இலஞ்ச வழக்கில் தூத்துக்குடி தொழிலாளர் துறை உதவி ஆய்வாளருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை பத்தாயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு
ரூபாய் மூவாயிரம் லஞ்சம் பெற்ற தூத்துக்குடி தொழிலாளர் துறை உதவி ஆய்வாளருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை - தூத்துக்குடி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மேல ரத வீதியைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 66). இவர், வியாபாரம் செய்யும் தராசு முத்திரையிடுதல் மற்றும் பழுதுநீக்குதல் பணிகளுக்கு தொழிலாளர் துறையில் உரிமம் பெறுவதற்காக 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் தேதியன்று விண்ணப்பித்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த அப்போதைய திருச்செந்தூர் தாலுகாவில் தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் காளிராஜ் (வயது 67), உரிமம் வழங்க ரூபாய்.3000. லஞ்சம் கேட்டுள்ளார் ஆனால் கொடுக்க விரும்பாத முத்துராமலிங்கம்,தூத்துக்குடி மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறையில் புகார் அளித்ததன் பேரில் 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் தேதியன்று முத்துராமலிங்கத்திடம் இருந்து ரூபாய்.3,000 பணத்தை லஞ்சமாக காளிராஜ் வாங்கிய போது, ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறையினர் அவரை பணம் பெற்ற கையுடன் கைது செய்தனர்.இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் வஷித்குமார், குற்றம்சாட்டப்பட்ட காளிராஜுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் மற்றும் ரூபாய். பத்தாயிரம் அபராதமும் விதித்து 2025 ஜனவரி.6 ஆம் தேதி நேற்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறை சார்பில் அரசு வழக்கறிஞர் ஜென்ஸி ஆஜரானார்.
கருத்துகள்