தேசிய கீதத்துக்கான மரியாதையை மீட்டெடுப்பதற்குமான தனது உறுதிப்பாட்டில் ஆளுநர் உறுதியாக உள்ளதாக ஆளுநர் மாளிகை தகவல்
அரசியலமைப்பு விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கும், அனைத்து அரசு விழாக்களிலும் தேசிய
கீதத்துக்கான மரியாதையை மீட்டெடுப்பதற்குமான தனது உறுதிப்பாட்டில் ஆளுநர் உறுதியாக உள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.ஆளுநர் ஆர்.என்.ரவி. 2023 ஆம் ஆண்டு சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த உரையை ஆளுநர் தனக்கு சரி எனப் பட்டதை திருத்தி வாசித்தார்.
கலைஞர், பெரியார், திராவிட மாடல் உள்ளிட்ட வார்த்தைகள் நீக்கப்பட்டு பின் வாசித்திருந்தார். அதற்கும் எதிர்ப்புகள் கிளம்பின. அதன் பின்னர் சபாநாயகர் முழுமையாக உரையை படித்து அது சட்டமன்ற அவைக் குறிப்பில் ஏற்றப்பட்டது. அதேபோல் 2024 ஆம் ஆண்டு நான்கு நிமிடங்களில் உரையை ஆளுநர் முடித்து விட்ட நிலையில் 2025 ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடரான நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த கொடுத்த உரையை ஆளுநர் முற்றிலுமாகப் புறக்கணித்து தேசிய கீதம் காரணமாக வெளியேறியுள்ளார்.
மாநகர காவல்துறை சட்ட விதிகளை மீறி பின்பற்றாமல் திமுக போராட்டம் நடத்த காவல்துறை ஒரே நாளில் அனுமதி வழங்கியதை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர் கே. பாலு சார்பில் தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்
என்ற அவரது கோரிக்கையை ஏற்று நாளை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனுமதியளித்துள்ளார் இந்த நிலையில் திமுகவின் போராட்டம் நடைபெறுமா என்பது தெரியவில்லை
கருத்துகள்