நீதிமன்றத்தில் நடக்கும் விவாகரத்து வழக்கு காரணமாக டெல்லியில் தற்கொலையான தொழிலதிபர் புனித் குரானா, இந்த விபரீதம் மாலை 4.18 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவருக்கும் இவரது மனைவிக்கும் இடையிலான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாகக் கடந்த மாதம் பெங்களூரு ஐடி ஊழியர் தற்கொலை செய்த சம்பவத்தை அடுத்து டெல்லியிலும் அது போன்ற சம்பவம் நிகழ்ந்தது.
புனித் குரானா (வயது 40) டெல்லி தொழிலதிபர் நேற்று [டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி] மாலை 4.18 மணியளவில் கல்யாண் விஹாரில் மாடல் டவுன் பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புனித் குரானாவின் மனைவி மனிகா பஹ்வா மற்றும் அவரது குடும்பத்தினர் அவரை மனரீதியாகச் சித்திரவதை செய்ததாகவும் இதுவே தற்கொலைக்குக் காரணம் என்றும் புனித் குரானாவின் குடும்பம் குற்றம் சாட்டியுள்ளது இருவருக்கும் இடையிலான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இருவரும் சேர்ந்து பேக்கரி ஒன்றை நடத்தி வந்த நிலையில் அதை நிர்வகிப்பது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் இருந்து வந்துள்ளது. புனித் குரானாவின் சகோதரி செய்தியாளர்களிடம் பேசுகையில், மனிகா பஹ்வா, அவரது பெற்றோர் மற்றும் அவரது சகோதரி எனது சகோதரனை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கினர்.
உன்னால் ஒன்றும் செய்ய முடியாது, தைரியம் இருந்தால் தற்கொலை செய்து கொண்டு சாக வேண்டும் என்று கூறி தனது சகோதரன் புனித் குரானாவைத் தற்கொலைக்குத் தூண்டியதாக அவர் தெரிவித்தார். இதற்கிடையே புனித் குரானாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பின்னர் டில்லி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட உதவிக்கு 044 2464 0050 என்ற எண்ணில் அழைக்கவும்.
கருத்துகள்