. நிறைவேற்றாத திட்டங்களுக்கும் தி.மு.க., அரசு தான் பொறுப்பு. தமிழகத்தில் பட்டியிலின அடக்குமுறை அதிகமாக உள்ளது. இதற்காக தி.மு.க., எங்களை விமர்சிக்கலாம்; அதை சந்திக்க தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார். 'தமிழகத்தில் என்ன அறிவிக்கப்படாத அவசரநிலையை பிரகடனபடுத்திவீர்களா நீங்கள்?' என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய (மார்க்சிஸ்ட்) கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார்.
அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சிப்பதாகக் கூறி, தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏற்கனவே கண்டனம் தெரிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு, 'எதற்காககவும் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம். அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்துக்கொடுப்பதாக நான் பேசினேனா? செய்திகளின் உண்மை தெரியாமலேயே அரசியல் கட்சியினர் கண்டன அறிக்கை வெளியிடுவதா?' என அமைச்சர் மகேஷ் கண்டனம் தெரிவித்த நிலையில், மீண்டும் ' இந்த மாநாட்டில் முடிவில் கருத்து தெரிவித்துள்ளார்.
கருத்துகள்