காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூண்டோடு மாற்றம்; தமிழ்நாடு பொறுப்பாளராக ஜோடகன்கர் நியமனம்.தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளரான அஜோய் குமார் மாற்றம் செய்யப்பட்டார், தமிழ்நாடு பொறுப்பாளராக ஜோடகன்கர் நியமனம்
கடந்த சில தேர்தல்கள் காங்கிரஸ் கட்சிக்கு பெருத்த ஏமாற்றத்தையும் பலத்தஅடியாக இருக்கிறது. காரணம் மல்லிகார்ஜுன கார்கே தலைவராக இருந்த நிலையில் அவர் செய்த ஜாதி ரீதியாக மாநிலத்தின் தலைவர்கள் நியமனம் தான்.
குறிப்பாக, நடந்து முடிந்த டில்லி சட்டசபைத் தேர்தலில் 3 வது முறையாக பூஜ்யம் சீட்டுகள் கிடைத்தன. இதனால், காங்கிரஸ் கட்சியினர் துவண்டு போயினர். மேலும், இண்டி கூட்டணியில் காங்கிரஸூக்கான மௌசும் குறைந்தது. எனவே, கட்சியை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட நிலையில், பல்வேறு மாநிலங்களில் பொறுப்பார்கள் ஆதிதிராவிடர் வகுப்பு சார்ந்த பலர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாஹேல் பஞ்சாப் மாநிலத்தில் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பொறுப்பாளராக சையத் நசீர் ஹூசேன் நியமனம் செய்யப்பட்டார். அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவிருக்கும் பிஹாருக்கு கிருஷ்ணா அல்லவருவும், ஹரியானாவுக்கு ஹரிபிரசாத்தும், சண்டிகர் மற்றும் ஹிமாச்சலுக்கு ரஜனி பட்டீலும், மத்திய பிரதேசத்திற்கு ஹரீஷ் சவுத்ரியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவா மாநில பி சி சி யாக சிறப்பாக பணியாற்றியுள்ளார்.
2018 லிருந்து 2022 வரை
அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர்
ராகுல்காந்தி தயவால் கோவாவின் முதலமைச்சராக சகோதரர் கிரிஷ் சோடங்கரை அமர்த்த
அவரது பிரச்சாம் மூலம் பதினைந்து ஆண்டுகாலத்திற்குப்பிறகு காங்கிரஸ் அங்கு தனிப்பெரும் கட்சியாக பதிமூன்று தொகுதிகளில்
வெற்றிபெற்றது.
காங்கிரஸ் கட்சியின் ஆமைவேக
செயல்பாட்டால் மற்றும் ஜாதி பாகுபாடு காரணமாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பல ஆண்டுகளாக பரிகொடுத்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சி தணித்து நின்று டெபாசிட் தாங்குமா என்பது புதிர் . ஆனால்
சௌடங்கர் கோவாவின் முதலமைச்சராகியிருக்க
வேண்டியவர். ஏதோ சில அரசியல் காரணங்களுக்காக நடக்கவில்லை
பள்ளியின் ஆசிரியராக
வாழ்வைத் தொடங்கியவர்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவரும் விரைவில் மாறுவதற்கு வாய்ப்புள்ளது தமிழ் பேசுவதைப்
புரிந்து கொள்வார் ஹரிஷ் சௌடங்கர் நம் தமிழகத்தின் காங்கிரஸ் பொறுப்பாளராக பணி ஏற்கிறார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளராக இருந்த அஜோய் குமார் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, கிரிஷ் ஜோடகன்கரை நியமனம் செய்துள்ளார்கள். இவர் புதுச்சேரிக்கும் பொறுப்பாளராகச் செயல்படுவார். இதேபோல, பல மாநிலங்களுக்கு பொறுப்பாளர்கள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர்.தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவரின் செயல்பாடுகள் குறித்து, கட்சியின் மேலிடத்துக்கு புகார்கள் மற்றும் மாற்று யோசனைகள் ஏற்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியினர் தேர்தலைப் புறக்கணித்த நிலையில், தி.மு.க., கூட்டணி சார்பில் காங்கிரஸ்., அங்கே போட்டியிட்டிருந்தாலும் எளிய வெற்றியே கிடைத்திருக்கும் என்ற தகவலை, தமிழ்நாடு காங்கிரஸிலிருந்து சிலர், மேலிடத்துக்கு எடுத்துச் சொல்லியுள்ளனர்.
இந்த விஷயத்தில், தமிழ்நாடு காங்கிரஸ்., தலைவர் தன்னிச்சையாக முடிவெடுத்து, காங்கிரஸ்., தொகுதியை தி.மு.க.,வுக்கு தாரை வார்த்தது தேவையில்லாதது என்ற தகவலையும் மேலிடத்திடம் சொல்லியுள்ளனர் எனத் .
தகவல் வருவதையடுத்தே, தமிழ்நாடு காங்கிரஸ்., தலைவராக இருக்கும் செல்வம் எனும் செல்வப்பெருந்தகை என்ற நபரை மாற்றிவிட்டு, புதியவர் ஒருவரை நியமிக்க கட்சித் தலைமை முடிவெடுத்திருப்பதாகவே தெரிகிறது. ஆதிதிராவிடர்
பட்டியலினத்தைச் சேர்ந்த செல்வப்பெருந்தகையை மாற்றும் பட்சத்தில், அதே இனத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ., விசுவநாதன் அல்லது திருவள்ளூர் நாடாக உறுப்பினர், சசிகாந்த் செந்திலை புதிய தலைவராக்கும் படி தலைமைக்கு ஆதிதிராவிடர் மற்றும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த சிலர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஆலோசனை கூறியுள்ளனர் இருந்த போதிலும் தற்போது பலம் வாய்ந்த சமூக நபர்கள் நியமிக்கப்படவே வாய்ப்புகள் தெரிகிறது தலைமை மாற்றம் குறித்த தகவல் வெளியே பரவியதையடுத்து, மாநிலத்தின் தலைவர் பதவியை பிடிக்க, கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் மேலிடத்துக்கு அழுத்தம் கொடுக்கத் துவங்கியுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் வட்டாரங்கள் தகவல் கூறி வருகின்றனர்.
கருத்துகள்