முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேசியக் கல்விக் கொள்கை மத்திய அமைச்சர் கருத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினரின் பதில்

தேசியக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்கும் வரை, விதிகளின் படி தமிழ்நாட்டுக்கு எஸ்எஸ்ஏ திட்ட நிதியை ஒதுக்க முடியாதென மத்திய அமைச்சர்


தர்மேந்திரப் பிரதான் தெரிவித்தார். தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் நிர்வாகத்தில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகள் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் நிதியுதவி அளித்து வருகிறது. மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் (SSA) நிதியுதவி தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்படுகிறது. இந்தத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஆண்டு தோறும் மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் என்ற விகிதாச்சாரப் பகிர்வு முறையில் நிதி வழங்கப்படுகிறது.இந்த நிதியைப் பெற மத்திய அரசின் விரிவான கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் விதிகளை மாநில அரசுகள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.



இதற்கிடையே, தேசியக் கல்விக் கொள்கையின் அம்சமான PM ஸ்ரீ பள்ளி திட்டத்தில் சேராத தமிழ்நாடு உட்பட மாநிலங்களுக்கிடையே நிதியை மத்திய அரசு கடந்தாண்டு முதல் நிறுத்தி விட்டது. அந்த வகையில் சர்வ சிக்ஷ் அபியான் திட்டத்தில் 2023-24 ஆம் கல்வியாண்டின் 4-ஆம் தவணை நிதி ரூபாய்.249 கோடியும், 2024-25 ஆம் கல்வியாண்டின் நிதி ரூபாய்.2,152 கோடியும் மத்திய அரசு விடுவிக்காததால் தமிழ்நாடு மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மேலும், மாநிலத்தின் பள்ளிக் கல்வித் துறையின் முக்கியத் திட்டங்களும் தடைப்படும் சூழல் நிலவுகின்றது. மறுபுறம் மத்திய அரசு நிதியை உடனே வழங்க வேண்டும். இல்லையெனில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் 3.0 நிகழ்ச்சியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்ட போது அவரிடம் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காதது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு, ‘‘தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க தமிழ்நாடு அரசு மறுக்கிறது. அதனால் விதிமுறைகளின்படி எங்களால் நிதிமை ஒதுக்க முடியாது. இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்கள் தேசியக் கல்வியைக் கொள்கையை ஏற்கும் போது தமிழ்நாடு மட்டும் அதற்கு மறுப்பு தெரிவிப்பது சரியானதல்ல.




முதலில் கல்விக் கொள்கையை ஏற்பதாக தமிழ்நாடு அரசு ஒப்புக்கொண்டு கையொப்பமிட்டது. அதன்பின்னர் நடந்த அரசியல் காரணங்களுக்காக ஏற்க மறுக்கிறார்கள். இது அவர்களின் தவறு. இதில் தமிழ்நாடு அரசுதான் அரசியல் செய்கிறது. அவர்களுக்கு தமிழ்நாடு வளர்ச்சியின் மீது அக்கறை இல்லை. தேசியக் கல்விக் கொள்கையில் மும்மொழி திட்டம் உள்ளது. அதையேற்று தமிழ், ஆங்கிலத்துடன், கன்னடம் உட்பட ஏதேனும் ஒரு இந்திய மொழியை கற்பதில் என்ன தவறு உள்ளது. (அதேபோல் தமிழ் பிற மாநிலங்களில் கற்கும் நிலை வரவேண்டும் )





உண்மையில், தேசியக் கல்விக் கொள்கை உள்ளூர் மொழிக்கே முக்கியத்துவம் தருகிறது. அப்படியெனில் தமிழ் மொழிக்கு எதிராக தமிழ்நாடு அரசு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கும் வரை விதிகளின்படி தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்க முடியாது” எனக் கூறினார்.தேசிய கல்விக் கொள்கை PM Shri பள்ளியை தமிழ் நாட்டில் ஆரம்பிக்கப் போகிறார்களா என சந்தேகம் தற்போது தான் நிவர்த்தியானது மத்திய அமைச்சர் பதில் தகவல் மூலம் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை ஏன் நிறுத்தி வைத்துள்ளது என தற்போது மத்திய அரசு அமைச்சர் மூலம் தெளிவு படுத்தி விட்டது. தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ளப் பாதிப்புக்கு பாஜக மத்திய அரசு இதுவரை உரிய நிவாரண நிதி வழங்கவில்லை எனவும். இப்போது, ​​தங்கள் கொள்கைக்கு இணங்க மறுப்பதால் கல்விக்காக வழங்கவேண்டிய நிதியையும் நிறுத்தி வைத்திருக்கிறது எனவும். 2023-24 ஆம் கல்வியாண்டுக்கு சமக்ர சிக்ஷா திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய ரூபாய்.1,045.38 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது எனவும்.



1976-ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தில் 42-வது திருத்தம் மேற்கொள்ளப்படும் வரை, கல்வி மாநிலப் பட்டியலில் தான் இருந்தது. அவசர நிலைக் காலத்தில் அது பொதுப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந்தியாவில் குக்கிராமங்கள் வரை இன்று கல்வி சென்று சேர்ந்ததற்குக் காரணம், மாநிலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் உருவாக்கிய திட்டங்களே! இதை உணர்ந்தே இந்தியாவை ஆண்டவர்கள் மாநிலங்களின் கல்விச் செயல்களில் தலையிடுவதில்லை. காரணம் பலதரப்பட்ட மொழிகள் இணைந்து உள்ள நாட்டில் மாநிலங்களின் கருத்தறியாமல் திட்டங்களை உருவாக்குவதில்லை. பொதுப்பட்டியலில் இருக்கும் ஒரு துறையில் மத்திய அரசோ, மாநிலங்களோ திட்டங்களை உருவாக்குமாயின் இருதரப்பும் பரஸ்பர புரிதலோடு செய்யவேண்டும். ஆனால், தற்போது மத்தியில் ஆளும்  அரசு மாநிலங்களின் அதிகாரத்தைச் சுருக்கி, அதை நடைமுறைப்படுத்தும் மனோபாவத்தில் நடந்து கொள்கிறது எனவும். தமிழ்நாட்டில் 37,554 அரசுப்பள்ளிகள் செயல்படுகின்றன. 53 லட்சம் மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.



பட்ஜெட்டில் 13.1 சதவீதம் அளவுக்கு கல்விக்கு நிதி ஒதுக்கீடு செய்கிறது. 2024-25 ஆம் நிதியாண்டில் ரூபாய.47,266 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதில் பெரும்பங்கு, சம்பளம், நிர்வாகச் செலவுகளுக்கே சென்று விடுகிறது. மத்திய அரசு 2023-24 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ரூபாய். 1,12,900 கோடி கல்விக்காக ஒதுக்கியுள்ளது. அரசு நடத்தும் பள்ளிகள், கல்வி நிறுவனங்களுக்கான ஒதுக்கீடுகள் தவிர பல்வேறு திட்டங்கள் மூலம் மாநிலங்களுக்கு இந்த நிதி பகிர்ந்தளிக்கப்படும். படிப்படியாக மாநில நிதிகளுக்கான ஒதுக்கீடு குறைந்தது. பழைய கட்டடங்களின் பராமரிப்பு, புதிய கட்டுமானங்கள், கற்றல் கற்பித்தல் திட்டங்கள், நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் மக்கள் தொகை பெருக்கம் போன்றவற்றுக்கு  மத்திய அரசு தரும் நிதியைத்தான் மாநிலங்கள் நம்பியிருக்கின்றன. தவிர, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் 25 சதவீதம் எளிய குடும்பத்துப் பிள்ளைகளுக்கான கல்விக் கட்டணத்தையும் மத்திய அரசு தரும் நிதியிலிருந்தே மாநில அரசுகள் செலுத்தி வந்தன. ( ஆனால் அதில் தகுதியான பிள்ளைகள் விபரம் ஊழல் காரணமாக வெளியில் தெரிவிப்பதில்லை ).

உரிய காலத்தில் இந்த நிதி வந்து சேராததால் பல பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன எனவும். 2023-24  ஆம் கல்வியாண்டில் சமக்ர சிக்ஷா திட்டத்தில் 2,090.76 கோடி ரூபாயை அரசிடம் கோரியிருந்தது தமிழ்நாட்டின் அரசு. இதில் 1,045.38 கோடியை மட்டும் இரு தவணைகளில் தந்த மத்திய அரசு, மீதி ரூபாய்.1,045.38 கோடியை நிறுத்தி வைத்தது.

தமிழ்நாடு மாநில அரசு மத்தியரசோடு தொடர்ந்து கொள்கை முரண்படுவதால் இந்த நிதி நிறுத்தப்பட்டுள்ளது எனவும். இந்திய அளவில் ஒப்பிடும் போது தமிழ்நாடு அளவுக்கு வேறெந்த மாநிலமும் கடந்த காலங்களில் கல்வியில் வளர்ச்சி அடையவில்லை. இந்தக் கல்வியாண்டில்கூட 8,600 நடுநிலைப்பள்ளிகளுக்கு அரசே இணைய வசதியுடன் கூடிய ஹைடெக் லேப் தரவிருக்கிறது. 1,000 தொடக்கப்பள்ளிகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் அறை வருகிறது. மத்திய அரசு பி எம் ஸ்ரீ திட்டத்தின் மூலம் மாவட்டத்துக்கு ஒரு சில பள்ளிகளை மட்டுமே தேர்வு செய்கிறது. ஆனால் தமிழ்நாடு அரசு ஏற்கனவே எல்லாப் பள்ளிகளையும் நவீனப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாம் செல்வது சரியான பாதை. தமிழ்நாட்டுப் பாடநூல்களைவிட எதுவும் மேலானவை அல்ல என கூறும் நாம் தான் தகுதியான நபர்கள் பாடநூல் கழகத்தில் நியமனம் செய்யப்பட்ட னரா என்பது எழுவினா?. கியூ.ஆர் கோடு வசதியுடன் மாணவர்களை ஈர்க்கும் வகையில் வேறெந்த போர்டும் பாடநூல்களை உருவாக்கவில்லை எனக் கூறினாலும் அதில் உள்ள விபரங்களை உற்று நோக்க வேண்டும் சில தவறுகள் உள்ளன.

கல்விச் செயலிகள், கல்வி டி.வி எல்லாம் இங்கு உள்ளன. இந்தியாவுக்கு 50 சதவிகிதத்துக்கு மேல் வரிவருவாய் தரும் 8 மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாகும். தேசத்தின் சக்கரத்தை நகர்த்தும் அச்சாணியாக விளங்கும் ஒரு மாநிலத்தை எந்தக் காரணத்தைக் கொண்டும் மத்திய அரசு. வெறும் 1,245 பள்ளிகளை மட்டுமே நடத்தும் கேந்திர வித்யாலயாவுக்கு ரூபாய்.8,364 கோடியை ஒதுக்கியுள்ள மத்திய அரசு, இந்தியா முழுவதும் 14 லட்சம் உள்ள பள்ளிக்கூடங்களுக்கான சமக்ர சிக்ஷா திட்டத்துக்கு 37,500 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதையும் தகுந்த நேரத்தில் மாநிலங்களுக்கு தராமல் இழுத்தடிப்பது நியாயமல்ல எனவும். ஆளும் கட்சிகளுக்குள் கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம். அது அரசுப்பள்ளிகளை நம்பிப் படிக்கும் கோடிக்கணக்கான ஏழைப் பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடாது. பணம் பெறுவதற்காக கீழிருக்கும் கடிதத்திற்கான காரணம் இதுதான் புதிய தேசிய கல்விக் கொள்கையில் 1.மும்மொழிப்  பாடத் திட்டம் 2.மூன்றாம் வகுப்பிற்கு பொது தேர்வு        3.ஐந்தாம் வகுப்பிற்கு பொது தேர்வு        4.ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாவிட்டால் இடைநிற்றல் (டிராப்-அவுட்) 5.எட்டாம் வகுப்பிற்குப் பொதுத் தேர்வு.      6 ஆம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஆண்டுகளுக்கு இரு (Semester) பொதுத் தேர்வுகள் 

7.கலை மற்றும் அறிவியல் கல்லூரி  (B.A.& B.Sc.) சேர்வதற்கும் தேசிய அளவில் பொதுத் தகுதிதா தேர்வு (Entrance Exam) (நீட் தேர்வு போல) நடத்தப்படும். இந்த நிலையில். தேசிய கல்விக் கொள்கையில் நிதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என திமுக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

'மத்திய மனிதவள மேம்பாடு மற்றும் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் அளித்த பேட்டி கண்டனத்திற்குரியது.

மாநில அரசானது நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று ரத்து செய்ய முடியும்.

திமுக எம்.பி.வில்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காததன் காரணமாக, PM Shri திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய ரூ.2,152 கோடி நிதியானது மறுக்கப்பட்டு குஜராத் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் அளித்த பேட்டி கண்டனத்திற்குரியது.

புதிய கல்விக் கொள்கை என்ற போர்வையில் ஒன்றிய அரசு தனது அரசியல் கருத்துக்களையும், அழுத்தங்களையும், சித்தாந்தங்களையும் தமிழக அரசின் மீதும், தமிழக மாணவர்கள் மீதும் திணிக்க முயல்வதையே இது காட்டுகிறது.

இதன் மூலம் மாண்புமிகு ஒன்றிய கல்வி அமைச்சர் அவர்களுக்கு இந்திய அரசியலமைப்பிற்கும் - ஒன்றிய அரசின் கொள்கை முடிவுகளுக்கும் இடையேயான வேறுபாடு தெரிந்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது.

நாம் குழப்பமான மக்கள் என்ற கருத்தை அவர் முன்வைக்கிறார்.

தமிழக மக்கள் நன்கு படித்தவர்கள், ஆணித்தரமானவர்கள், தெளிவான கருத்துக்கள் மற்றும் சிந்தனைகள் கொண்டவர்கள். ஆகையால் மாண்புமிகு அமைச்சர் அவர்களே, நீங்கள் முதலில் உங்கள் குழப்பத்தை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

சில முடிவுகளை எங்கள் மீது திணிப்பது உங்கள் அரசாங்கத்தின் சூட்சமமான திட்டம் என்பதை நாங்கள் அனைவரும் புரிந்துகொண்டிருக்கிறோம்.

மாண்புமிகு அமைச்சர் அவர்களே..

உங்களது குழப்பங்கள் அனைத்தையும் நான் தீர்த்து வைக்கிறேன்.

அரசியல் சாசனச் சட்டத்தின் 73-வது பிரிவின்படி ஒன்றிய அரசு எடுக்கும் அனைத்து கொள்கை முடிவுகளும் எப்போதும் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டவை அல்ல!

கொள்கைகளானது தன்னிச்சையானதாகவும், விசித்திரமானதாகவும், கற்பனையானதாகவும், சட்டவிரோதமானதாகவும், பகுத்தறிவற்றதாகவும், சட்டத்திற்கு முரணானதாகவும் இருக்கும் போது அல்லது மாநிலத்தின் சட்டங்கள், சுயாட்சி மற்றும் கூட்டாட்சி ஆகியவற்றில் தலையிடும்போது அவை மாநில அரசைக் கட்டுப்படுத்தாது.

அந்த வகையில் அவற்றை மாநில அரசானது நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று ரத்து செய்ய முடியும்.

குறிப்பாக மிரட்டல்கள், வற்புறுத்தல்கள் மூலம் திணிக்கப்பட்ட இதுபோன்ற பல கொள்கைகளை தமிழக அரசு நிராகரித்துள்ளது என்பதை வரலாறு காட்டும் நிலையில், ஒன்றிய அரசு திணிக்கும் கொள்கைகளை தமிழக அரசு கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை.

மும்மொழிக் கொள்கையை திணிப்பது, 1937-ம் ஆண்டிலேயே தமிழகம் நிராகரித்த இந்தி திணிப்பை நினைவூட்டுகிறது.

மேலும், திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் 1967 ஆம் ஆண்டில் அலுவல் மொழிச் சட்டத்தில் ஒன்றிய அரசை திருத்தம் செய்ய வைத்ததோடு, இந்தி மற்றும் ஆங்கிலம் அலுவல் மொழிகளாக காலவரையின்றி பயன்படுத்தப்படுவதை உறுதி செய்தது. இது இந்தியக் குடியரசில் தற்போதுள்ள கிட்டத்தட்ட காலவரையற்ற இருமொழிக் கொள்கையை நிறுவிட வழிவகுத்தது.

இந்த நிலையில் தேசிய கல்விக் கொள்கை எப்படி வேறுபட முடியும்.

1960 களில் ஒன்றிய அரசு அளித்த உத்தரவாதங்களை பலவீனப்படுத்த இது பின்வாசல் வழியாக மேற்கொள்ளப்படும் அணுகுமுறையா?

தமிழகம் தேசிய கல்விக் கொள்கையை கட்டாயம் ஏற்க வேண்டும் என நிர்பந்திக்கும் மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அவர்களின் இத்தகைய அரசியல் கருத்துக்கள், நாட்டிலேயே முதலிடத்தில் இருக்கும் ஒரு மாநிலத்தின் வலுவான கல்வி முறையை பலவீனப்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

இந்த அணுகுமுறை தமிழ்நாட்டின் உயர்ந்த கல்வித் தரத்தையும், கல்வியில் மாநிலம் கொண்டுள்ள முன்னணி நிலையையும் அச்சுறுத்துவதாக இருப்பதோடு, மாநிலத்தின் ஒட்டுமொத்த கல்விக் கட்டமைப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும். இரு மொழிக் கொள்கையைத் தாண்டி கூடுதல் மொழிகளைக் கற்பதை தமிழ்நாடு எதிர்க்கவில்லை.

ஆனால், தமிழக மக்களுக்கான சிறந்த கல்வி எது என்பதை மாநில அரசுதான் தீர்மானிக்க வேண்டுமே தவிர, அரசியல் சாசனம் உத்தரவாதம் அளித்துள்ள மாநில சுயாட்சியில் டெல்லியில் அமர்ந்து கொண்டு தலையிடும் ஒருவரால் தீர்மானிக்கப்படக் கூடாது.

ஒன்றிய அரசு அளிக்கும் நிதியானது அதன் சொந்த நிதி அல்ல.. மாறாக மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட வரிப்பணமாகும்.

எனவே, அத்தகைய நிதியின் பயன்பாட்டை பகுத்தறிவற்ற கொள்கைகளால் நிர்பந்திக்க முடியாது. கல்வியை பொறுத்தவரை நாங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறோம்.

கொள்கைகளை ஏற்றுக் கொள்ளும் விவகாரத்தில் ஒன்றிய அரசின் திணிப்பு மற்றும் நிர்ப்பந்தச் செயல்களுக்கு எங்கள் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் என்றும் அடிபணிய மாட்டார்.

ஒன்றிய அரசால் நிறுத்தி வைக்கப்படும் நிதியானது நமது மாநிலத்திற்கும் நமது மாணவர்களுக்கும் உரித்தானது என்பதை நினைவில் கொள்வது அவசியம். இந்த நிதிகள் வரி செலுத்துவோரின் பணத்தை உள்ளடக்கியது.

மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அவர்களே, உங்களின் அரசியல் கருத்துக்களையும், சித்தாந்தங்களையும் எங்கள் மீது நீங்கள் திணிக்க முடியாது.

இந்த நிதியானது எமது நியாயமான பங்கு மற்றும் அவற்றின் மீது சட்டப்படி எங்களுக்கு உரிமை உண்டு. இந்த நிதி கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம்!'

எனக் குறிப்பிட்டுள்ளார்.’சர்வ சிக்ஷ்யா அபியான்’ என்ற பெயரில் இங்கு பள்ளிக் கல்வித் துறைக்குள் நுழைந்து இளம் சிறார்களின் கல்வித் திறனை முடக்கியதன் தொடர்ச்சியாக வரும் திட்டங்களை தான் இங்கு  EMIS அப்டேட், எண்ணும் எழுத்தும், இல்லம் தேடிக் கல்வி, ஆன்லைன் கல்வி, நம்ம ஸ்கூல் பவுண்டேசன், நான் முதல்வன். என வெவ்வேறு பெயர்களில் மாநிலக் கல்வித் துறை அமல்படுத்தி பள்ளிக் கல்வித் துறையை பாழடித்தது தனிக் கதை. நிதி கிடைக்கிறதே என்பதற்காக இவற்றை எல்லாம் ஏற்றது முதல் பிழை.

 போதாதென்று, பிரதம மந்திரி ஸ்ரீ திட்டம் குறிப்பிட்ட சில அரசு பள்ளிகளை மட்டும் மிக உயர்ந்த பைவ் ஸ்டார் கல்வி தரத்துடன் நடத்த வேண்டும் என்பதே இது. மற்ற அரசு பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் கூட இல்லாதது பற்றிக் கவலையில்லை. 

 மூன்று வயதிலேயே ஆட்சியாளர்களின் கொள்கையைத் திணிக்கும் பாடத் திட்டங்கள், ஆறாம் வகுப்பில் தொழிற்கல்வி, 10 ஆம் வகுப்பு பொது தேர்வு வேண்டாம். 12 ஆம் வகுப்பு தேர்வு கூட முக்கியமில்லை. உயர்கல்வி அனைத்திற்குமே நீட் போன்ற நுழைவு தேர்வு. ஆகியவையே பி.எம்.ஸ்ரீயின் ஆபத்தான அம்சங்களாகும் பார்க்கப்படுகிறது.

’’இவற்றை எல்லாம் அமல்படுத்தமாட்டோம். எதிர்க்கிறோம்’’ என தமிழ்நாடு அரசு சொன்னதாகத் தகவலில்லை.

 நியாயப்படி மேற்படியானவற்றைத் தான் எதிர்க்க வேண்டும். இதையெல்லாம் எதிர்க்காமல் மும்மொழிக் கல்வித் திட்டத்தை மாத்திரம் எதிர்ப்பது ஏன் என்பதும் புரியவில்லை.?

’’ஹிந்தியைக் கற்பிக்க மாட்டோம்’’ என தமிழ்நாடு முதல்வர் சொல்ல,

’’ஏன் ஹிந்தியைக் கற்பிக்கக் கூடாது…’’ என அண்ணாமலை ஆவேசம் காட்ட,

ஐயா, மேதகு துரைமார்களே, ஒரு உண்மையை இருதரப்புமே ஏன் பேசாமல் மறைக்கிறார்கள்! 

அது என்னவென்றால், தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான அரசு பள்ளிகளில் தமிழாசிரியர்களே நியமிக்கப்படுவதில்லை.  தாய் மொழியாம் தமிழ் இங்கு புறக்கணிக்கப்பட்டு வருவதை கேள்வி கேட்க இங்கு நாதியில்லை. 

இது மட்டுமின்றி, பல பாடங்களுக்கும் ஆசிரியர்கள் இல்லை. பல பள்ளிகளில் துப்புறவுப் பணியார்களைக் நியமிக்கக் கூட துப்பில்லாத நிலைமை உள்ளது.

இந்த அவல நிலையை மாற்றாமல், தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடங்களில் ஏழை மாணவர்களை சேர்ப்பதற்கான பல நூறு கோடி கல்வி கட்டணத்தை தூக்கிக் கொடுக்கிறது அரசு. அதில் தனியார் பள்ளிக்கு வேண்டிய நபர்கள் பிள்ளைகள் மட்டுமே பணத்தில் கொழுத்து திளைக்கும் தனியார் பள்ளிகளுக்கு ஏன் மக்கள் வரிப் பணத்தை வாரி இறைக்க வேண்டும். அந்த நிதியைக் கொண்டு அரசு பள்ளிகளின் பற்றாகுறைகளை சரி செய்யலாமே!

’இதையெல்லாம் துணிந்து செய்வதற்கு முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும்’ என்ற ஒற்றைக் கொள்கைக்கு அழுத்தம் கொடுத்து, அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைத்து வலுவாக குரல் கொடுக்க தமிழ்நாடு அரசு முன்வந்ததா என்பதே இங்கு எழுவினா?

தமிழ்நாட்டு மக்களிடம் வசூலித்த வரியின் ஒரு சிறு பகுதியைத் தான் மாநில அரசு கேட்கிறது. அதைத் தருவதற்கு நிபந்தனையாக, கொள்கை நம்பிக்கைக் கோட்பாடுகளை பள்ளிப் பாடத் திட்டங்களில் போதிக்கச் சொல்வது ஏற்புடையதல்ல’ என்று சொல்லியிருக்க வேண்டும் தமிழ்நாடு அரசு.

இதுவே பொது நீதி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...