சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதலான ஜெ.ஜெயலலிதாவின் நகைகள், மற்றும் சொத்து ஆவணம் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் காலஞ்சென்ற செல்வி ஜெ.ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகளுடன் 1,562 ஏக்கர் நில ஆவணங்களும் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பு.
சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதலான ஜெ.ஜெயலலிதாவின் நகைகள், மற்றும் சொத்து ஆவணம் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
1991-96 ஆம் ஆண்டு காலத்தில் தமிழ்நாடு முதல்வராக இருந்த செல்வி.ஜெ.ஜெயலலிதா. வருமானத்துக்கு அதிகமாக ரூபாய்.66 கோடிக்கு சொத்து குவித்ததாக அப்போது முன்னாள் சட்ட அமைச்சர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி உயர்நீதிமன்றம் முலம் அனுமதி கோரி நீதியரசர் சீனிவாசன் அனுமதி வழங்க ஆளுநருக்கு உத்தரவிட்டு அப்போது ஆளுநர் டாக்டர் சென்னா ரெட்டியால் அனுமதி வழங்கப்பட்ட வழக்கு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மூலம் வழக்கு தொடரப்பட்டது பின்னர் அதில் துணைக் கண்காணிப்பாளர் நல்லம் நாயுடு மூலம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது பின்னர் வழக்கு விசாரணை கர்நாடகா மாநிலத்துக்கு மாற்றப்பட்டது இந்த வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் 2014-ஆம் ஆண்டு நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவால் தண்டனை வழங்கப்பட்டது செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய்.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
அந்த நிலையில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறையினர் கைப்பற்றிய நகைகள், மற்றும் சொத்துகளை ஏலம் விட்டு, வழக்கை நடத்திய கர்நாடக அரசின் செலவு தொகையையும் அபராதமும் செலுத்த வேண்டும் வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார். அதை உச்சநீதிமன்றமும் உறுதிப்படுத்தியது இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்தது. இந்த நிலையில்ஜெயலலிதாவுக்கு எதிரான வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கை விசாரித்த நிறுவனமான DVAC-யின் கண்காணிப்பாளருக்கு டி.நரசிம்ம மூர்த்தி கடிதம் எழுதி, மீதமுள்ள 28 பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களையும் தாக்கல் செய்யுமாறு கோரிய மனு
டி.நரசிம்ம மூர்த்தி வழங்கிய இணைப்பின்படி, இந்தப் பொருட்களில் 700 கிலோ வெள்ளிப் பொருட்கள், 11,344 விலையுயர்ந்த புடவைகள், 44 ஏசி இயந்திரங்கள், 131 சூட்கேஸ்கள், 91 மணிக்கட்டு கடிகாரங்கள், 146 அலங்கரிக்கப்பட்ட நாற்காலிகள், 750 அலங்கரிக்கப்பட்ட செருப்புகள், 215 படிக-வெட்டு கண்ணாடிகள், 12 குளிர்சாதன பெட்டிகள் மற்றும் 1,040 வீடியோ கேசட்டுகள் ஆகியவையும் அடங்கும். பெங்களூருவைச் சேர்ந்த நபரான நரசிம்ம மூர்த்தி செல்வி ஜெ.ஜெயலலிதாவின் நகைகளை ஏலம் விட வேண் டும் என பெங்களூரு குடிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஹெச்.ஏ. மோகன், “நகைகள், புடவைகள், சொத்து ஆவணங்களை தமிழ்நாடு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். வழக்கை நடத்திய கர்நாடகா மாநிலத்தில் அரசுக்கு ரூபாய்.5 கோடியை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்” எனத் தீர்ப்பளித்தார். இந்த நிலையில், ஜெயலலிதாவின் இரண்டாம் தரப்பு வாரிசான அவரது அண்ணன் காலம்சென்ற ஜெயக்குமார் மகள் தீபா, தனது அத்தையின் சொத்துகளை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் 2025 ஜனவரி மாதம் 13-ஆம் தேதி தள்ளுபடி செய்ததையடுத்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மோகன் முன்னிலையில் ஜெயலலிதாவின் 27 கிலோ தங்க நகைகள், சொத்துகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கும் பணிகள் கடந்த 2 நாட்களாக நடைபெற்றன. தமிழ்நாடு உள்துறை இணைச் செயலாளர் ஹனி மேரி, தமிழ்நாடு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் கண்காணிப்பாளர் விமலா ஆகியோர் தலைமையிலான அலுவலர்கள் மற்றும் குழுவினர் ஆவணங்களில் உள்ளவாறு சரிபார்த்து அதைப் பெற்றுக் கொண்டனர்.
இதனை 12 பெரிய அளவிலான ட்ரங்க் பெட்டிகளிலும், 16 சூட்கேஸ்களிலும் வைத்து அலுவலர்கள் தனி வாகனத்தில் ஏற்றினர். பின்னர் 30-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய காவலர்களின் ன் பாதுகாப்புடன் சென்னைக்கு கொண்டு சென்றனர். தவிர பெங்களூரு காவல்துறை கர்நாடக எல்லை வரை நகைகளுக்கு பாதுகாப்பு வழங்கினர்.சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதலான
ஜெ.ஜெயலலிதாவின் நகைகள், மற்றும் சொத்துக்கள் ரூபாய்.59,870 மற்றும் ரூ.1,60,514 மதிப்புள்ள பழைய 1000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளும் கருவூலப் பெட்டிகளில் கொண்டு வரப்பட்டன. இந்த ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதால், இந்த ரூபாய் நோட்டுகளை மாற்றி, செல்லுபடியாகும் பணத்தை தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் ரிசர்வ் வங்கியைக் கேட்டுக் கொண்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு நிலவரப்படி ரூபாய்.10.18 கோடி மதிப்புள்ள நிலையான வைப்பு ரசீதுகளும் காவலில் வைக்கப்பட்டுள்ளன. வங்கிகள் இந்தத் தொகையை தமிழ்நாடு கருவூலத்தில் டெபாசிட் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
சென்னை, தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருவள்ளூர் , திருவாரூர், தூத்துக்குடி பகுதிகளில் 1526.16 ஏக்கர் பரப்பளவில் இருந்த ஆறு நிறுவனங்களின் பெயரிலுள்ள சொத்துக்கள் பறிமுதல் சம்பந்தப்பட்ட மக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, அதை ஏலம் விடுவதற்குப் பதிலாக பொது நோக்கங்களுக்காகப் பயன்படுத்த தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது சிறப்பு புலனாய்வுக் குழுவின் காவலிலுள்ள ஒரு சொகுசுப் பேருந்து, நீதிமன்றத்தின் உத்தரவுகளின் படி ஏலம் விடப்பட்டு, அதில் கிடைக்கும் தொகை தமிழ்நாடு அரசு கருவூலத்தில் டெபாசிட் செய்யப்படும்.
2 மற்றும் 3 ஆகிய குற்றவாளிகள் செலுத்திய ரூபாய்.20 கோடி அபராதத்தில், வழக்கை நடத்துவதற்கும் அவர்களின் சட்டச் செலவுகளை ஈடுசெய்வதற்கும் ரூபாய்.13 கோடியை கர்நாடக அரசுக்கு மாற்றுமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
கருத்துகள்