முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வேங்கை வயல் விவகாரத்தில் பிரபல மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆஜரான நிலையில் வழக்கில் விசாரணை சூடுபிடித்துள்ளது

வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களும், குற்றம் சாட்டப்பட்டவர்களும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த வழக்கை வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்திலிருந்து, புதுக்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்  எண்-2-க்கு மாற்ற வேண்டுமென சி.பி.சி.ஐ.டி. காவல்துறை வழக்கறிஞர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக நீதிபதி வசந்தி தெரிவித்தார்.             இந்த நிலையில் வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற நிலையை மாற்றியவர்.



பவானியில்  கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் மூத்த வழக்கறிஞர்  வாச்சாத்தி வழக்கை சட்டப்போராட்டம் மூலம் வென்று  காவல்துறை, மற்றும் வனத்துறையின் சிம்ம சொப்பனமாக விளங்கும் ஏழைகளின் பங்காளன் மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகன் அவர்களுடன் வேங்கை வயல் வழக்கு பிரச்சனைக்கான சமூக நீதிக்கான கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அணைத்துக் கட்சியின் வழக்கறிஞர் குழுமம் சார்பில் வழக்கறிஞர் சு.பழனிவேலு, வழக்கறிஞர் சத்யா, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் இராமமூர்த்தி உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுடன் ஆஜராகி இன்று 01.02.2025 புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் சிறப்பாக வாதம் செய்தார் அதில் 1.1 இந்திய அரசியலமைப்பின் 14 வது பிரிவு பின்வருமாறு கூறுகிறது: "சட்டத்தின் முன் எந்தவொரு நபரின் சமத்துவத்தையோ அல்லது இந்தியாவின் பிரதேசத்திற்குள் உள்ள சட்டங்களின் சமமான பாதுகாப்பையோ அரசு மறுக்காது." பிரிவு 15, இந்திய அரசியலமைப்பு 1950

(1) எந்தவொரு குடிமகனுக்கும் மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் அல்லது அவற்றில் ஏதேனும் ஒன்று மட்டுமே அரசு பாகுபாடு காட்டாது. -"தீண்டத்தகாத தன்மை" ரத்து செய்யப்படுகிறது மற்றும் எந்த வடிவத்திலும் அதன் நடைமுறை தடைசெய்யப்பட்டுள்ளது.


"தீண்டத்தகாத தன்மை" யிலிருந்து எழும் எந்தவொரு இயலாமையையும் அமல்படுத்துவது சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாக இருக்கும். என வாதிட்டார் அதற்கு பிறகு சிபிசிஐடி சார்ந்த வழக்கறிஞர் வாதிட்டார்  சி.பி.சி.ஐ.டி. காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் பல்வேறான முரண்பாடுகள் உள்ளதாகவும், அதைத் தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என புகார்தாரர் கனகராஜ் தரப்பில் வழக்கறிஞர்கள் சார்பில் புதுக்கோட்டை வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவர் விசாரணையில் பெட்டி ஏற்றி விசாரணை நடைபெற்றது. 
அப்போது சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி வசந்தி , இந்த வழக்கில் வன்கொடுமை தடுப்பு சட்டம் நீக்கப்பட்டதை ஏன் புகார்தாரருக்குத் தெரிவிக்கவில்லை என அரசு தரப்பு சிபிசிஐடி வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், இது தொடர்பாக புகார்தாரருக்கு மூன்று முறை சம்மன் அனுப்பப்பட்டதாகவும், ஆனால் அவரால் வர முடியவில்லை என எழுத்துப்பூர்வமாகத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேரும் ஆதிதிராவிடர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் நீக்கப்பட்டதாகவும் அரசு தரப்பு சிபிசிஐடி வழக்கறிஞர் தெரிவித்தார். அதோடு, இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட நபர்கள் என யாருமில்லை என்றும், சம்பவத்தின் போது மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்த குடிநீரை யாரும் குடிக்கவில்லை என்றும் விளக்கமளித்த சிபிசிஐடி அரசு வழக்கறிஞர், இதற்கான ஆதாரம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த வழக்கு தொடர்பாக அனைத்துத் தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி வசந்தி, வழக்கு மீதான தீர்ப்பு  பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி வழங்கப்படும் என தெரிவித்து தள்ளி வைத்தார்.                 வழக்கை முடித்துவிட்டு செய்தியாளர் சந்திப்பில் நாம் சந்தித்த நிலையில் பப்ளிக் ஜஸ்டிஸ் இதழ் சார்பில் சிறப்பு நேர்காணல் நடத்திய நிகழ்வாகும் வழக்கு பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டது.  பெட்டிச்செய்தி :-
பாதிக்கப்பட்ட வேங்கைவயல் கனகராஜ் என்பவருடன் நாம் நடத்திய நேர்காணல் வழக்கு விசாரணை பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி முடிவடைந்த பின்னர் வெளிவரும்!

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 26-ஆம் தேதி ஆதிதிராவிடர் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்ட நிலையில் அது  அதிர்ச்சியை உருவாக்கிய நிலையில்.

”எங்கள் கையை வைத்து எங்கள் கண்ணையே நாங்கள் குத்திக்கொள்வோமா?. மேலும் காவல்துறையினர் எங்கள் பிள்ளைகளையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருப்பது கொடுமை. மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவது மாதிரி, நடிகர் விஜய்க்கு பயந்து, எங்களையே குற்றவாளியாக்கியிருக்கிறார்கள். எங்களுக்கு உண்மையான நீதி கிடைக்கும் வரை ஊரில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்துகிறோம்” எனக் கோபத்தில்  வெடிக்கிறார்கள் வேங்கை வயல்  மக்கள். புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில்


40-க்கும் மேற்பட்டவர்களிடம் டி.என்.ஏ சோதனை, ஐந்துக்கும் மேற்பட்டவர்களிடம் குரல் மாதிரி சோதனை நடத்தினர். இந்த விவகாரத்தைக் கண்டித்து பல அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனால், இந்தச் சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

740 நாள்களைக் கடந்தும் இன்னும் குற்றப்பத்திரிகைகூட தாக்கல் செய்யப்படவில்லை என்று பலரும் குற்றம்சாட்டி வந்த நிலையில் தான், அரசு தரப்பு வழக்கறிஞர், ‘ஜனவரி மாதம் 20 - ஆம் தேதியே புதுக்கோட்டை நீதிமன்றத்தில் முரளி ராஜா, முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகிய குற்றச்செயலில் ஈடுப்பட்டதாக மூவர் மீது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளோம்’ எனக் கூறியதால், வேங்கை வயல் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதில், பா.ஜ.க அண்ணாமலை, கம்னியூஸ்ட் கட்சியின் சண்முகம், எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்டோர், ‘இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும்’ என்று அறிக்கை வெளியிட்டனர். இதற்கிடையில், இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கலுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் வேங்கை வயலுக்கு சென்று மக்களோடு அமர்ந்து போராட்டம் நடத்த முயன்றதால், காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில், வேங்கை வயல் கிராம மக்கள்  சனிக்கிழமை முதல் வேங்கை வயல் கிராமத்தில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தச் சூழலில், இந்த விவகாரம் குறித்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் வேங்கை வயலைச் சேர்ந்த மக்களில் ஒருவர்.

“காவலதுறையினர்  எங்களை நம்ப வைத்துக் கழுத்தறுத்துவிட்டார்கள். குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பவர்கள் மூவரும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில், தண்ணீரில் மலம் கலந்த்தை ஏறிப் பார்த்து, எல்லோருக்கும் சொன்னவர்கள். ஆனால், அவர்களையே குற்றவாளியாக்கியிருப்பது, எங்கள் வயிற்றில் நஞ்சையள்ளிக் கொட்டியிருக்கிறது. சம்பவம் நடைபெற்ற நாள் முதல் நாங்கள் கைகாட்டிய குற்றவாளியை காப்பாற்றுவதற்காக, எங்கள் பிள்ளைகளை ’ஊருக்கு இளைத்தவன் ஆண்டி‘ என்பது போல் குற்றவாளியாக்கினார்கள். இங்குள்ள ஆளுங்கட்சி நபர்கள், உண்மையான குற்றவாளிக்கு சார்பாகவும், எங்களுக்கு எதிராகவும் உருவாக்கிய திரைக்கதையை காவல் துறை குற்றப்பத்திரிகையாக கோர்ட்டில் சமர்பித்திருக்கிறார்கள். அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் எங்களை அழைத்து, விருது கொடுத்தார்கள்.அப்போது, அதில் கலந்துகொண்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், ‘வேங்கை வயல் பிரச்னையில் உண்மை ஜெயிக்க வேண்டும். உங்கள் ஊருக்கு விரைவில் வருகிறேன்’ என்று எங்களிடம் சொன்னார். அதேபோல், கடந்த ஒரு வார காலமாக, ‘விஜய் வேங்கை வயலுக்கு வரப்போகிறார்’ என்று தகவல் பரவியது. அப்படி நடந்தால், உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்ற முடியாது எனப் பயந்து, அதனால் ஏற்படும் அரசியல் அழுத்தத்துக்குப் பயந்து, எங்கள் பிள்ளைகளை பலிகொடுத்திருக்கிறார்கள.

அதாவது, மூட்டைப் பூச்சிக்கு பயந்து, வீட்டைக் கொளுத்திய கதையாக நடிகர் விஜய்க்கு பயந்து, அப்பாவியான இளைஞர்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றியிருக்கிறார்கள். உண்மையான குற்றவாளிகளைக் கண்டறியும் வரையில் நாங்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் வாங்கப்போவதில்லை” என்றார் உறுதியாக!.  நெருக்கடி தருகிறார்கள்’

அடுத்துப் பேசியவர்,

“இவ்வளவு நாளும் நாங்கள் கைகாட்டிய குற்றவாளிகளை ஏதும் செய்யாமல், எங்கள் தரப்பையே குற்றவாளியாக்கியதால், நாங்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால், காவல்துறை, போராட்டத்தைக் கைவிடும்படி நெருக்கடி தருகிறார்கள். இலுப்பூர் ஆர்.டி.ஓ அக்பர் அலி ஞாயிற்றுக் கிழமையன்று வந்து, ‘போராட்டத்தைக் கைவிடுங்கள். உங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருகிறோம்’ என்று நைசாகப் பேசி, எங்கள் போராட்டத்தை கலைக்கப் பார்த்தார்கள். ஆனால் நாங்கள், ‘எங்களுக்கு தேவை உண்மையான குற்றவாளிகளைக் கண்டுப்பிடிக்க வேண்டும் என்பது தான். 1964 - ஆம் ஆண்டிலேயே எங்கள் பாட்டன்,  உழுத நில உரிமையைப் பறித்து, இங்குள்ள ஆதிக்க சக்திகள் எங்கள் முன்னோர்களைக் கொடுமைப்படுத்தினர். அதை மீட்கப் போராடியதால், சில பெண்கள் தாலியை இழந்தனர். இப்போது நாங்கள், இந்த மலம் கலந்த தண்ணீர் பிரச்னையில் அதே ஆதிக்கச் சக்திகளால் குற்றவாளியாக்கப்பட்டிருக்கிறோம். ஆண்டாண்டு காலமாக அடிமைப்படுத்தப்பட்டு, இங்குள்ளவர்களால் கொடுமைக்கு ஆளாவதே எங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. எங்களைக் குற்றவாளியாக்கிவிட்டு, நீங்கள் தரும் அற்ப வாக்குறுதிகளை வைத்துக்கொண்டு, நாங்கள் என்ன செய்வது?’ எனச் சொல்லி மறுத்துவிட்டோம்.   ’ மாவட்ட ஆட்சியர் கலைந்து செல்லுங்கள்’ என்று சொல்லிப் பார்த்தும், நாங்கள் மறுத்துவிட்டோம். எங்கள் மீது விழுந்த களங்கம் மறையும் வரையில் போராட்டத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை” என்றார் அடுத்துப் பேசிய நபர் 

“முதல்கட்டமாக இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததைக் கண்டித்து, வேங்கை வயல் மக்களோடு அமர்ந்து போராடிய போது, காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டோம். அதனால், எங்கள் கட்சி தலைமையிடம் தகவல் தெரிவித்தோம். தமிழ்நாடு அரசு தரப்பில் பேசிவிட்டு சொல்வ்தாகச் சொல்லியுள்ளார். ‘குற்றப்பத்திரிகையை ஏற்க கூடாது’ என்று நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளோம். புதுக்கோட்டையில் எங்கள் கட்சியின் மூன்று மாவட்டங்கள் சார்பில் கட்சி தலைமையின் ஆலோசனையோடு இந்த விவகாரத்திற்கு எதிராக பெரிய அளவில் முன்னெடுப்புகளை செய்ய இருக்கிறோம்” என்றார்.இறுதியாக, இந்த விவகாரம் குறித்து இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி கல்பனாதத்திடம் பேசினோம்.

”ஆல்ரெடி பிரஸ் நோட் கொடுத்திருப்பாங்களே” என்றார். நாம் இந்த விவகாரத்தில் வேங்கை வயல் கிராம மக்கள் சொன்ன வஷயங்கள் குறித்து கேட்க, “சி.பி.சி.ஐ.டி-யைப் பொறுத்தவரையில் ஹெட் ஆபிஸில் கொடுப்பது தான். தனிப்பட்ட முறையில் கொடுக்க முடியாது. ஸாரி சார். இதுவரைக்கு பிரஸ் நோட்டாக கொடுக்கப்பட்டுள்ளது மட்டும் அஃபிஸியாலாக உள்ள தகவல். இன்வெஸ்டிகேஷன் சம்மந்தப்பட்ட விவகாரம் என்பதால், வேறு எதையும் உங்களிடம் ஷேர் பண்ண முடியாது” என்றதோடு, முடித்துக்கொண்டார்.வேங்கைவயல் விவகாரத்தைப் போல ஒரு வழக்கை இதுவரை மக்கள் கண்டதில்லை !

இது வரை சிபிசிஐடி தரப்பில் 397 சாட்சிகள் ,196 செல்போன்கள் ஆய்வு ,1 லட்சத்துக்கும் மேற்பட்ட தொலைபேசி எண்களை உள்ளடக்கிய 87 செல்போன் டவர்கள் ,31 நபர்களிடம் DNS சோதனை,நீக்கம் செய்யப்பட்ட செல்லுலார் தொலைபேசி உரையாடல்கள் ,Delete செய்யப்பட்ட படங்கள் , வீடியோக்கள் ,

என அலசி ஆராய்ந்த தமிழ்நாடு சிபிசிஐடி காவல்துறை குற்றவாளிகள் மீது துல்லியதாக்குதல் நடத்தியிருக்கிறதா இல்லை ஏதோ அரசியல் காரணங்களுக்காக மடைமாற்றமா என்பது தற்போது சிபிசிஐடி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ஏற்கப்படுமா இல்லையா என்பதை வைத்து மூன்றாம் தேதி வெளிவரும் தீர்ப்பில் முடிவாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...