பிரபல பின்னணிப் பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார்.
. ஐந்து தலைமுறை இசை ஆர்வலர்களை வசீகரித்த மாயாஜாலக் குரல் மூலம் வசீகரித்த பின்னணிப் பாடகர் பி.ஜெயச்சந்திரன் வியாழக்கிழமை கேரளா மாநிலத்தில் திருச்சூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
அவரது வயது 81. சில நாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று வைகுண்ட ஏகாதசி முன்னிரவில் காலமானார். 16,000 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய ஜெயச்சந்திரனின் மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் இனிமையான குரலாக ஒலித்தது. முதிய வயதின் சவால்கள் இருந்த போதிலும், அவரது குரல் வசீகரத்தைக் கொண்டது, இளையராஜா இசையில் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.

மென்மையான குரலில் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் மொழிகளை தாண்டி கிராம நகரங்களில் பிரபலமானது நடிகர் விஜயகாந்தின் வைதேகி காத்திருந்தாள் படத்தில் இடம்பெற்ற 'ராசாத்தி உன்னை காணாத நெஞ்சம்' பாடல் ஜெயச்சந்திரன் குரலின் இனிமைக்கு ஒரு உதாரணம்.மனிதர்களின் பல உணர்வுகளுக்கும் தனது குரலால் உயிர் கொடுத்த பின்னணிப் பாடகர் ஜெயச்சந்திரன் மறைந்தாலும், என்றென்றும் தனது பாடல்களின் வாயிலாக ரசிகர்கள் மனங்களில் நிலைத்திருப்பார்.
கருத்துகள்