மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை பணியிடத்திலிருந்து காத்திருக்கும் பட்டியல் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மூன்றரை வயது சிறுமி அருகில் உள்ள அங்கன்வாடியில் பயின்ற நிலையில், மதிய உணவு இடைவேளையில் கை கழுவ வெளியே சென்ற குழந்தைக்கு அதே பகுதி வசிக்கும் 17 வயத நபர் பாலியல் தொல்லை கொடுத்த போது குழந்தை அலறியதால் செங்கல் எடுத்து தலையில் தாக்கியதில் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து முறையற்ற வகையில் பேசிய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை உடனடியாக பணியிடத்திலிருந்து காத்திருக்கும் பட்டியல் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது சீர்காழியில் மூன்றரை வயது குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி, அந்தக் குழந்தையின் மீதும் தவறு இருக்கிறது. குழந்தை தவறாக நடந்ததும் பாலியல் துன்புறுத்தல் முயற்சிக்கு காரணம் எனக் கூறியது சமூகத்தின் முன் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட...
RNI:TNTAM/2013/50347